Wednesday, 22 May 2019

ஆழ்குழாய் நீரின் மூலம் சிறுவளையம் கிராம மக்கள் தாகம் தணிப்பு.




யாதும் ஊரே யாவரும் கேளிர்

இந்த ஆண்டு கடுமையான கோடை வெய்யிலினால்   மழை பொய்த்து விட்டதால் கடும் வறட்சியின் காரணமாக தமிழக மக்கள் தண்ணீர் இன்றி  துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம், பனப்பாக்கம் அருகில் சிறுவளையம் கிராமத்தில் மக்கள் தண்ணீர் இன்றி மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
குளங்களும் கிணறுகளும் வறண்டுவிட்டன. கிராமத்திற்கு தண்ணீர் சப்ளை செய்யக்கூடிய ஆழ்துளை கிணறும் வறண்டு விட்டது. தீபத்தின் உதவி வேண்டி விண்ணப்பித்திருந்தார்கள்.
கிராம மக்களின் துயர் துடைக்க, உடனடியாக ஆழ்துளை கிணறு அமைத்து 48 மணி நேரத்தில் நீர் வழங்க சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது  முடிவு செய்தது. ஆடிட்டர் ஒப்புதல் பெற்று உடனடியாக களத்தில் இறங்கியது.

போர்கால அடிப்படையில், காஞ்சிபுரத்திலிருந்து போர்வெல் வண்டி வரவழைக்கப்பட்டு 185 அடி போர் துளையிடப்பட்டது. அற்புதமான நீர் வர தொடங்கியது. இதோ அந்த கண்கொள்ளா காட்சி.

இந்த அற்புதமான
சமூகப் பணியை,
சமுதாயப் பணியை, ஜீவகாருண்ய பணியை,
உயிர் நேயப் பணியை,
மக்கள் நல பணியை,
கிராம மக்களின் சேவையை,
 உடனடியாக செய்ய வைத்து உடனடி உயிர் உபகாரம் செய்த இறைவனை வணங்கி மகிழ்கிறோம்.

வாழ்க வாழ்க எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!!

வாழ்க வாழ்க வள்ளல் மலரடி வாழ்க!!!

The cost of the project is:
Rs.31,355.90.

Sponsors for this project partly or fully are welcome.

 Please contact தீபம் for more details, 9444073635

 ஒவ்வொரு ஆண்டும் பருவமழை பொய்த்துவரும் நேரங்களில் நாமனைவரும் ஒன்றுபட்டு நீராதாரம் பெருகவேண்டிய முயற்சியில் ஈடுபட்டு நீரை சிக்கனமான முறையில்  கையாண்டு எதிர்கால சந்ததியினருக்கு வழிவகை செய்ய உறுதியேற்போம்.


என்றென்றும் ஆன்மநேய அறப்பணியில்
 நிறுவனர்
தீபம் அறக்கட்டளை
 வேளச்சேரி, சென்னை-42
இது ஒரு அரசு பதிவு பெற்ற 80-G வரி விலக்கு அளிக்கப்பட்ட சமுதாய தொண்டு நிறுவனம்
www.deepamtrust.org

Friday, 17 May 2019

இன்று மாத பூசம் - 10/05/2019

தீபம் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும்,
தீபத்தின் உண்மை தொண்டர்களுக்கும்,
தீபத்தின் நன்கொடையாளர்களுக்கும், பூச நன்னாள் வாழ்த்துக்கள்!!!

பூசம் என்பது அறிவை ஞானமாக மாற்றக்கூடிய நாள். ஒவ்வொரு மாதமும் பூச நன்னாளில் தீபம் அறக்கட்டளை வள்ளலார் துவக்கிய வடலூர் சத்திய தருமச்சாலையில் அன்னதான பணிகளுக்கு தொடர்ந்து 68 மாதங்களாக தொண்டு செய்வது மட்டுமல்லாமல் பல்லாயிரக்கணக்கான சன்மார்க்கிகள் பசியாற கூடிய வாழை இலைக்கு தீபம் மாதந்தோறும் ₹5000 பொற்காசுகள் கொடுத்து வாழை இலை உபயம் செய்து கொண்டிருக்கிறது.

மேலும் வடலூர் சத்திய தருமச்சாலைக்கு வரக்கூடிய சன்மார்க்கிகளுக்கு பிரசாதமாக மூக்கு கடலை ஒரு மூட்டை கொடுத்து  தீபம் அறக்கட்டளை வடலூர் தர்மசாலை மூலம் கொடுத்துக்கொண்டிருக்கிறது. இதற்கு 4 ஆயிரம் பொற்காசுகள் மாதந்தோறும் செலவு ஆகிறது.

மேற்கண்ட இந்த இரண்டு பொருட்களுக்கும் உபயம் அளிக்க விரும்புபவர்கள் மாதந்தோறும் பூச நாளிலோ அல்லது பூசத்திற்கு முன்பாகவும் நன்கொடையாக வங்கிப் பரிமாற்றம் செய்யலாம் அல்லது காசோலை அடைக்கலாம்.

தர்மம் செய்ய விரும்பு பவர்கள் மேலும் விவரங்களுக்கு தீபம் அறக் கட்டளையை தொடர்பு கொள்ளவும்.

பூசம் வாழ்த்துக்களுடன்...

 நிறுவனர்
தீபம் அறக் கட்டளை
சென்னை வேளச்சேரி
9444073635

அன்னதானத்திற்கு அரிசி உபயம் செய்த அருளாளர்களுக்கு நன்றி நன்றி நன்றி !!!

நாளை திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கும்,  பக்த கோடிகளுக்கும், தீபம் அறக்கட்டளையின் சார்பாக ஆயிரக்கணக்கானவர்களுக்கு அன்னப் பிரசாதம் வழங்கப்படுகிறது.

 அன்னதானத்திற்கு 100 kg அரிசி உபயம் செய்த கீழ்கண்ட அருளாளர்களை தீபம் வாழ்த்தி மகிழ்கிறது.

*தயவு சுப்பையா அவர்கள் *தயவு டிவி ரமேஷ் அவர்கள் *தயவு அயன் ரமேஷ் அவர்கள்
*தயவு சரோஜ்குமார் ஐயா அவர்கள்

வாழ்க தங்கள் தர்ம குணம்!!! வாழ்க தங்கள் அன்பு குடும்பம்!!!
வாழ்க தங்கள் சந்ததிகள் !!! நீடூழி வாழ்க நீடூழி வாழ்க நீடூழி வாழ்க !!!

அன்னதானத்திற்கு காய்கறி உபயம் செய்ய விரும்புபவர்கள் (Rs.4000) தீபத்தை தொடர்பு கொள்ளலாம்.

நிறுவனர்
தீபம் அறக்கட்டளை

தீபம் அறக்கட்டளையின் நடமாடும் அன்ன தர்மசாலை




சென்னை வேளச்சேரி நித்திய தீப தருமச்சாலையின் மூலம் தினமும் நடைபெறுகின்ற நடமாடும் அன்ன தருமச்சாலையின் மூலம் பசியாற்றுவித்தல்.

*பசி தீர்ப்பது பரம புண்ணியம் *உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
*அன்னதானமே ஆருயிர்மருந்து
*அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பொருள் பெற்றான் வைப்புழி *அன்னதானமே மகாதானம்

அன்னதானம், பசியாற்றுவித்தல் - தெய்வீக செயல்.

தர்மம் தலையை மட்டும் காப்பாற்றாது. தலைமுறையையே காப்பாற்றும்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை கடந்த 22 ஆண்டுகளாக ... (பதிவு செய்யப்பட்டு 12 ஆண்டுகளாக...) 20 தர்மசாலைகள் மூலம் தினமும் ஆயிரக்கணக்கானவர்களுடைய பசிப்பிணியை போக்கிக் கொண்டிருக்கிறது.

இந்த அற்புதமான
தர்ம பணியில்,
அன்னதர்ம்ப் பணியில்,
அறப்பணியில்,
இறைபணியில்,
தாங்களும் தங்கள் அன்பு குடும்பமும்,
பிறந்தநாளை முன்னிட்டு, திருமண நாளை முன்னிட்டு, மற்றும் விசேஷ நாட்களை முன்னிட்டு,
காரண காரணம் இன்றியும், பசித்தவர்களுக்கு தாங்கள் விரும்பும் நாளில் அன்னமளித்து ஆனந்தமடைய,
ஆன்ம லாபம் பெற,
ஆண்டவனுடைய அருள் பெற, தீபம் அன்போடு அழைத்து மகிழ்கிறது.

தர்மம் செய்ய விரும்புபவர்கள், தீபம் அறக்கட்டளையை தொடர்பு கொள்ளவும்.

 வாழ்த்துக்களுடன் ...

தர்மம் செய்வோம் !!!
தயவுடன் வாழ்வோம் !!!

நிறுவனர்
தீபம் அறக்கட்டளை

சென்னை வேளச்சேரி திரௌபதி அம்மன் கோவிலின் தீமிதி திருவிழா - 12 /05/2019








நேற்று 12 5 2019,
சென்னை வேளச்சேரி திரௌபதி அம்மன் கோவிலின் தீமிதி திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தகோடிகளுக்கு அன்னம் பாலித்த அருட்காட்சி ...

நிதி தந்து, பொருள் தந்து, அற்புதமான தொண்டு செய்த 16 தீபம் சேவடிகளை, தொண்டு உள்ளங்களை, மனித தெய்வங்களை, காலை முதல் இரவு 11.30 வரை அயராமல் பாடுபட்ட தீபத்தின் தூண்களை, தீபம் அறக்கட்டளை பாராட்டி மகிழ்கிறது.

வாழ்க தர்மம் !!!
வளர்க தர்மம் !!!

தர்மம் செய்வோம் !!!
தயவுடன் வாழ்வோம் !!!

திருச்சிற்றம்பலம்

நிறுவனர்
தீபம் அறக்கட்டளை

உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறெலாம் விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க ! உத்தமனாகுக !! ஓங்குக !!!

தீபம் அறக் கட்டளையின் தினசரி (இன்றைய)  தியானம்:

*தினமும் காலையில் அருட் கஞ்சி( மூலிகை கஞ்சி) தயாரித்து 20 தர்ம சாலைகள் மூலம் ஆயிரக்கணக்கானவர்களுக்கு பசியாற்றுவித்தல்.

*12 மணி அளவில் குளிர்ந்த நீர் மோர் தயாரித்து தண்டீஸ்வரம் ஆர்ச் அருகில் கோடைக்கால தாகம் தணிக்க தினமும் நீர்மோர் தருதல்.

* மதியம் 12.30 மணி அளவில் நடமாடும் தர்மசாலை மூலம் கங்கை அம்மன் திருக்கோவிலில் அரசமரத்தடியில் அன்னம் தருதல்.

* சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மதியம் நூற்றுக்கணக்கானவர்களுக்கு வயிறார அன்னம் பாலித்தல்.

* நூற்றுக்கணக்கான சமர்பணம் இல்ல  மாற்றுத்திறனாளிகளுக்கு அன்னம்பாலித்தல்

* மாலை 6 மணியளவில் அந்தி கடை சார்பாக தினமும் அன்னமிடல்.

தீபத்தின் மற்ற சமுதாய திருப்பணிகள்:

a) வருடந்தோறும் வசதியற்ற ஏழை எளிய  மாணவர்களின் மேற்படிப்புக்கு உதவுதல்.

 b)மாதந்தோறும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி செய்தல்

c) ஏழை நோயாளிகளின் டயாலிசிஸ் மருத்துவ சிகிச்சைக்கு நிதியளித்தல்

d) ஒவ்வொரு மாதமும் பூச நாளிலே  வடலூர் சத்திய தருமச்சாலையில் அன்னதான தொண்டு செய்தல்

e) ஒவ்வொரு வியாழனன்றும் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வாராந்திர வழிபாடு மற்றும் அன்னப் பிரசாதம் வழங்குதல்

f) மாதந்தோறும் முதல் சனிக்கிழமை மாலையில் சான்றோர்களின் ஆன்மீக சொற்பொழிவுகளை  நடத்துதல்

g) ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை இலவச மருத்துவ முகாம்கள் நடத்துதல்.

தொடர்ந்து நடைபெறும் இந்த அன்னதான அருட்பணியில், திருப்பணியில், சமுதாயப் பணியில்  அன்பு உள்ளங்கள் கலந்துகொண்டு, நிதியாகவோ, பொருளாகவோ,
உடல் உழைப்பாக தொண்டு செய்து ஆன்ம லாபத்தை பாகம் செய்து கொள்ளுமாறு தீபம் அன்போடு அழைக்கிறது.

Donations are Welcome !!!
Volunteers are Welcome !!!

தொண்டு செய்வோம் !
நீண்டு வாழ்வோம்!

வாழ்க தர்மம்
வளர்க தர்மம் !!!

தர்மம் செய்வோம்
தயவுடன் வாழ்வோம்!!!

திருச்சிற்றம்பலம்

நிறுவனர்
தீபம் அறக் கட்டளை
-  இது ஓர் அரசு பதிவு பெற்ற  80G வரிவிலக்கு அளிக்கப்பட்ட அற தொண்டு நிறுவனம்

தீபநெறி 2019 - மே மாத மின்னிதழ்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் கட்டணமில்லா தீபநெறி சன்மார்க்க தமிழ் மாத இதழை கடந்த 9 ஆண்டுகளாக தீபத்தின் நன்கொடையாளர்களுக்கும், சன்மார்க்கிகளுக்கும், நலம் விரும்பிகளுக்கும், ஒவ்வொரு மாதமும் 27ஆம் தேதியன்று தபாலில் அனுப்புகிறோம்.


இதழ் (printed hard copy) விரும்புவோர் பெயர், கைபேசி எண் & முழு முகவரியை 94440 73635 /  044-22442515 என்ற எண்ணிற்கு மேற்கூறிய தகவல்களை வாட்ஸ் ஆப் மூலம் அனுபினால் இலவசமாக அனுப்ப தயாராக உள்ளோம்.






















அரசு பதிவு பெற்ற நிறுவனமா?
ஆம், தீபம் அறக்கட்டளை அரசு பதிவு பெற்ற சமுதாய தொண்டு நிறுவனம். அரசு பதிவு எண் - 2035/07

தீபம் அறக்கட்டளையின் நோக்கம் என்ன?
Please visit http://deepamtrust.org/profile/

எவ்வாறு நன்கொடை அளிப்பது?
அலுவலகத்திலும், நித்ய தீப தருமசாலையிலும் நேரில் வந்து நன்கொடை அளிக்கலாம். அன்னதானத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்களும் வழங்கலாம்.

நேரில் வரமுடியாதவர்கள் அலுவலக முகவரிக்கு Deepam Trust என்ற பெயரில் காசோலை(Cheque) / வரைவோலை(DD)  அனுப்பலாம்.

தீபம் அறக்கட்டளை வங்கி கணக்கிற்கு நேரடியாக பண பரிமாற்றம் செய்யலாம்.

எவ்வளவு தொகை நன்கொடை அளிக்கலாம்?
ஒருநாள் அன்னதானத்திற்கு ஆகும் செலவு இந்த பக்கத்தில்( http://deepamtrust.org/donate-now/) குறிப்பிடப்பட்டுள்ளது, மற்ற இதர சமூக பணிகளான கல்வி உதவி, மருத்துவ உதவி, அரிசி உதவி, ஆடைகள் உதவி, வாழ்வாதார உதவி, etc… போன்றவைகளுக்கு தங்கள் சக்திக்கேற்ப, விருப்பத்திற்கேற்ப நன்கொடை தந்து மகிழலாம்!

நன்கொடைகளுக்கு ரசீது வழங்கப்படுமா?
வழங்கப்படும். 5 வேலை நாட்களுக்குள் தங்களுடைய முகவரிக்கு அஞ்சல் மூலம் ரசீது அனுப்பி வைக்கப்படும். ரசீது பெற வில்லை என்றால் 94440 73635 / 044-2244 2515 என்ற எண்ணை தொடர்புகொள்ளவும்.

வருமான வரிவிலக்கு பெறலாமா?
1961 வருமான வரி சட்டம் 80G ன் படி வருமான வரிவிலக்கு பெற்ற தொண்டு நிறுவனம்.

வெளி நாடுகளில் இருந்து நன்கொடை அளிக்கலாமா?
வெளிநாட்டு பணமதிப்பில் நன்கொடையளிக்க முடியாது. ஆனால் இந்தியா பண மதிப்பில் வங்கி பரிமாற்றம் செய்யலாம்.

தங்களுடைய சேவைகளை எவ்வாறு தெரிந்து கொள்வது?
மாதந்தோறும் தீபநெறி என்ற மாதஇதழ் வெளியிடப்படுகிறது, அதன் மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும் இணையதளம், சமூக ஊடகம், மற்றும் குறுந்தகவல் மூலம் சேவைகள் பகிரப்படுகிறது.

வள்ளலார் வரலாறு கேள்வி ஞானப் போட்டி

🌺✨ வள்ளலார் வரலாறு கேள்வி ஞானப் போட்டி ✨🌺 📚 A Group – 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை 📚 B Group – 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு ...