சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின்
9-ம் ஆண்டு கல்வித் திருவிழா
திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் 9-ம் ஆண்டாக படிப்பில் நன்றாக தேர்ச்சி பெற்று மேற்படிப்பு தொடர முடியாத கிராமப்புற ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு (98 மாணவச் செல்வங்களுக்கு) கல்வி உதவித் தொகை Rs.5.50 லட்சத்திற்கும் மேலாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (01-07-2018) காலை 8-00 முதல் நித்ய தீப தருமச்சாலையில் வழங்கப்பட்டது.
அருட்பா வேந்தர் தயவுமிகு. ஈரோடு செ.கதிர்வேலனார் அவர்கள், முன்னிலை வகித்து சிறப்புரை ஆற்றினார். ஜீவகாருண்ய செம்மல், வாழும் தயாநிதி தயவுமிகு. மேடா நித்தியானந்தம் அவர்கள், திண்டுக்கல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்வி உதவித்தொகையை வாரி வழங்கி மாணவர்களிடையே உரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில் வேதாரண்யம் வள்ளலார் தருமச்சாலை நிறுவனர் தமிழ்த்தூதன், காவாங்கரை சத்சித் ஆனந்தம், இராமாபுரம் குமரகுரு அய்யா போன்ற சன்மார்க்க பெருமக்களும், தீபத்தின் கொடையாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கல்வி உதவித் தொகைக்கு வித்திட்ட கல்விச் செம்மல்களுக்கும், நிகழ்வில் கலந்து கொண்ட சன்மார்க்க சொந்தங்களுக்கும், ஆன்மநேய உடன்பிறப்புக்களுக்கும் தீபம் அறக்கட்டளை தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
என்றென்றும் ஆன்மநேய அறப்பணியில்
உங்கள் வேளச்சேரி
உங்கள் வேளச்சேரி
தீபம் அறக்கட்டளை
தருமம் செய்வோம்
தயவுடன் வாழ்வோம்!
No comments:
Post a Comment