Saturday, 6 October 2018

சன்மார்க்க சொற்பொழிவு

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின்  நித்ய தீப தருமச்சாலையில் மாதாந்திர முதல் சனிக்கிழமை (06-10-2018)  சிறப்பு சன்மார்க்க  சொற்பொழிவு இன்று மிக சிறப்பாக நடைபெற்றது.






ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்கிற தலைப்பில், சன்மார்க்க சீலர், பழனி குலபதியாரின் மாணாக்கர் தயவுமிகு. சுருளிராஜன் அவர்கள்,சொற்பொழிவு ஆற்றினார். உணர்ச்சிமிக்க  ஆனந்தமயமாக நிலையில் அமைந்த இந்த  நிகழ்ச்சியில் பெருந்திரளான அன்பர்கள் கலந்து கொண்டனர். பின்னர்  அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

அடுத்த மாதம் முதல் சனிக்கிழமை : 03-11-2018
தலைப்பு: உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு
சொற்பொழிவாற்றுபவர்:
தயவுமிகு பிரபாவதி அம்மையார்

Friday, 5 October 2018

06.10.2018 - மாதாந்திர சன்மார்க்க சொற்பொழிவு


சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின்  நித்ய தீப தருமச்சாலையில் மாதாந்திர முதல் சனிக்கிழமை சிறப்பு சன்மார்க்க  சொற்பொழிவு







நாள்: 05-10-2018
நேரம்: மாலை 6-00 மணிமுதல்
தலைப்பு: ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்
உரையாற்றுபவர்: சன்மார்கத்தின் மூத்த சான்றோர், தயவுமிகு சுருளிராஜன் அவர்கள்


சொற்பொழிவு நடைபெறும் இடம்:
நித்ய தீப தருமச்சாலை
7/8, புத்தேரிக்கரை தெரு
வேளச்சேரி, சென்னை-600042
(தண்டீஸ்வரம் சிவாலயம் கிழக்கு மாடத்தெரு)

குறிப்பு: நிகழ்ச்சி சரியான நேரத்தில் துவங்கவுள்ளதால் அனைவரும் முன்கூட்டியே வருகைதந்து  ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்.சொற்பொழிவு முடிந்தவுடன் அன்னதானம் நடைபெறும்.

அனைவரும் வருக...
அருளமுதம் பெறுக...

அன்புடன் அழைக்கும்...
உங்கள் வேளச்சேரி
தீபம் அறக்கட்டளை
9444073635
04422442515
www.deepamtrust.org

Thursday, 4 October 2018

08.10.2018 - சாலை ஓரம் உள்ளவர்களுக்கு அன்னதானம்

சென்னையில் தற்போது (நேரம் 4-10 மணி) பசியால் துவண்டு கிடந்த உள்ளங்களை தேடிச்சென்று  அன்னதர்மம் வழங்கப்பட்டது.
அன்னதர்த்திற்கு வித்திட்ட தயவாளர்களுக்கு தீபம் அறக்கட்டளையின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.





Tuesday, 25 September 2018

தீபநெறி 2018 - செப்டம்பர் மாத மின்னிதழ்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் கட்டணமில்லா தீபநெறி சன்மார்க்க தமிழ் மாத இதழை கடந்த 9 ஆண்டுகளாக தீபத்தின் நன்கொடையாளர்களுக்கும், சன்மார்க்கிகளுக்கும், நலம் விரும்பிகளுக்கும், ஒவ்வொரு மாதமும் 27ஆம் தேதியன்று தபாலில் அனுப்புகிறோம்.

இதழ் (printed hard copy) விரும்புவோர் பெயர், கைபேசி எண் & முழு முகவரியை இந்த https://goo.gl/forms/16OVQfmJp6aieFjD2 லிங்கில் பதிவுசெய்தால்  இலவசமாக அனுப்ப தயாராக உள்ளோம் அல்லது 94440 73635 / 044-22442515 என்ற எண்ணிற்கு மேற்கூறிய தகவல்களை  வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பவும்.




















Tuesday, 18 September 2018

நித்ய தீப தருமச்சாலை சத்திய ஞானசபை கட்டிட நிதி விண்ணப்பம்


நித்ய தீப தருமச்சாலை 
சத்திய ஞானசபை
கட்டிட நிதி விண்ணப்பம்

அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி !!!!
ஆன்மநேய அன்புள்ளங்களுக்கு அனந்த கோடி வந்தனம்,

திருஅருட்பிரகாச வள்ளல்பெருமானாரின் ஜீவகாருண்ய கொள்கைகளை சிரமேற்கொண்டு, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப் பெருங்கருணையுடன், 

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது கடந்த 21 ஆண்டுகளாக பல்வேறு ஜீவகாருண்ய  அறப்பணிகளை செய்து கொண்டுவருவது அனைவரும் அறிந்ததே...
Know more activities of Deepam Trust

தீபம் அறக்கட்டளையானது வேளச்சேரியை தலைமையிடமாக கொண்டு இதுவரை ஓர் வாடகை/குத்தகை  கட்டிடத்தில்தான் செயல்பட்டு வருகிறது.தற்போது குத்தகை காலம் முடிவதால் நித்ய தீப தருமச்சாலையை  இன்னும் ஓரிரு மாதங்களில் காலி செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. 

வேளச்சேரியில் அறப்பணிகளை செய்வதற்கென்றே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பெருங் கருணையினால் ஓர்  நிரந்தரமான இடம் கிடைத்துள்ளது.

அங்கே நித்ய அன்ன தருமச்சாலை கட்டிடம் அமைக்க திருவருள் திருவுள்ளம் சம்மதம் அளித்துள்ளது.

தீபம் அறக்கட்டளையின் ஜீவகாருண்ய  அறப்பணியானது தொடர்ந்து தங்குதடையின்றி எக்காலத்திலும் நடைபெற ஜீவ தயவுள்ள ஆன்மநேய அன்புள்ளங்களின் மேலான தயவும், ஒத்துழைப்பும், பங்களிப்பும்,
உடனடியாக  தேவைப்படுகிறது.

1200 சதுர அடியில்
(G+2=மொத்தம் 3600 sft) அமைய உள்ள நித்ய அன்ன தருமச்சாலையில் தாங்களும் தங்களின் குடும்ப நபர்களின் பெயர்களும் நிரந்தரமாக நிலைபெற வேண்டுகின்றோம்.  

கட்டிடத்திற்கு வாரிவழங்கும் தயவாளர்கள் பெயரும் நிரந்தர கல்வெட்டில்  பதிக்கப்படும்.அதுவும் திருவருள் சம்மதமே.... 

அன்ன தருமச்சாலை தோற்றுவிப்பதற்கு, தங்கு தடையின்றி வளர்ச்சி அடைவதற்கு, தங்கள் ஒவ்வொருவரின் தயவும் கருணையும் தேவைப்படுகிறது. 

அவரவர்களால் முடிந்த பொருளை (நிதியை) மொத்தமாகவோ அல்லது பகுதியாகவோ கொடுத்து, ஆன்ம லாபத்தை பாகம் செய்து கொள்ள அன்புடன் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம்.

தீபம் அறக்கட்டளை யானது பல ஜீவகாருண்ய தயவாளர்களின் பெருங்கருணையினால் இன்றுவரை தங்கு தடையின்றி ஜீவகாருண்யப்பணியானது  20 தருமச்சாலைகள் மூலம் சிறப்பாக  நடைபெற்றுக் கொண்டு வருகின்றது.

அதே போல்  சொந்தமாக இடம் வாங்குவதற்கும்  கட்டிடம் கட்டுவதற்கும் உங்கள் ஆதரவு அவசியம் விரைவில் தேவைப்படுகின்றது.

Donate Now
இடத்தின் மதிப்பீடு கீழே தரப்பட்டுள்ளது

10 சதுரடி 1,00,000/- ரூபாயாகவும்
 5 சதுரடி 50,000/- ரூபாயாகவும்
1 சதுரடி 10,000/- ரூபாயாகவும் 
என்ற பாகம் பெற்று கடந்த 21 ஆண்டுகளாக தங்குதடையின்றி நடைபெற்று வரும் ஆன்மநேய அறப்பணிகளுக்காக தீபம் அறக்கட்டளைக்கு பூமிதானம் செய்து ஆன்மலாபம் பெற்றுய்ய வேண்டி தங்களின் பொன்னான பாதங்களை பற்றி விண்ணப்பிக்கின்றோம்.

தாங்கள் அளிக்கும் நன்கொடைகளுக்கு வருமான வரிச்சட்டம் 80(G) பிரிவின்படி வருமான வரிவிலக்கு உண்டு 
Donate by Cheque / Draft:
You can also send a Cheque/Demand Drafts in the favour of ‘DEEPAM TRUST’ with your Name, Contact number, full address with pin code & Email (if available) to the office address mentioned below.
Deepam Trust, No.30, Throwpathi Amman Kovil Street,Velachery,Chennai – 600 042
Donate by Bank Transfer: 
Account Name: Deepam Trust
Account No     : 30265475129
Bank                 :State Bank of India
Branch             : IIT Madras, Chennai – 600 036
IFSC Code       : SBIN0001055
நன்கொடை அளிக்க
தருமம் செய்வோம் !!!
தயவுடன் வாழ்வோம் !!!
Copyright © 2018 Deepam Trust, All rights reserved.
www.deepamtrust.org
Our mailing address is:
admin@deepamtrust.org

Sunday, 16 September 2018

16.09.2018 - அன்னதானம்


சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் இன்று ஆயிரக்கணக்கானோருக்கு அறுசுவை உணவுகள் தயாரிக்கப்பட்டது.





சைதாப்பேட்டை சன்மார்க்க சங்கத்திற்கு உணவு வகைகள் விபரம்
150 நபர்களுக்கு...
1, சாம்பார் சாதம்
2, தயிர்சாதம்
3, வாழைக்காய் பொரியல்
4, சேமியா பாயாசம்
5, உளுந்துவடை

தேனாம்பேட்டை சன்மார்க்க சங்கத்திற்கு அனுப்பப்பட்ட உணவு வகைகள்
300 நபர்களுக்கு...
1, வெஜ்.பிரிஞ்சி
2, எண்ணெய் கத்தரி கறி

விநாயகர் ஊர்வல அன்னதானத்திற்கு உணவு வகைகள்
600 அன்பர்களுக்கு
1, சாம்பார் சாதம்
2, புளியோதரை
3, கேசரி

நித்ய தீப தருமச்சாலையில் நித்ய அன்னதானத்திற்கு
1, சாம்பார் சாதம்
2, பொரியல்

நடமாடும் நித்ய தீப அன்ன தருமச்சாலை அன்னதானத்திற்கு
1. சாம்பார் சாதம்

இன்றைய அன்னதானம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பெருங்கருணையால் சிறப்பாக நடைபெற்றது.
ஆடுகின்ற சேவடிகளான
தயவுமிகு.பாரதி
தயவுமிகு.கணபதி
தயவுமிகு.மின்னல் அம்மா
தயவுமிகு. செந்தில்குமார்
மற்றும்  புத்தேரிக்கரை தெரு நண்பர்கள் அனைவருக்கும் தீபத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களையும், நெஞ்சார்ந்த நன்றியையும்தெரிவித்துக் கொள்கிறோம்.

வள்ளலார் வரலாறு கேள்வி ஞானப் போட்டி

🌺✨ வள்ளலார் வரலாறு கேள்வி ஞானப் போட்டி ✨🌺 📚 A Group – 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை 📚 B Group – 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு ...