Saturday, 2 December 2017

தீபத்தின் சமுதாயப்பணி

வணக்கம், நேற்று 02.12.2017 சென்னை பெரும்பாக்கம், எழில் நகர், அவுஸிங் பகுதியில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆதரவற்ற பெண் முதியவர் ஒருவர் பெயர் திருமதி.லோகநாயகி, என்பவர் பக்கவாதம் நோயினால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலையில் ஆதரவற்று இருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்று சமூக சேவகர்களான அகல் பௌண்டேஷன் திரு வெங்கடேஷ் மூலம்  மேற்சொன்ன இடத்திற்கு சென்று பிறகு ஆதரவற்று இருக்கும் அந்த நபரிடம் பேசினார். பிறகு அவரை நல்ல முறையில் மீட்டுக் கொண்டு சம்பந்தப்பட்ட எஸ்11 பள்ளிக்கரணை காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகியோர்களின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களின் ஒப்புதல் கடிதம ( general memo) பெற்று மேற்சொன்ன முதியவரை சென்னை போரூரில் உள்ள லிட்டில் டிராப்ஸ் முதியோர் இல்லத்தில் நல்ல முறையில் சேர்த்து அவரின் பாதுகாத்து பராமரித்திட மேற்சொன்ன இல்லத்தில் சேர்த்து விடப்பட்டார்.



இந்த மாதிரியான காரியங்கள் செய்ய முடிகிறது என்றால் தங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் ஆசீர்வாதத்தினாலும் ஆதரவினாலும் தான் நடக்கின்றன என்பதனை தங்களுக்கு நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி நன்றி வணக்கம்.

தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி, சென்னை

No comments:

Post a Comment

ஏழை மாணவ மாணவிகளுக்கு 15ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு, கடந்த 27 ஆண்டுகளாக தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது, தொடர் சமுதாயப்...