Wednesday, 6 March 2019

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சன்மார்க்க சொற்பொழிவு





 சென்னை வேளச்சேரி
  தீபம் அறக்கட்டளையின் சன்மார்க்க சொற்பொழிவு

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மாதாந்திர முதல் சனிக்கிழமை சன்மார்க்க சொற்பொழிவு நேற்று (02-03-2019) மாலை 6-30 மணியளவில் 15 மாத சொற்பொழிவாக வள்ளுவரும், வள்ளலாரும் என்கிற தலைப்பில் திருக்குறள் திருத்தொண்டர்  தயவுமிகு. வள்ளுவப் வாடாப்பூ அவர்கள் உரையாற்றினார்கள்.
பக்தி மார்க்கத்துடன் கூடிய சமய மார்க்க சொற்பொழிவாக அமைந்தது. ஏராளமான அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தொடர்ந்து பசியாற்றுவித்தல் நடைபெற்றது. கலந்து கொண்ட அனைவருக்கும் தீபம் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

அடுத்த மாதம் முதல் சனிக்கிழமை சொற்பொழிவு நடைபெறும் நாள்: 06-04-2019

தலைப்பு: கைவிடமாட்டான் என்று ஊதூது சங்கே
உரை நிகழ்த்துபவர்: 
சன்மார்க்க சீலர், ஆன்மநேய உறவினர்
தயவுமிகு. M.சந்திரசேகர் அவர்கள்
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், திருச்சி
அனைவரும் வருக!
அருளமுதம் பெறுக!

No comments:

Post a Comment

வள்ளலார் வரலாறு கேள்வி ஞானப் போட்டி

🌺✨ வள்ளலார் வரலாறு கேள்வி ஞானப் போட்டி ✨🌺 📚 A Group – 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை 📚 B Group – 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு ...