Saturday, 30 September 2017

Annadhanam





சென்னை வேளச்சேரியில் இன்று இரவு மழை பெய்தபோது தரமணி சாலையில் கூலி வேலைக்கு சென்று சாலையோரம்  சமைத்து சாப்பிடுபவர்கள் மழையால் சமைக்காமல் இருந்தனர் அவர்களுக்கு தீபம்  அறக்கட்டளையின் சார்பில் உணவு வழங்கப்பட்டது.
நாள்: 28-10-2017

Vessels & Gas Stove for Muthukulathur Dharumasalai

திருஅருட்பிரகாச வள்ளல்பெருமானின் பெருங்கருணையோடும், தயா உள்ளம் கொண்ட தங்களின் பேராதரவோடும் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை சார்பில் 19 வது தருமச்சாலையாக இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் வருகிற அக்டோபர் 1 ம்தேதி ஞாயிற்றுக்கிழமை தொடக்கம்.
ஜீவகாருண்ய செம்மல் தயவுமிகு ப்ரம்மஸ்ரீ பழனிச்சாமி அய்யா பொறுப்பில் இயங்கி வரும் தருமச்சாலையில் நித்ய பசியாற்றுவித்தல் (முதல்படியாக கஞ்சி வார்த்தல்) தொடங்க தீபம் திருவுள்ளம் கொண்டதை அடுத்து முதுகுளத்தூர் தருமச்சாலைக்கு வழங்குவதற்கு தயாராக உள்ள அடுப்பு மற்றும் பாத்திர வகைகளை படத்தில் காணலாம். இதன் மொத்த மதிப்பீடு Rs.18,298/- ஆகிறது.
உபயம் செய்ய விரும்புபவர்கள் மொத்தமாகவோ, பகுதியாகவோ வாரி வழங்கி கிடைப்பதற்கரிய இந்த மானிடப்பிறவியின் பெரும்பயனை உண்ர்ந்து ஆன்மலாபம் பெற தங்களை இருகரம் கூப்பி விண்ணப்பிக்கின்றோம்.
மேலும் 12 தருமச்சாலைகளும் தொடங்க வேண்டுமாய் பல அன்பர்கள் தீபம் அறக்கட்டளைக்கு விண்ணப்பித்து உள்ளனர் என்பதனையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.


அன்னதானம் 24.09.2017 to 29.09.2017

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் கடந்த ஒருவாரமாக (24.09.2017 to 29.09.2017) வேளச்சேரி பெரியசாமி அரசு பள்ளயில்  நாட்டு நலன் பயிற்சி முகாமுக்கு (NSS Camp) வருகை தந்த மாணவ மாணவிச் செல்வங்களுக்கு மதியம் மற்றும் இரவு நேரங்களில் அறுசுவை உணவு வழங்கப்படும் அற்புதக்காட்சி.




பொருள் வேண்டுமா ? அருள் வேண்டுமா ?.



ஆன்மநேய அன்புள்ளங்கள் அனைவருக்கும் வந்தனம்.
இந்த உலகமும் உலகில் உள்ள அனைத்தும்.பொருள்களே ! பொருள் தான் அருளை மறைத்துக் கொண்டு உள்ளது.
பொருளைப் பெற்றாலும் பொருள் மேல் பற்று வைத்தாலும், பொருளை அனுபவித்தாலும் மரணம் நிச்சயம் என்பது இறைவன் நியதி இறை சட்டம்.
பொருளை வைத்துக் கொண்டும் பொருளை அனுபவித்துக் கொண்டும் எவ்வளவு தான் இறை நம்பிக்கையுடன் தவம், தியானம், யோகம் வழிபாடு செய்தாலும் பாறைமேல் விதைத்த விதைபோலும் ஆற்றிலே கரைத்த புளிபோல் தான் வாழ்க்கை அமையும்.
அருள் பெற வேண்டுமானால் பொருளை விட்டு விலகி இடைவிடாது பொது நோக்கத்தோடு இறைவனைத் தொடர்பு கொள்ள வேண்டும் .
அப்படி இடைவிடாது இறைவனை தொடர்பு கொள்வது என்பது புறத்தில் உள்ள பொய் தெய்வங்களை அல்ல மெய்யான தெய்வத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.அந்த மெய்யான தெய்வம் எங்கே உள்ளது? 
அவரவர் சிரசிலே உள்ளது அது அகம் என்ற இடத்தின் உள்ளே உள் ஒளியாக (ஆன்மாவாக ) உள்ளது.அவற்றை இடைவிடாது தொடர்பு கொள்ளபவர்களுக்கு பொருள் மீது ஆசை என்னும் இச்சை வராது. அதைத்தான் அழுத கண்ணீர் மாறுமோ ஆகாரத்தில் இச்சை செல்லுமோ என்கிறார் வள்ளலார்.
பொருள் இச்சை உள்ளவர்களுக்கு பசி, பிணி, தாகம், இச்சை, எளிமை, கொலை, பயம் வந்து கொண்டே இருக்கும் இறுதியில் மரணம் என்னும் பிணி வந்து மெய்ப் பொருள் என்னும் ஆன்மாவானது உடம்பை விட்டு வெளியே சென்று விடும்.அதற்குப் பெயர்தான் மரணம் என்பதாகும். மரணத்தை வெல்ல வேண்டுமானால் அருள் மருந்தை பெற்று உடம்பு எல்லாம் செல்லும்படி உண்ண வேண்டும்.
அருள்தான் ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றும் ஆற்றல் உடையது.
வள்ளலார் அருளை உண்டு மரணத்தை வென்ற வழியைச் சொல்லுகின்றார்.
661. உடற்பிணி யனைத்தையு முயிர்ப்பிணி யனைத்தையு
        மடர்ப்பறத் தவிர்த்த வருட்சிவ மருந்தே
662. சித்திக்கு மூலமாஞ் சிவமருந் தெனவுளந்
        தித்திக்கு ஞானத் திருவருண் மருந்தே
663. இறந்தவ ரெல்லா மெழுந்திடப் புரியுஞ்
        சிறந்தவல் லபமுறு திருவருண் மருந்தே
664. மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு
        கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே
665. நரைதிரை மூப்பவை நண்ணா வகைதரும்
        உரைதரு பெருஞ்சீ ருடையநன் மருந்தே
666. என்றே யென்னினு மிளமையோ டிருக்க
        நன்றே தருமொரு ஞானமா மருந்தே
667. மலப்பிணி தவிர்த்தருள் வலந்தரு கின்றதோர்
        நலத்தகை யதுவென நாட்டிய மருந்தே
668. சிற்சபை நடுவே திருநடம் புரியும்
       அற்புத மருந்தெனு மானந்த மருந்தே !

சிற்சபை நடுவே திரை மறைப்பின் உள்ளே இருக்கும் அற்புத ஆனந்த அருள் மருந்தை உண்டால் மட்டுமே மரணம் என்னும் பெறும் பிணி நீங்கும்.
அருள் பெறுவதற்கு தடையாக இருப்பது தான் பொருள் என்பதை அறிவால் அறிந்து பொருளை விளக்கினால் மட்டுமே அருள் கிடைக்கும்.
பொருளை ஆதரவு இல்லாத ஏழைகளுக்கு கொடுக்க சொல்வதுதான் ஜீவகாருண்யம் என்பதாகும்.
பொருள் உலகம் முழுவதும் நிறைந்து இருப்பதால் அவற்றை விரும்பாமல் வாழ்ந்தேன் என்கிறார் வள்ளலார்.
பொருளிலே உலகம் இருப்பதா தலினால் புரிந்துநாம் ஒருவர்பால் பலகால்மருவினால் பொருளின் இச்சையால் பலகால் மருவுகின் றான்எனக் கருதிவெருவுவர் எனநான் அஞ்சிஎவ் விடத்தும் மேவிலேன் எந்தைநீ அறிவாய்ஒருவும்அப் பொருளை நினைத்தபோ தெல்லாம் உவட்டினேன் இதுவும்நீ அறிவாய்.!
பொருளை நினைத்தாலே உவட்டினேன் என்கிறார் வாந்தி வருவதுபோல் உள்ளன என்கிறார்...
நாம் எந்த நிலையில் உள்ளோம் என்பதை சுய பரிசோதனை செய்து கொண்டு அவைகளை கலைந்து வள்ளலார் சொல்லியுள்ள வண்ணம் பின்பற்றி வாழ்ந்தால் மட்டுமே அருளைப் பெறும் வாய்ப்பு உள்ளது.
நான் பொருள் மீது இச்சை இல்லாமல்.பயம் இல்லாமல்.வள்ளலார் காட்டிக்கொடுத்த சுத்த சன்மார்க்கப் பாதையில் பின்பற்றி வாழ்ந்து கொண்டு உள்ளேன்.என்பதை தயவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லோருமே என் ஆன்மநேய உறவுகள்.
சிந்திப்போம் செயல் படுவோம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன்
ஈரோடு கதிர்வேல்.
9865939896.

வள்ளலார் யார் ?





வள்ளலார் என்ற மனித உருவம் தாங்கி இவ்வுலகிற்கு வந்தவர் தான் அருட்பெருஞ்ஜோதி என்னும் அருள் ஒளியாகும்.
இந்த உண்மையை மனித குலம் அறிந்து கொள்ள வேண்டும்.
மக்களை மிருகங்களாக மாற்றியது எவை என்றால் இதுவரை இருந்த ஆன்மீக வரலாறுகள்.
மக்கள் எப்போதும் நல்லவர்கள் ஒன்றும் தெரியாத அப்பாவிகள்.
அவர்களை ஆன்மீகம் என்ற பெயரில் பஞ்சமா பாதகங்களான கள், காமம், களவு, கொலை, பொய் போன்ற தீய செயல்களைச் செய்யத் தூண்டியது தான் பொய்யான உண்மை அறியாத ஆன்மீகம்...
சாதி,சமயம்,மதம் என்ற பெயரில் பொய்யான கற்பனைக் கதைகளையும் அதில் உள்ள பொய்யான கதாப்பாத்திரங்களைத் தெய்வமாக வைத்து .உண்மையான தெய்வங்கள் என்று நம்ப வைத்து மக்களுக்கு தவறான வழிபாடு முறைகளை காட்டி அறியாதவர்களாக மாற்றி விட்டார்கள்.
உலகத்தைப் படைத்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சும்மா இருப்பாரா ? உயர்ந்த அறிவு படைத்த மனிதர்கள் உண்மை அறியாமல் பொய்யைப் பிடித்துக் கொண்டு பொய்யான வழிபாடுகளை பின்பற்றி அழிந்து கொண்டு உள்ளார்கள்.
மனித இனத்தை காப்பாற்றவே வள்ளலார் என்ற உருவம் தாங்கி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இந்த உலகத்திற்கு வந்து உள்ளார்.அவர் வந்து 195 ஆண்டுகள் ஆகின்றன.
வள்ளலார் வருவிக்க உற்ற தினமான அக்டோபர் 5&6 ஆம் நாளை கொண்டாடும் விதமாக. அகில உலக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கமானது் ISO அண்ணாதுரை அவர்களின் தீவிர முயற்ச்சியால் சன்மார்க்க அன்பர்களின் துணையோடு சென்னை கலைவாணர் அரங்கில் முதல் மாநாடு நடைபெற உள்ளது.
மாநாடு சிறப்புடன் நடைபெற எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் புரிய வேண்டி விண்ணப்பம் செய்து வேண்டுகிறேன்.
மாநாட்டிற்கு என் அறிவு சார்ந்த வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பலபேதமுற் றங்கும்இங்கும்
போருற் றிறந்துவீண் போயினார் இன்னும்வீண்போகாத படிவிரைந்தேபுனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப்பொருளினை உணர்த்திஎல்லாம்
ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீஎன்பிள்ளை ஆதலாலே இவ்வேலை புரிகஎன் றிட்டனம் மனத்தில்வேறெண்ணற்க என்றகுருவே
நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்நிறைந்திருள் அகற்றும்ஒளியேநிரள்க்குணா னந்தபர நாதாந்த வரைஓங்குநீதிநட ராஜபதியே.!....
நடராஜபதிமாலை.ஆறாம் திருமுறை...திருஅருட்பா ..

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்.
9865939796.

01.10.2017 - புதிய தருமச்சாலை திறப்புவிழா!

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர்   திருஅருட்பிரகாச வள்ளல் பெருமான் வருவிக்கவுற்ற பெருநாள் விழா,  சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் 22 ம் ஆண்டு தொடக்க விழா, விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய தருமச்சாலை திறப்புவிழா.




நாள்: 01.10.2017   (ஞாயிற்றுக்கிழமை)

நிகழ்வுகள்

அதிகாலை 4-00 மணியளவில்
திருப்பள்ளியெழுச்சி
திருவடிப்புகழ்ச்சி
அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம்

நிகழ்த்துபவர்: அருட்பெருஞ்ஜோதி அகல் விளக்கு மன்றம்
நாகப்பட்டினம்

காலை 6-30 மணிக்கு
உலகு கட்டி ஆளும் சன்மார்க்க நீதிக்கொடி உயர்த்துதல்
உயர்த்துபவர்: தயவு இராமமூர்த்தி அய்யா நாகப்பட்டினம்

காலை 7-00 மணி சிற்றுண்டி

தலைமை:
வாழும் வள்ளல். சன்மார்க்க திலகம்
தயவு: மேடா நித்தியானந்தம்

வரவேற்புரை:
ப்ரம்மஸ்ரீ பழனிச்சாமி ஐயா

காலை 7-30 மணி
தருமச்சாலையை திறந்து வைப்பவர்
தொண்டர்குலத்திலகம், பசிப்பிணி மருத்துவர், சேவை செம்மல், சென்னை வேளச்சேரி, தீபம் அறக்கட்டளை நிறுவனர்

சித்தத்துள் தித்திக்கும் சிறப்பு சொற்பொழிவுகள்

காலை 8-00 மணி
தலைப்பு: "சாகாவரமும் தனித்த பேரறிவும்"
தயவுமிகு: ஜோதி சதுரகிரியார்

காலை 9-30 மணி
தலைப்பு: "மரணமில்லா பெருவாழ்வு"
தயவுமிகு: ஈரோடு கதிர்வேலனார்


முற்பகல் 10-30 மணி
தலைப்பு: "அருந்தமிழும் அருட்பாவும்"
தயவுமிகு: கவிமாமணி கங்கை மணிமாறன்

முற்பகல் 11-30 மணி
தலைப்பு: "ஜீவகாருண்யமே உண்மை கடவுள்"
தயவுமிகு: சைவமணி சௌந்தராஜன்

மதியம் 12-45 மணி
ஜோதி வழிபாடு

மதியம் 1-00 மணி
பசியாற்றுவித்தல்

நன்றியுரை:
தயவு.பரம்மஸ்ரீ
ௐ சரவணபவன்

அனைவரும் வருக ....!
அருளமுதம் பருக....!


தொடர்புக்கு:
ப்ரம்மஸ்ரீ பழனிச்சாமி
முதுகளத்தூர்
+917373003299;
+919942177642

Saturday, 23 September 2017

தீபநெறி - மின்னிதழ் செப்டம்பர் 2017


தீபம் அறக்கட்டளை வெளியிடும் 20 பக்கங்கள் கொண்ட வள்ளலார் சன்மார்க்க ஆன்மீக மாத இதழ் 
























முந்தய மாத இதழ்களை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

தீபநெறி இதழை பெற விரும்புவோர் தங்களின் பெயர், முழு முகவரி, மற்றும் மொபைல் எண்ணுடன், 94440 73635 எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பவும். இல்லையென்றால் பின்வரும் படிவத்தை பூர்த்திசெய்து அனுப்பவும் படிவம்



Thursday, 21 September 2017

சாதி,சமயம், மதம் அற்ற சமுதாயம் வளர வேண்டும்!

சாதி,சமயம், மதம் அற்ற சமுதாயம் வளர வேண்டும்!

எதிலும் சுயநலம் இல்லாத பொது நோக்கம் வேண்டும்.

கடவுள் சுய நலம் இல்லாதவர். கருணையே வடிவமாக உள்ளவர். அவருடைய குழந்தைகளாகிய நாம் எப்படி வாழ வேண்டும். அருட் தந்தை வள்ளல்பெருமான் போல் அன்பு தயவு கருணையுடன் வாழ்ந்தால் மட்டுமே இறை அருளைப் பெற முடியம்.

உண்மைக் கடவுளை அறிந்து கொள்ளாமல் பொம்மைக் கடவுளை பிடித்துக் கொண்டு அலைவதால் எந்த பயனும் சிறிதளவும்  கிடைக்காது என்பதை மிகத் தெளிவாக வள்ளலார் பதிவு செய்துள்ளார்.

எய்வகைசார் 357 மதங்களிலே பொய்வகைச்சாத் திரங்கள்எடுத்துரைத்தே எமதுதெய்வம் எமதுதெய்வம் என்றுகைவகையே கதறுகின்றீர் தெய்வம்ஒன்றென் றறியீர்கரிபிடித்துக் கலகமிட்ட பெரியரினும் பெரியீர்ஐவகைய பூதவுடம் பழிந்திடில்என் புரிவீர்அழியுடம்பை அழியாமை ஆக்கும்வகை அறியீர்உய்வகைஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்உற்றதிவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே!

மேலும் 

தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும்சேர்கதி பலபல செப்புகின் றாரும்பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும்பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும்மெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார்மேல்விளை வறிகிலர் வீண்கழிக் கின்றார்எய்வந்த துன்பொழித் தவர்க்கறி வருள்வீர்எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.!

கடவுள் ஒருவர் தான் உள்ளார் என்றும் அவர்தான் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் என்றும்.அவரிடம் தொடர்பு கொண்டால் மட்டுமே அருளைப் பெற முடியும்...
அந்த அருளினால். சத்து சித்து ஆனந்தம் பெற்று மரணத்தை வெல்ல முடியும்

இதற்கு சன்மார்க்க பயிற்சி என்பது ஒழுக்கம் மட்டுமே.

ஒழுக்கத்தில் நான்கு வகை பயிற்சிகள் கொடுத்துள்ளார்.

  1. இந்திரிய ஒழுக்கம்.
  2. கரண ஒழுக்கம்.
  3. ஜீவ ஒழுக்கம்.
  4. ஆன்ம ஒழுக்கம்   என்னும் நான்கு  பயிற்சிகளை வள்ளலார் சொல்லி உள்ளார்.


இந்த ஒழுக்கத்தில் இரண்டு ஒழுக்கமான இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம் என்பதை முழுமையாக கடைபிடித்தால் போதும் ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் தானே விளங்கி விடும். அவை விளங்கினால் அருள் என்னும் திரவம் ஆன்மாவில் இருந்து வெளிப்படும். அருள் வெளிப்பட்டால் ஊன   உடம்பு ஒளி உடம்பாக மாற்றம் அடையும்.

இவைதான் வள்ளலார் சொல்லி உள்ள சுத்த சன்மார்க்கம் பாதையாகும்.இந்த ஒழுக்கத்திற்கு தடையாக இருப்பதுதான் சாதி, சமய, மதங்களின் மேல் வைத்துள்ள பற்றுகளாகும்.இவைகள் இன்று நேற்று அல்ல பல்லாயிரம் ஆண்டுகளாக நம் ஆனமாவை பற்றிக் கொண்டு உள்ளன என்கிறார் வள்ளலார்.

வள்ளலார் பாடல் !

சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலேசாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலேஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவேநீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்தநிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமேவீதியிலே அருட்சோதி விளையாடல் புரியமேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே.!

சாதி சமய மதங்களின் பற்றை விட்டு வாருங்கள் இறைவனிடம் அருளைப் பெற்று மரணத்தை வெல்லலாம் என உலக மக்களை அழைக்கின்றார் வள்ளலார்.

உயர்களின் மேல் உண்மை அன்பு,உண்மை தயவு,உண்மை இரக்கம், உண்மையான கருணை மட்டுமே இருந்தால் போதும் என்கிறார் வள்ளலார். இதற்கு தடையாக இருப்பது சாதி சமயம், மதம் என்பதை விளக்கமாக விளக்குகின்றார்

இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள் மதங்கள் மார்க்கங்கள் என்பவற்றின் ஆச்சார சங்கற்ப விகற்பங்களும்.வருணம் ஆசிரம்ம் முதலிய சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனதில் பற்றா வண்ணம் அருள் செய்தல் வேண்டும்.

சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷ்யமாகிய ஆன்ம நேய ஒருமைப்பாட்டு எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்வித்த்தும் எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்து அருளல் வேண்டும்.

எல்லாமாகிய தனிப்பெரும் தலைமை அருட்பெரும்ஜோதி ஆண்டவரே! தேவரீர் திருவருட் பெருங் கருணைக்கு வந்தனம்! வந்தனம்! 

என்று தினமும் சொல்லிக் கொண்டு உள்ளோம்.அதில் உள்ள சத்திய பொருளை உணர்ந்து சாதி சமய மதங்களை விட்டு உள்ளோமா  என்பதை சிந்திக்க வேண்டும்.அவைகளை விடாமல் இருக்கின்ற வரை எந்தவித ஆன்ம லாபமும் கிடைக்க வாய்ப்பே இல்லை.

விடாமல் வைத்து இருந்தவர்கள் எந்தவித லாபத்தையும் பெறவில்லை அடையவில்லை என்று வள்ளல்பெருமான் தெளிவாக விளங்க வைத்துள்ளார் .

நான் எல்லாவகை பற்றுகளையும் விட்டு விட்டேன். என்னைப்போல் நிங்களும் விட்டுவிட்டீர்களானால் என்னைப் போன்ற பெரிய லாபத்தை அடையலாம் என்பதை தெளிவாக விளக்கமாக  சொல்லி உள்ளார்.

நாம் இதுவரை இருந்த்துபோல் இனியும் வீண்காலம் கழிக்காமல் நான் சொல்வதை கேளுங்கள் என்கிறார்.இது அருட்பெரும்ஜோதி ஆண்டவர் கட்டளை என்கிறார்.

எனவே நாம் இனிமேலாவது ஆண்டவர் கட்டளையை மீறாமல் செயல்படுவோம்.

மரணம் பிணி மூப்பு பயம் துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் தவிர்த்து இத்தேகத்தையே நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்தி பெருவாழ்வில் வாழ்வோம்.

ஆன்ம லாபத்தைப் பெற்று மரணத்தை வெல்லுவோம்.

அன்புடன் 

ஆன்மநேயன் 
ஈரோடு கதிர்வேல்
9865939896.

Wednesday, 20 September 2017

An Open Letter


An Open Letter
“Oh, Vast Great Light Your Compassion is Uncomparable !
******
We all know that the entire mass including animals, birds on the earth live with many a discomforts. The reason may be many and a few are like : hunger, poverty, ignorance, famine, flood, calamity, rulers fancy, war, murder, loot, arson, cheat, addiction, deforesting, exploiting the natural resources beyond limit or need, polluting the earth, water, air, etc. Space is fully occupied by missiles,nuclear weapons and so on. Seldom common man knows what is going to be tomorrow!
But are these the prime reasons for making the people to worry?

“No, No” says a “GREAT SAINT RAMALINGAM”, well known as “VALLALAR”! 

Then what is the reason?

The RELIGIONS and its BIFURCATION of people are the prime reason!

Who is SAINT RAMALINGAM? Born on 05.10.1823 for humble parents, near Chidambaram, about 250 kms from Chennai (Madras), the southernmost part of Indian Sub-continent. The then existing status or circumstances of the subject was this: Hinduism – an amalgamation of six major sub-divisions like Saivism, Vaishnavism, Saktham, Ganapathyam, Kowmaram and Souram.

In Saivism 12 principal bifurcations are there in which six were acceptable namely Bairavam, Vamam, Kalmugam, Mavratham, Pasupadham, Saivam. The next unacceptable are Ulagayadham, Buddhism, Jainism, Mimamsam, Pancharathram, Battcharyam.
From this twelve and others brewed were Kabalam, Southrandharam, Yogacharanam, Athmigam, Vaipadigam, Nigandavadham, Nayyaigam, Vaiseshigam, Padhanjaliyam, Sangiyam, Siddhantham, Vedhantham, etc.
In Vaishnavism six systems were known as Yadhavam, Mayavadham, Hiranyagarpam, Ramanujeeyam, Baskaram, Thathvavadham.
Almost all of these have varna the 4 principal castes as per “Choolamani Nikandu” an authentic book on the subject.
VARNA:
1) Brahman – reputed, entitled to do rituals in temples etc.
2) Kshatriya – the Royal or Military caste
3) Vaisya – the mercantile – Traders caste
4) Sudra – embracing agriculture, artificers.
Still inferior casts termed as Sangara (the mixed castes) and its sub-divisions are innumerable!
The Varna (skin colour) – Globally also playing vital role are known as
Cacasoids – white / wheatish skinned.
Mangolids – yellow skinned
Negroids – black skinned.
ACHRAMA:
Hermitage the Religions conditions prescribed for all 4 degrees (in VARNA) or orders as
(1) Bachelor
(2) Householder
(3) The state of a recluse who with or without his wife relinquish domestic life and live with leaves, fruits, roots and continue to perform his daily rites
(4) Sanyasa, a religious mendicant who performs no Rites whatsoever and lives on ALMS (Yachagam – begging)
(Ref.: Ellis Wills page 124 – ACHRAMA as per Winslow’s Tamil – dictionary published in 1865).
ACHARA:
The rule of a caste, performance of prescribed rites.
SANGALPA:
Obeying the rule (a mere mental belief resulting from a Fanciful combination of ideas)
VIGALPA:
Confusion of mind
Note: Hinduism, Buddhism, Jainism – originated from India.
          Islam, Christianity – from other countries.
In all religions – Divisions and Rules numbering in hundreds.
Can these Religions and its bifurcations cause such a damage to the society?
“Yes, Yes” Says Saint Ramalingam (VALLALAR). Especially the principal castes keeps each man away in the society and even untouchability exist (a double glass system even in tea shops). Such bifurcations blasting off majority of peoples mind. This is not the will and wish of Almighty. His creation if you take:
The legs- runs hither and thither, toils and fetch, food, clothes building house for all communities (sudra part in the body – let us assume – embracing agriculture).
The stomach- through the mouth eats (procures the food) and converts it as blood and distribute it to the whole body (mercantile part of body).
The Arms- and shoulders help to hang the bow and arrow in those days and now the rifles (Royal – military part of body) – the word Army is derived from the word arm) to defend the body or his country.
The part above neck identifies food is here, enemy is there, chooses the teacher, converse etc. (Brahman).

If all these four activities fights with the body, the life cannot exist in that body. The blood flowing in the leg right now will flow to the head, in the next few minutes is what Almighty’s creation and we humans failed to adapt this concept in our society, instead he differentiated the activity based castes and causing the problems !

Each Religions, sub-divisions, created their own circles, professors, teachers, guides, seers, mutts and they started governing / ruling that circle. They teach them that “this is your property (land / temple / worshipping place / rites) and now others also availing it. So better you lock the horn with them and get rid of them and snatch it”. From the day the Religions and sub-divisions created, with the help of rulers, kings, mighty men the other religion or caste people were killed in thousands / lakhs (but these were not for food or poverty – just they wer other religion followers). Even seven decades ago Adolf Hitler killed how many lakhs of Jews? Why? They are following different Religion. During that period in Japan Hiroshima and Nagasaki was bombarded by America and killed how many lakhs of people? Why? They are of different Varna (the skin colour).

All Religions do started with a chant base of kindness / benevolence / brotherhood; but the agents came thereafter in so many names and forms caused huge damage to human society, and destroyed lakhs of people.

To find a way out, after world war – II, on 24.10.1945-United Nations Organisation (UNO) was formed. It was headed by all 3 skin coloured people and continue till date. But as on date Israel & Palestine, Iran & Iraq, Syria & America(which lost over 3 lakh innocent people so far), India & Pakistan, Pakistan & Afghanistan, North Korea & South Korea and a dozen such declared or undeclared wars are going on. What for? Poverty?  Food? Cloth? Money? No No! Only Religion & Sub-Divisions are the reason.

What UNO could do? It’s power is much limited. It is not able to control or stop or create crisis through other countries to pressurise them and bring an end to the war. UNO is worried about it. It is concerned about it; but UNO knows it’s height, that is, its power is limited and hence watching helplessly. It joins hands with UNESCO, WHO, CRY like voluntary organistions and try to keep small small section of people happy, declaring one of the calendar days in a year as Valentines Day, Friends Day, Father’s Day, Anti-Tabaco Day, Senior Citizens Day and so on... Could it make any dent, the purpose for which UNO is created for?

Let the whole world join hands together & help UNO to achieve its main goal of ensuing WORLD PEACE. That is why all countries should give hand to hand with a smile instead of looking face to face and shooting missile.

Where is the strategy? a Great Man Born in India on 5.10,.1928 by name Saint Ramalingam. His works will work as strategy which is unnoticed so far.  He attained Deathlessness and an Englishman the then District Collector of South Arcot, and ICS Cadre, visited the spot and released a gazette notification in 1878, saying Saint Ramalingam’s claim of Deathlessness proved in the small at Mettukuppam, near Chidambaram, Cuddallore Dist in Tamilnadu.

Saint Ramalingam wrote many poems out of which 5818 are available known as THIRU ARUTPA. It talks about all subjects like, science, social reform, route to deathlessness and so on. One simple APPEAL he made to Almighty is not for food, weapon, boon, power, wealth or heaven which reads thus!

APPEAL
(by Saint Ramalingam)
“Oh Magnificent Vast Great Light” !

From now on, for ever, the main hurdles of pure SANMARGA namely Religions ( persuasion of those systems, routes, fanatics) Achara (the rules of castes, performance of prescribed rites)       Sangalpa (obeying the rules, a mere mental belief resulting from a fanciful combination of ideas) Vigalpa, (the four principles of castes) Acharama (hermitage, the condition prescribed for all above 4 degrees or orders and routine worldly bond on mental belief and performing rituals) should not embrace our mind what we request you to grant Gracefully. The strenuous perseverance of pure SANMARGA is the esteem establishment of “UNIVERSAL BROTHERHOOD AND COMPASSION” among us, forever, everywhere, in every manner and how little so ever not to set aside but fully to be illustrated and Graced,
You the whole, unique, great crusader, oh Supreme Vast Great Light, Your Lordship’s Clemency we Adore! Adore!

What is Sanmarga?
To transcend all Religions – as the supreme being! Sanmarga – Sath-Marga – is a route for turning the body to immortal status, which is founded by Truth, reality, virtue, and morality. Any Religion’s Ultimate is just boarding into Heaven whereas Sanmarga is surpassing the heaven practically and the soul gets embodied in all atoms. When paddy crops were facing dryness Saint Ramalingam’s face and body desiccated. Sanmarga strongly advocates “Jeeva Karunya – Benevolent to all livings which will show the Real God, who is one, only one, in the form of LIGHT. Humans can attain ‘DEATHLESSNESS”, if one is benevolent towards all livings (If one has melting mind as of a mother at the sight of her child in distress) Never Hurt any Living Beings. Not to HEED Religions and its Allies, sacrificing animals are not accepted; flesh eating is not accepted; Benevolence is the key to open the heaven, enter merrily and even surpass it. Possessing good manners, modesty discipline, morality are all activities towards Godliness!
So we plead UNO, the Governing Authorities sitting in power in all states and countries to declare ‘UNIVERSAL BROTHERHOOD AND COMPASSION DAY” ,propagate it, which will do the miracle and unite the people to together, countries together breaking all barriers, divisions among them.
The ideal Calendar Day is 5th October, since Saint Ramalingam born on that day and he is the  “only man attained deathlessness” in the world and hence without a demise date as certified by an ICS cadre District Collector, an English Man in 1878 AD.

Let all Human Hail and Practice “UNIVERSAL BROTHERHOOD AND COMPASSION DAY”.
Oh Vast Great Light
Your Compassion is Uncomparable !

----------------------------------------------------------------------------------------------------
Password of Sanmarga:
Benevolence, Equality, Absolutely Pure Body, Mind, Truth, High Morality
----------------------------------------------------------------------------------------------------


Compiled by:
Mr. K N Umapathy
K K Nagar
95518 49757

What is Sanmarga ?


What is Sanmarga ?

To transcend all Regligions – as the supreme being! Sanmarga – Sath-Marga – is a route for turning the body to immortal status, which is founded by Truth, reality, virtue, and morality. Any Religion’s Ultimate is just boarding into Heaven whereas Sanmarga is surpassing the heaven practically and the soul gets embodied in all atoms. When paddy crops were facing dryness Saint Ramalingam’s face and body desiccated. Sanmarga strongly advocates “Jeeva Karunya – Benevolent to all livings which will show the Real God, who is one, only one, in the form of LIGHT. Humans can attain ‘DEATHLESSNESS”, if one is benevolent towards all livings (If one has melting mind as of a mother at the sight of her child in distress) Never Hurt any Living Beings. Not to HEED Religions and its Allies, sacrificing animals are not accepted; flesh eating is not accepted; Benevolence is the key to open the heaven, enter merrily and even surpass it. Possessing good manners, modesty discipline, morality are all activities towards Godliness!

So we plead UNO, the Governing Authorities sitting in power in all states and countries to declare ‘UNIVERSAL BROTHERHOOD AND COMPASSION DAY” ,propagate it, which will do the miracle and unite the people to together, countries together breaking all barriers, divisions among them.

The ideal Calendar Day is 5th October, since Saint Ramalingam born on that day and he is the  “only man attained deathlessness” in the world and hence without a demise date as certified by an ICS cadre District Collector, an English Man in 1878 AD.

Let all Human Hail and Practice “UNIVERSAL BROTHERHOOD AND COMPASSION DAY”.
Oh Vast Great Light
Your Compassion is Uncomparable !
-----------------------------------------------------------------------------------------------------------Password of Sanmarga:
Benevolence, Equality, Absolutely Pure Body, Mind, Truth, High Morality
-----------------------------------------------------------------------------------------------------------

Mr K N Umapathy
K K Nagar

95518 49757

எது தானம் ? எது தர்மம் ?

www.deepamtrust.org

மகாபாரதத்தில்
உடலைப் பிரிந்த கர்ணனின் உயிரானது தன் தந்தை சூரிய தேவனுடன் பரம்பொருள் ஈசனை வணங்கி மகிழ்ந்து சுவர்க்க பேறு பெற்றது.

சூரிய தேவனுக்கோ மனதில் மிகப் பெரிய ஐயம் கலந்த வேதனை.
எவரிடம் கேட்பது.? எவர் தெளிவாகக் கூறுவார்கள்
குழப்பத்திலும் கோபத்திலும் சூரியனின் வெம்மை அதிகரித்தது.

இதை உணர்ந்த ஈசன், அவர் முன் எழுந்தருளினார்.

சூரியனே,என்ன தடுமாற்றம் உன் மனதில்கேட்டது ஈசன்.

பரம்பொருளே...

பலவிதமான தான தருமங்கள் செய்து புண்ணியங்களை சேர்த்து வைத்த என் மகன் கர்ணனை போரில் கொன்றது விதி என்று ஏற்றுக் கொண்டேன்.
ஆனால்,எல்லா புண்ணியங்களையும் கிருஷ்ணருக்கு தானமாகத் தந்தபடியால் அவன் இன்னும் மிகப் பெரிய புண்ணியவான் ஆகிவிடுகிறானே
பிறகு எப்படி அவனுக்கு மரணம் ஏற்பட்டது?

இது அநீதி அல்லவா? என கேட்டார் சூரியத் தேவன்.
இறை சிரித்தது.

சூரியனே...
நிறைய மனிதர்களுக்குள் ஏற்படும் சலனமே உன்னை இந்தக் கேள்வியை எழுப்ப வைத்ததுள்ளது, சொல்கிறேன் கேள்...

தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ, அடுத்தவர் அவர் நிலை கூறி அறிந்தபின்னோ தருவதுஇதுதான் தானம்
புண்ணியக் கணக்கில் சேராது, ஏனெனில்.. இல்லாதவர் மற்றும் இயலாதவர் கேட்டபின் கொடையளிப்பது ஒரு மன்னனின் கடமை.
ஒவ்வொரு மனிதனின் கடமையும் கூட....

ஆனால்தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது. இதுதான் புண்ணியம் தரும். பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் ஏதாவது தருவது தானம். அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம்.

கர்ணன் தர்மங்கள் செய்து புண்ணியங்களை ஈட்டியவன்தான்ஆனால், மொத்த புண்ணியத்தையும் கிருஷ்ணர் தானமாகக் கேட்டுத்தான் வாங்கினாரே தவிர  தர்மமாகப் பெறவில்லை.எல்லா புண்ணியங்களையும் தானமாகத் தாரை வார்த்து தந்த பிறகு கர்ணனும் ஒரு சாதாரண மனிதனானான்.அதனாலேயே மரணம் அவனை எளிதாய் நெருங்கியது. புரிந்ததா ?

கேட்ட ஈசனை வணங்கிய சூரியத் தேவன்.
புரிந்தது இறைவா !
தானமும் தர்மமும்
பாவமும் புண்ணியமும்
எல்லாமும் நீயே
என்பதும் புரிந்தது என்றார்.

கேட்டு கொடுப்பது தானம் !
கேட்காமல் அளிப்பது தர்மம் !

ஓம் நமசிவாய
திருச்சிற்றம்பலம்.

படித்ததில் பிடித்தது.
நட்புடன் உங்கள் நண்பன்

அன்புடன் 

ஆன்ம நேயன் 
ஈரோடு கதிர்வேல்.
9865939896.


ஏழை மாணவ மாணவிகளுக்கு 15ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு, கடந்த 27 ஆண்டுகளாக தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது, தொடர் சமுதாயப்...