தீபம் அறக்கட்டளையில் அன்றாட நடக்கும் அயராத அறப்பணிகளை நிர்வாகிகளும் தொண்டர்களும் நன்கு அறிவீர்கள்.
தீபம் அறக்கட்டளையின் தருமச்சாலைக்கு நாம் சொந்த இடம் பெறவேண்டிய,
வாங்க வேண்டிய,
அடைய வேண்டிய, நிர்பந்தத்தில் உள்ளோம்.
இன்னும் சில மாதங்களில் குத்தகை காலம் முடிவடைய இருக்கிறது.
மீண்டும் நாம் தர்மசாலை கட்டிடத்திற்கு நிதி திரட்ட வேண்டிய அவசர நிலையில் உள்ளோம்.
மார்ச் 1ஆம் தேதி முதல் மீண்டும் தீபம் அறக்கட்டளையின் நன்கொடையாளர்களை நேரில் சந்திக்கவும் அவர்களிடம் நமது நிலையை நேரில் சந்தித்து உண்மை நிலையை எடுத்துக் கூறவும் முடிவு செய்துள்ளோம்.
இந்த பணியில் தீபம் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒவ்வொருவரும்
முழு ஈடுபாடோடும்
முழு அக்கறையோடும்
முழு உத்வேகத்துடன் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு இந்த அரிய பெரிய பணியில் தாங்களும் தங்கள் குடும்பமும் ஒவ்வொரு நாளும் பங்குபெற்று தீபம் அறக்கட்டளையின் நித்திய தீப தருமச்சாலைக்கு
சென்னை வேளச்சேரியில் சொந்த கட்டிடம் அமைய
உறுதி எடுத்துக் கொள்ளுமாறு அடியேன் தங்களிடம் விண்ணப்பம் செய்கிறேன்.
தாங்கள் செய்ய வேண்டியவை அல்லது தங்களுடைய பங்களிப்பு
1)தீபம் அறக்கட்டளையின் ஒவ்வொரு நிர்வாகியும் அவரவர் சக்திக்கேற்ப தர்மசாலை கட்டுவதற்கு உடனடியாக நிதி வழங்குதல் ...
2)தங்களை சார்ந்த நண்பர்கள் சுற்றத்தார்
உடன் பணிபுரிவோர் அவர்களிடம் நிதி திரட்ட அழைத்துச் செல்லுதல்...
3) ஒவ்வொருவரும் குறைந்தது மூன்றிலிருந்து ஐந்து பேரை யாவது புதியதாக அறிமுகம் செய்தல்...
செய்தால் இந்த கட்டிட பணி மிக எளிதாகவும்... விரைவாகவும் ...
இறைவன் நமக்கு நடத்தித் தருவார் ...
அமைத்துத் தருவார்... பெற்றுத்தருவார் ...
தருமச்சாலையை வாங்கி தருவார்.
இது இறைவன் மீது ஆணை.
நிறுவனர்
தீபம் அறக்கட்டளை
No comments:
Post a Comment