Sunday, 9 February 2020

தைப்பூசம் 2020 | வடலூரில் தீபம் அறக்கட்டளையின் சேவை

தைப்பூச திருநாள் நல்வாழ்த்துக்கள் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி மனித பிறப்பின் பெருமையே நாம் வாழும் பயனுள்ள வாழ்க்கையில் தான் இருக்கிறது. மனிதர்களாக பிறந்தவர்கள் மாமனிதர்கள் ஆவதும், மாமனிதர்கள் மகான்கள் ஆவதும், மகான்கள் தெய்வங்கள் ஆவதும், தெய்வங்கள் கடவுள் நிலையை அடைவதும், மனிதராகப் பிறந்து இருக்கக்கூடிய நம் ஒவ்வொருவருக்கும் கிடைத்திருக்கக் கூடிய ஓர் அரிய அற்புத வாய்ப்பு. *அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது;* ..... *தான தர்மம் செய்தல் அரிது.* *தான தர்மம் செய்வாராகில்* *வானவர் நாடு வழி விடுமே* என்பார் அவ்வைப் பிராட்டி. தீபம் அறக்கட்டளையின் அனைத்து அறப்பணிகளுக்கும் தொடர்ந்து நன்கொடைகளை மாதம்தோறும் அள்ளி அள்ளிக் கொடுக்கும் அரிதினும் அரிதான மாதாந்திர தொடர் நன்கொடையாளர்களை வணங்கி மகிழ்கிறோம். 8.2.2020 அன்று வடலூரில் நடைபெற்ற தைப்பூச திருவிழா நிகழ்விற்கு ஜோதி தரிசனம் காண வந்திருந்த ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான ஆன்மநேய ஒருமைப்பாட்டு அன்பு உள்ளங்களுக்கு தொடர்ந்து மூன்று நாட்களாக நடைபெற்ற தொடர் அன்ன தர்மத்திற்கு அருள்நிதி ஆகவும், பொருளாகவும் வாரி வாரி வழங்கிய தீபம் அறக்கட்டளையின் நன்கொடையாளர்களை வாயார வாழ்த்தி மகிழ்கிறோம்.


வடலூர் தைப்பூச விழாவின் அன்னதானத்திற்கு தீபம் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கிய *36 நன்கொடையாளர்களையும்,* தொடர்ந்து மூன்று நாட்களாக வடலூரில் இரவு பகலாக தொடர்ந்து அன்னதான திருத்தொண்டு செய்த *தீபம் அறக்கட்டளையின் தன்னார்வ தொண்டு உள்ளங்களையும்,* வடலூர் சத்திய தருமச்சாலையில் கடந்த மூன்று தலைமுறைகளாக ஏறக்குறைய 111 ஆண்டுகளுக்கும் மேலாக சத்திய தருமச்சாலையில் மாத பூச நாட்களில் அன்னதர்மப் பணியை தொடர்ந்து செய்து கொண்டிருக்கக் கூடிய *நாகப்பட்டினம் அகல்விளக்கு மன்றம்* கடந்த ஒரு வாரமாக வடலூரில் முகாமிட்டு, பந்தலிட்டு, தேவையான மளிகை பொருட்கள், அரிசி, காய்கறிகள் (டன் கணக்கில்), பாத்திரங்கள், அடுப்புகள், விறகு, கேஸ் சிலிண்டர் முதலானவற்றை திட்டமிட்டு, அமைதியாக, மிக அற்புதமாக மிக மிக நேர்த்தியாக, எவ்வித ஆடம்பரம் இல்லாமல், அன்போடு, தயவோடு, கருணையோடு, வடலூர் தைப்பூச ஜோதி தரிசனம் காண வருகின்ற ஆயிரக்கணக்கான, லட்சோப லட்சம் மக்களுக்கு தொடர்ந்து பசி ஆற்றும் அரும் பணியில், தீபம் அறக்கட்டளைக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக, நல்வாய்ப்பை, நல் ஆதரவை, நல்லாசியை, உற்சாகத்தை தொடர்ந்து தீபம் அறக்கட்டளைக்கும், தீபம் சேவடிகளுக்கும் கொடுத்து கொண்டிருக்கக்கூடிய, ஆன்மிகப் பண்புகளை, ஆன்மீக அற்புதங்களை, நல்லறம் போற்றும் மா மனிதர்களாகவும் மகான்களாகவும் ஜீவகாருண்ய வாழ்வை எப்படி வாழ வேண்டும் என்று உணர்த்திக்கொண்டும், வாழ்ந்து கொண்டும், பிறரை வாழ வைத்துக் கொண்டும் இருக்கக்கூடிய *திருவாளர்கள் சைவமணி ஐயா அவர்களுக்கும்,* *திரு ராமமூர்த்தி ஐயா அவர்களுக்கும்* சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் ஒரு கோடி வந்தனங்கள். 🌾🍚🌾🍚🌾🍚🌾🍚🌾🍚🌾🍚 தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகமெங்கும் பல்வேறு சன்மார்க்க சங்கங்கள் மூலம் அவரவர் பகுதியில் தீ மூட்டி அன்பான அன்னம் தயாரித்து பசியாற்றிய சன்மார்க்க அன்பு உள்ளங்களை தீபம் அறக்கட்டளை வணங்கி மகிழ்கிறது. 🌾🍚🌾🍚🌾🍚🌾🍚🌾🍚🌾🍚 தைப்பூசத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான ஆன்மநேய ஒருமைப்பாட்டு அன்பு உள்ளங்களின் வருகையால், ஞான சபையைச் சுற்றிலும், தர்மசாலையை சுற்றிலும், இறைந்திருக்கும், நிறைந்திருக்கும், டன் கணக்கில் குவிந்திருக்கும், குப்பைகளை தன்னுடைய 500க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு மூலம், தொண்டர்கள் மூலம் சுத்தம் செய்யக்கூடிய அருளாளர், பேச்சாளர், அருட்பா பாடகர், இசை அமைப்பாளர், சமூக சேவகர் என்று பல்வேறு நாமதேயங்களை *வடலூர் சேவை மையம் நிறுவனர், திருக்கோவிலூர் தயவு திரு ஜீவ சீனிவாசன் ஐயா,* அவர்களின் தொண்டை கண்டு அகம் மகிழ்கிறோம். அருமையான பணியை கண்டு பெருமைப்படுகிறோம். இறைப்பணி வாழ்க என்று திருவருட்பிரகாச வள்ளலார் இடம் பிரார்த்திக்கிறோம். வாழ்க வாழ்க எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வாழ்க வாழ்க வள்ளல் மலரடி வாழ்க ! தயவுடன் ... நிறுவனர் *தீபம் அறக்கட்டளை* 9444073635 தீபம் அறக்கட்டளையின் அனைத்து செயல்பாடுகளை காண: www.deepamtrust.org

No comments:

Post a Comment

ஏழை மாணவ மாணவிகளுக்கு 15ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு, கடந்த 27 ஆண்டுகளாக தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது, தொடர் சமுதாயப்...