Friday, 10 May 2019

100 ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை

திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன், சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை யின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் படிப்பில் நன்றாக தேர்ச்சி பெற்று மேல்படிப்பு தொடர முடியாத (Diploma, Degree, Engineering, Medical) 100 கிராமப்புற ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள்.சென்ற வருடம் 6 மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு உதவியது மட்டில்லா மகிழ்ச்சி.



வாரி வழங்கும் கல்விச் செம்மல்களாகிய தங்களின் பெருந்தயவோடு தீபம் அறக்கட்டளையின் சார்பில் இதுவரை கடந்த 9 ஆண்டுகளாக 881 - மாணவ, மாணவியர்களுக்கு ரூ.48,31,668/- (ஏறக்குறைய அரை கோடி) கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


கடந்த வருடங்களில் நடைபெற்ற கல்வி உதவித்தொகை காணொளிக் காட்சியை காண கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்:

9 ஆம் ஆண்டு:



8 ஆம் ஆண்டு:




இறையருள் சம்மதித்தால், இவ்வருடம் 119 மாணவர்களுக்கு உதவுகின்ற வாய்ப்பு கிடைத்தால், இவ்வருடமே ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கிய பெருமை தீபம் அறக்கட்டளைக்கும் தீபா அறக்கட்டளையை தாங்கி நிற்கும் தூண்கள் ஆகிய நன்கொடையாளர்களுக்கு பெருமை சேர்க்கும்.

"வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்;
பயிற்றிப் பலகல்வி தந்து - இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்."  - பாரதி

இந்த ஆண்டும் மேற்படிப்பிற்கான கல்வி உதவித்தொகைக்காக தீபம் அறக்கட்டளையின் உதவியை நாடி படிப்பில் நன்றாக தேர்ச்சி பெற்ற நூற்றுக்கணக்கான கிராமப்புற ஏழை எளிய மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருக்கின்றனர். விரைவில்( ஜூன் முதல் வாரத்தில்) அவர்களிடம் தகுந்த கல்வி பேராசிரியர்களின் குழுக்கள் மூலமாக மாணவர்களுடன் பெற்றோர்களுடன் நேர்காணல் நடத்த  உள்ளோம். தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாணவச் செல்வங்களுக்கு விரைவில் கல்வி  உதவித்தொகை வழங்கப்படும். 

தீபம் அறக்கட்டளை வழங்கும் 10-ம் ஆண்டு கல்வி உதவித்தொகைக்கு, தாங்களும் பாகம் பெற்று, ஓர் ஏழை மாணவர் அல்லது மாணவியின் எதிர்காலத்திற்கு வழி தந்து, அவர்களின் வாழ்விற்கு ஒளியேற்றிட, கல்விக்கான உதவித்தொகை வாரி வழங்கிட வேண்டுமாய் தங்களை அன்புடன் வேண்டி விண்ணப்பிக்கின்றோம்.

கல்வி உதவி வேண்டி வந்த ஓர் ஏழை  மாணவியின் தாயின் கண்ணீர் கடிதம்

"எனது பெயர் தனலட்சுமி. எனக்கு ஒரே மகள் பத்மபிரியா. சென்னை Maduvankarai  வாடகை வீட்டில்  இருக்கிறோம்.  மாத வாடகை ரூபாய் 3000. என் மகள் அப்போலோ காலேஜில் BCA படித்து வருகிறாள். அவள் இரண்டாம் ஆண்டு படித்து, மூன்றாம் ஆண்டு படிப்பை தொடங்கியிருக்கிறார். 

எனது கணவர் S முத்துசாமி அவர்கள் வெல்டிங் வேலை வேலை செய்து எங்களை காப்பாற்றி வந்தார். அவரது உடல்நிலை 2016ஆம் ஆண்டு முதல் சரியில்லாமல் இருந்ததால் 2017 ஆம் ஆண்டு இறந்துவிட்டார்.எனது கணவர் இறந்ததால் நாங்கள் மனதளவிலும் உடலளவிலும் மிகவும் பாதித்துள்ளோம். எனது கணவர் வேலையில் இருந்து வந்த ஒரே வருமானத்தில் தான் எங்கள் குடும்பம் பசி பட்டினியை இல்லாமல் இருந்தது.

தற்சமயம் நான் வீட்டு வேலை செய்துதான் குடும்பத்தை காப்பாற்றுகிறேன். எனக்கு எந்த சொந்தமும் பந்தமும் உதவவில்லை. உதவுகின்ற நிலையிலும் இல்லை. நாங்கள் சொல்ல முடியாத வேதனையுடன் இருந்து வருகிறோம். நான் வீட்டு வேலை பார்த்து எனக்கு வரும் வருவாய் எங்களது சாப்பாட்டுக்கும் வாடகைக்கும் கூட போதவில்லை. வீட்டில் வயதான மாமியார். கஷ்டமான சூழ்நிலையில் குடும்பம் உள்ளது. 

எனது மகளை BCA இரண்டு ஆண்டுகள் படிக்க வைத்து விட்டு, இன்னும் ஓராண்டு பீஸ் கட்ட வேண்டி உள்ளது. உடனே கட்டவில்லையென்றால் படிப்பை நிறுத்திக் கொள்ள சொல்கிறார்கள். எனது மகள் டிகிரி படிக்க, முடிக்க மிகவும் ஆவலுடன் இருக்கிறாள்."


இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட கல்வி உதவி கேட்டு விண்ணப்பங்கள், கடிதங்கள். தாயை இழந்த, தந்தை இழந்த அல்லது தாய் தந்தை இல்லாத, பார்வை இல்லாத,  ஆதரவில்லாத மாணவ மாணவிகள் அறக்கட்டளையின் கல்வி உதவிக்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள்.

தீபம் அறக்கட்டளையின் நன்கொடையாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாணவ மாணவிக்கு உதவி கரம் நீட்டினால் அனைத்து ஏழை மாணவ மாணவிகளுக்கும் கல்வி உதவி கிடைக்கும். படித்து சமுதாயம் நலம் பெற  பயனடைவார்கள். ஏழைகளுக்கு உதவி செய்யும் நன்கொடையாளர்களுக்கு இறை இன்ப நிறை வாழ்வு கிட்டும்.

நேர்காணலில் தகுதி பெற்ற மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவி தொகையை கல்லூரியின் பெயரில் காசோலையாக மட்டுமே அளிக்கப்படும் என்பதை நன்கொடையாளர்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.

ஒவ்வொரு வருடமும் ஏழை மாணவ மாணவிகளின் இலவச கல்வி உதவிக்கு பெருமளவில் நிதி தந்து, சமுதாயத்தின்  ஒரு பகுதி ஏழை மாணவ மாணவிகளின் வாழ்வில் ஒளியேற்றும்... ஏற்றுக் கொண்டிருக்கின்...ஒளி ஏற்ற போகின்ற... மனித தெய்வங்கள் ஐஐடி பேராசிரியர் M S சிவகுமார் அவர்களையும்,  தணிக்கையாளர்  திரு ராமச்சந்திர ராவ் அவர்களையும்,  தீபம் நன்றியோடு  நினைவு கூறுகிறது.


தாங்கள் அளிக்கும் நன்கொடைகளுக்கு வருமான வரிச்சட்டம் 80(G) பிரிவின்படி வருமான வரிவிலக்கு உண்டு.

ரொக்க நன்கொடைகளை தவிர்க்கவும்:
Donations by Cheque / Draft:

You can also send a Cheque/Demand Drafts in the favour of 'DEEPAM TRUST' with your Name, Contact number, full address with pin code & Email (if available) to the office address mentioned below.

Deepam Trust, No.30, Throwpathi Amman Kovil Street,Velachery,Chennai – 600 042

Donation by Bank Transfer: 
Account Name: Deepam Trust
Account No     : 30265475129
Bank                 :State Bank of India
Branch             : IIT Madras, Chennai – 600 036
IFSC Code       : SBIN0001055

வங்கிப் பரிமாற்றம் செய்தபின் நன்கொடையாளர்கள் தங்கள் விவரங்களை 9444073635 என்ற எண்ணிற்கு SMS அல்லது வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்ப வேண்டுகிறோம்.


தர்மம் செய்வோம் !!!
தயவுடன் வாழ்வோம்!!!

நிறுவனர் 
தீபம் அறக்கட்டளை
 சென்னை வேளச்சேரி 
-இது ஓர் அரசு பதிவு பெற்ற அற தொண்டு நிறுவனம்
(சமுதாயப் பணியில் 22 ஆண்டுகளாக...)

மேலும் தீபம் அறக்கட்டளையின் மற்ற சமுதாயப்பணிகளை அறிய விரும்புவோர், கீழ்க்கண்ட லிங்க் ஐ பயன்படுத்தவும்:    http://deepamtrust.org/social-activities/

Tuesday, 7 May 2019

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சன்மார்க்க சொற்பொழிவு (04.05.219)

\

\


சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மாதாந்திர முதல் சனிக்கிழமை சன்மார்க்க சொற்பொழிவு நேற்று (04-05-2019) மாலை 6-30 மணியளவில் 17 மாத சொற்பொழிவாக கைவிடமாட்டான் என்று ஊதூது சங்கே என்கிற தலைப்பில் சன்மார்க்க சீலர், ஆழ்வார் திருநகர் முபா அய்யா அவர்களின்  சன்மார்க்க மைந்தர்

தயவுமிகு.M.B. பாபு சென்னை அவர்கள்  உரையாற்றினார்கள்.  ஞானமார்க்கத்துடன் கூடிய அருள்பெற வழிகாட்டும்  பேரின்பமாய்  அகநிலைக்கு வழிகாட்டும் மெய்யறிவுப் பூர்வமாக 107 நிமிடம்  சொற்பொழி மிகமிக சிறப்பாக அமைந்தது. ஏராளமான அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தொடர்ந்து பசியாற்றுவித்தல் நடைபெற்றது. கலந்து கொண்ட அனைவருக்கும் தீபம் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

அடுத்த மாதம் முதல் சனிக்கிழமை சொற்பொழிவு நடைபெறும் நாள்: 01-06-2019.

தலைப்பு: அருட்பா அமுதம்
உரை நிகழ்த்துபவர்: 
சன்மார்க்க சீலர், ஆன்மநேய உறவினர்
தயவுமிகு. அருட்பா அருணாசலம் அவர்கள்
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், புதுச்சேரி.

அனைவரும் வருக!
அருளமுதம் பெறுக!

தீபம் அறக்கட்டளையின் சமுதாயப் பணிகள் - (03.05.2019)






ஒவ்வொரு மாதம் முதல் வெள்ளிக்கிழமை அன்று
 பார்வையில்லாத, மாற்றுத் திறனாளிகள் குடும்பங்களுக்கு, 
நோயினால் வருந்துகின்றவர்களுக்கு, பொருளுதவியும், ஜீவாதார உதவியும், மருத்துவ நிதி உதவியும் கடந்த 10 ஆண்டுகளாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பேரருள் கருணையினால் தீபம் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.

கடந்த வெள்ளியன்று தர்ம சாலையிலே தீபம் அறக்கட்டளையின் சமுதாயப் பணி சில காட்சிகள்...

அறக்கட்டளையின் அறப்பணிகளுக்கு, அள்ளித்தரும் வள்ளல்களை வணங்கி மகிழ்கிறோம்.

எங்கு தர்மம் இருக்கிறதோ அங்கு இறைவன் குடி கொண்டிருக்கிறான். மனித வடிவில் தர்மம் செய்யக்கூடிய அருளாளர்கள் அனைவரும் தெய்வத்தின் அருள் பெற்றவர்களே !!!

வாழ்க வாழ்க எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க இன்புற்று வாழ்க இன்புற்று வாழ்க !!!

வாழ்க தர்மம்
வளர்க தர்மம் !!!

தர்மம் செய்வோம்
தயவுடன் வாழ்வோம்!!!

 திருச்சிற்றம்பலம்

நிறுவனர்
தீபம் அறக் கட்டளை

தேவதானம் பேட்டை - (05.05.2019)



நித்ய தீப தர்மசாலை குழு அன்பர்களுக்கு

வணக்கம் ! வந்தனம் !!!

தீபம் அறக்கட்டளை  செய்யும் சமுதாய பணிகளை, அன்னதான பணிகளை, அறப்பணிகளை,
தங்களுக்கு வாட்ஸ் அப்பில் படங்களுடனும் விளக்கங்களுடனும் தீபம் நன்கொடையாளர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறோம்.

தீபம் அறக்கட்டளையின் 20 தர்ம சாலைகளில் ஒன்றான, செஞ்சி வட்டம் தேவதானம் பேட்டை கிராமத்தில் அருளாளர் அண்ணாமலை ஐயா அவர்கள் தலைமையில் மேற்பார்வையில்,
பசித்து வருபவர்களுக்கு,
நாடி வருபவர்களுக்கு,
தேடி வருபவர்களுக்கு, காலையில் அருட்கஞ்சி கொடுக்கக்கூடிய அற்புத காட்சியை பார்த்து நெகிழ்ந்து போனோம். மகிழ்ந்து போனோம்.

தற்பொழுது உங்களுக்கு இரண்டு படங்களையும் ஒரு நிமிடம் ஓடக்கூடிய அன்னதான வீடியோ காட்சியும் அனுப்பியுள்ளோம்.

இந்த காட்சியை பார்த்த பிறகு  இதற்கான தங்களுடைய
எண்ணத்தை,
விளக்கத்தை,
பார்வையை,
கருத்துக்களை

ஆங்கிலத்திலோ தமிழிலோ அல்லது ஆடியோவாக பதிவு செய்து அனுப்பலாம்.

தர்மம் செய்வோம் !!!
தயவுடன் வாழ்வோம்!!!

நிறுவனர்
தீபம் அறக்கட்டளை

இலவச சித்த மருத்துவ முகாம் - (05.05.2019)


சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
~~~~~~~~
கால்வலி, இடுப்புவலி, குடல் ஏற்ற வலி, தோள்பட்டை வலி, கழுத்துப் பிடிப்பு வலி, நாட்பட்ட தலைவலி போன்ற நோய்களுக்கு சிறந்த முறையில் நரம்புகள் பிடிப்பின் மூலம் நீவி குணமாக்கப்படுகிறது.
~~~~~~~~
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த
யோக பாலதண்டபாணி சித்த வைத்திய சாலையின் பரம்பரை வைத்தியர்
சிவம் V.P.,மாதேஸ்வரன்
அவர்களின் மேற்பார்வையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிறந்த முறையில் சித்த மருத்துவம் பார்க்கப்படும்.

நாள்: 05-05-2019 ஞாயிறு
நேரம்: காலை 9-00 மணிமுதல் மதியம் 1-00 மணிவரை

மருத்துவ முகாம் நடைபெறும் இடம்:
நித்ய தீப தருமச்சாலை
7/8, புத்தேரிக்கரைத் தெரு,
தண்டீஸ்வரம் கோவில் அருகில்,
வேளச்சேரி, சென்னை-42
044-22442515, 9444073635

அனைவரும் வருக!
ஆரோக்கிய நலம் பெறுக!

Health is Wealth
நோயில்லா பாரதம் படைப்போம் 

Wednesday, 1 May 2019

ஏழை பெண்மணிக்கு வாழ்வாதார உதவி - (01.05.2019)


திருவள்ளூர் மாவட்டம், ஈஞ்கூர் கிராமத்தை சேர்ந்த சாந்தி என்பவர் தனது கணவரின் உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் தன் குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பை சுமந்து துணிகளுக்கு இஸ்திரி போடும் தொழிலை செய்து குடும்பம் நடத்தி வருகிறார். தற்போது தன் குடும்பத்தையே காப்பாற்றக்கூடிய இஸ்திரி பெட்டி பழுதடைந்து விட்டதால் புதிய இஸ்திரி பெட்டி வேண்டி தீபம் அறக்கட்டளைக்கு விண்ணப்பித்திருந்தார்.

திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன்தீபம் அறக்கட்டளை சாந்தி என்பவருக்கு புதிய இஸ்திரி பெட்டி வழங்க திருவுள்ளம் கொண்டு புதிய இஸ்திரி பெட்டி RS.5487/- இன்று ஏழை பெண்ணின் வாழ்விற்கு, வாழ்வாதாரத்திற்கு நித்திய தீப தர்மசாலையில் வழங்கப்பட்டது( படம் பார்க்கவும்).

ஆதரவற்ற ஏழைக் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கு வாரி வழங்கிய வள்ளல்களை வணங்கி வாழ்த்தி மகிழ்கிறோம் !!!

உலகம் தர்ம பூமியாக மாறட்டும் ; மலரட்டும் !!!


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!

தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி, சென்னை
தொடர்புக்கு:-
04422442515 / 9444073635

இலவச சித்த மருத்துவ முகாம்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. 
~~~~~~~~
கால்வலி, இடுப்புவலி, குடல் ஏற்ற வலி, தோள்பட்டை வலி, கழுத்துப் பிடிப்பு வலி, நாட்பட்ட தலைவலி போன்ற நோய்களுக்கு சிறந்த முறையில் நரம்புகள் பிடிப்பின் மூலம் நீவி குணமாக்கப்படுகிறது. 
~~~~~~~~
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த
யோக பாலதண்டபாணி சித்த வைத்திய சாலையின் பரம்பரை வைத்தியர் 
சிவம் V.P.,மாதேஸ்வரன்
அவர்களின் மேற்பார்வையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிறந்த முறையில் சித்த மருத்துவம் பார்க்கப்படும்.

நாள்: 05-05-2019 ஞாயிறு
நேரம்: காலை 9-00 மணிமுதல் மதியம் 1-00 மணிவரை

மருத்துவ முகாம் நடைபெறும் இடம்:
நித்ய தீப தருமச்சாலை
7/8, புத்தேரிக்கரைத் தெரு,
தண்டீஸ்வரம் கோவில் அருகில்,
வேளச்சேரி, சென்னை-42
044-22442515, 9444073635

அனைவரும் வருக!
ஆரோக்கிய நலம் பெறுக!

Health is Wealth
நோயில்லா பாரதம் படைப்போம் 

வள்ளலார் வரலாறு கேள்வி ஞானப் போட்டி

🌺✨ வள்ளலார் வரலாறு கேள்வி ஞானப் போட்டி ✨🌺 📚 A Group – 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை 📚 B Group – 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு ...