மனதை மகிழ்விக்கும், மிக மிக சிறந்த சமுதாய பணிகளை இன்று தீபம் அறக் கட்டளை இறையருளால் நிறைவாக செய்திருக்கிறது.
1) மதுராந்தகம் நித்ய தீப தருமச்சாலையில் 150 கிலோ அரிசியில் காலை உணவும் (இட்லி, பொங்கல், மெதுவடை, சொஜ்ஜி, கேசரி) மதிய உணவும் (வெஜிடபிள் பிரிஞ்சி, சாம்பார் சாதம், எண்ணை கத்தரிக்காய்) 1,300 பேருக்கு சீரோடும் சிறப்போடும் வழங்கப்பட்டது.
நாள் முழுவதும் தொண்டு செய்த தீபம் சேவடிகளை தீபம் பாராட்டி மகிழ்கிறது.
Madhuranthagam Sevaadigal
1.Mr Bharathi
2.Mr guru karthi
3.Mr Barani
4.Mr ganapathy
5.Mr velmurugan
6.Mr krishnamurthy aiyya
7.Mr rajendhira prasath
8.Mr ranganathan
9.Mr karthi
10.Mr Gandhi .
2) இன்றைய நடமாடும் தர்ம சாலை:
இன்று தீபம் அறக் கட்டளையின் டாடா ஏஸ் வாகனம் மூலம் வேளச்சேரி, தரமணி, அடையார், திருவான்மியூர், பெசன்ட் நகர், மயிலாப்பூர், லஸ் கார்னர், கச்சேரி சாலை, லைட் அவுஸ், மெரினா கடற்கரை, சாந்தோம், பட்டினப்பாக்கம், விவேகானந்தர் இல்லம், கஸ்தூரிபாய் மருத்துவமனை பகுதிகளில் ரோட்டோரம் பசியோடு ஆதரவற்று இருப்பவர்களுக்கு, உணவு பொட்டலங்களை தண்ணீர் பாட்டில்களை வழங்கிய சேவகர்கள்:
திரு குமரேசன் அவர்கள்
திரு ஆனந்த் அவர்கள்
திரு சுதாகர் அவர்கள்
திரு முனியன் அவர்கள்
திரு ரங்கநாதன் அவர்கள் மற்றும்
நன்கொடையாளர் * திரு சதீஷ் பாண்டிதுறை (திரு அஸ்லாம், துபாய்) அவர்கள்*
தீபம் பாராட்டி வாழ்த்தி மகிழ்கிறது.
3) இன்று மதியம் நித்திய தீப தர்ம சாலையில் பசித்து வந்தவர்களுக்கு வீடியோ 12 மணி அளவில் உணவு பொட்டலங்கள் மற்றும் வாழைப்பழம் வழங்கப்பட்டது.
4) திரு ரமேஷ் மற்றும் திரு கணேஷ் மூலம் கங்கை அம்மன் திருக்கோவிலில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
5) இரவு 7 மணி அளவில் நித்திய தீப தருமச்சாலையில் எலுமிச்சை சாதம் உணவு பொட்டலங்களாக வழங்கப்பட்டன.
6) மாணவர்களுக்கு கல்வி உதவி
7 மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு நித்ய தீப தருமச்சாலையில் இன்று கல்வி உதவிக்கான காசோலைகள் நேரடியாக பிரார்த்தனை செய்து வழங்கப்பட்டன. அனைவருக்கும் போக்குவரத்து செலவு வழங்கப்பட்டது (TA/DA). மாணவர்களுக்கு பாக்கு தட்டில் வயிறார அன்பான உணவு அப்பளத்துடன் வழங்கப்பட்டது.
நிகழ்வில் கலந்துகொண்ட
அருளாளர்கள்
1)பேராசிரியர் முத்துக்குமார் கண்ணன் அவர்கள்
2)திரு நாராயண மூர்த்தி ஐயா அவர்கள
3)திருமதி ஜானகி ஜெய சேகர் அவர்கள்
4)திரு R ராஜாராமன் ஐயா அவர்கள்
5)திருமதி லட்சுமி அம்மையார் அவர்கள்
6)திருமதி மின்னல் அம்மா அவர்கள்
7)திரு பிரபு அவர்கள்
8)திரு சிவா அவர்கள்
9) திரு மணி அவர்கள்
இதுவரை உதவி பெற்ற மொத்த மாணவ மாணவிகள்: 1,026
இதுவரை கல்வி உதவியாக வழங்கப்பட்ட மொத்த தொகை: ₹ 56,02,485/-.
அற்புதமான திட்டமிடல் செய்து நிகழ்வுகளை சிறப்பாக நடத்திய அனைத்து தீபம் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும், தீபம் அறக் கட்டளை தொண்டர்களுக்கும் கோடானுகோடி நன்றி!!!
தொடர்ந்து தர்ம சாலையின் அனைத்து அன்னதான பணிகளுக்கும் ஏழை மாணவர்களின் கல்வி உதவிக்கும் வாரி வாரி வழங்கும் மனித தெய்வங்களை வாழ்த்தி வணங்கி மகிழ்கிறோம்!!!
தொண்டு செய்வோம் !!!
நீண்டு வாழ்வோம்!!!
தீபம் நிர்வாகம்