Thursday 2 November 2017

அன்னதான அற்புதங்கள்


உணவின்றி உயிரில்லை!
உயிரின்றி உலகில்லை!

அன்னதானமானது அளவிற்கடந்த புண்ணியங்களைத் தரவல்லது.
தானத்திலும் மிக உயர்ந்ததாகக் கூறப்படுவது  அன்னதானம் மட்டுமே.

அன்னதானம் செய்பவர்களுக்கு இம்மையிலும் மறுமை இல்லை என்றும்,  உலகிலேயே மனிதனானவன் அறியாமல் செய்யும்  பாவங்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த பரிகாரமே அன்னதானம் மட்டுமே என உலகம் தோன்றிய முதல் இன்றுவரை வாழ்ந்த அருளாளர்கள் வலியுறுத்தி வந்துள்ளனர். ஆனால் பின்னாளில் சமயமதவாதிகளும், போலி ஆன்மீகவாதிகளும், ஜோதிடர்களும் இவைகளை எல்லாம் மறைத்து ஒரே கடவுளை பல உருவப்பட்ட விதத்தில் காட்டி பரிகாரம் என்கின்ற பெயரில் அன்னதானத்தை மறைத்து,  தவறான ஆன்மீக தகவல்களை மக்களிடம் பரப்பி மூடநம்பிக்கைகளை வளர்த்து வந்துள்ளனர்.

எல்லாம் வல்ல இறைவனால் 1823 ம் ஆண்டு இந்நிலவுலகிற்கு வருவிக்கவுற்ற திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் 1867-ம் ஆண்டு வைகாசித் திங்கள் 11-ம் நாள் பார்வதிபுரம் எனும் வடலூரில் பசியால் வாடும் வறியவர்களின் பசிப்பிணியை போக்க தன் திருக்கரங்களால் அக்னியை மூட்டி இன்று வரை 150 ஆண்டுகளுக்கும் மேலாக அணையா அடுப்பாக இருந்து சாதி, மதம், இனம், மொழி, நிறம் ஆகியவைகளை கடந்து அனைத்து உயிர்களையும் அரவணைத்து ஓர் சமரசப் புரட்சியை நிலைநாட்டினார் எம்பெருமான்.

"பசியோடு வந்தாரை பார்க்கவும் நேரீர் பழங்கஞ்சியாயினும் வழங்கவும் நினையீர் "

என்ற திருஅருட்பா பாடல்கள் மூலமாக மரணமில்லா பெருவாழ்விற்கு முதல்படியாக அமைவது ஜீவகாருண்யம் எனும் பசியாற்றுவித்தல் மாத்திரந்தான் என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளார்.மேலும்

எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும் 
          தம்உயிர்போல் எண்ணி உள்ளே 
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் 
யாவர்அவர் உளந்தான் சுத்த 
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும் 
இடம்எனநான் தெரிந்தேன் அந்த 

வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன் 
          சிந்தைமிக விழைந்த தாலோ.

இப்படி பல பாடல்களின் வாயிலாக பசியாற்றுவித்தலின் மகத்துவத்தை நமக்கு எடுத்துரைத்து இயம்புகிறார். 

மண் திணி ஞாலத்து 
உண்டி கொடுத்தோர்
உயிர் கொடுத்தோரே

என்று புறநானூறும், மணிமேகலையும் அன்னதானத்தின் மகிமையைக் கூறுகின்றன.

இன்றைக்கு நமது நாட்டில் குறிப்பாக சித்தர்களும், மாமுனிவர்களும், எண்ணற்ற அறவோர்களும் அவதரித்த செந்தமிழ்நாட்டில் நீதி தவறிய அரசும், குற்றச்செயல்களும் நிறைந்து இயற்கைக்கு மாறான வகையிலே ஆன்மீகத்தை தவறாக பயன்படுத்தி கள், காமம், பொய், கொலை, களவு போன்ற பஞ்சமாபாதக செயல்களை செய்து வருவதால்தான் இயற்கை பேரிடர்களான சுனாமி, தானே புயல், வார்தா புயல், பெருமழை, கடும் வெயில்,  வெயில் காலத்தில் மழை பெய்வதும், மழைகாலத்தில் வெயில் அடிப்பதும் வழக்கமாகிவிட்டது.  காரணம்  இயற்கைக்கு மாறாக நாம் நடந்து கொண்டால் நமக்கு மாறாக இயற்கை நடக்கும். இனியாவது உணர்ந்து சிந்தித்து தர்மத்தின்படி அன்னதானத்தின் மகத்துவத்தை அறிந்து அன்னதானம் செய்து இன்புற்று வாழ்வோம்.

உணவு அளிப்பதனால் உதரம் (வயிறு) நிறைந்து, உள்ளம் குளிர்ந்ததால் பசியாறுபவர்களின் வாழ்த்துக்கள் வீண் போலதில்லை. எவ்வித பிரதிபலனும் பாராமல்  அன்னதானம் செய்வோருக்கு ஊழ்வினையாலும், அஜாக்கிரதையினாலும், துன்பத்தாலும் சத்தியமாக எவ்விதமான ஆபத்துகளும் அண்டாது என்பதை திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் இறைவன் மீதே ஆணையிட்டு கூறுகிறார். அதளால் ஆன்மலாபம் அடைந்து. புண்ணிபலமும் கிடைக்கின்றது. அன்னதானத்தில்  பங்கு கொள்வோம் ! அளவற்ற புண்ணியம் பெறுவோம் !!


தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னை மாநகர் வேளச்சேரியில்  1997-ம் ஆண்டு முதல் பசியால் வாடும் துயர் அறிந்து சிறுசேவையாக  தொடங்கி 2007- ம் ஆண்டு ஓர் அரசு பதிவு பெற்ற ஆன்மநேய அறத்தொண்டு நிறுவனமாக தீபம் அறக்கட்டளை கடந்த 11 ஆண்டுகாலமாக நாளொரு  மேனியும் பொழுதொரு வண்ணமாய் தினசரி
நித்ய தீப தருமச்சாலை வாயிலாகவும், 


நடமாடும் தருச்சாலை வாயிலாகவும்,


1.கொஞ்சிமங்கலம்
2.கேணிப்பட்டு
3,சென்னை கல்குட்டை
4,சென்னை அம்பேக்தார் நகர்
5,சென்னை கந்தன் சாவடி
6, தேவதாளம்பேட்டை
7,கெங்கவரம்
8, நெய்வேலி பெரியகுறிச்சி
9, மாங்குடி
9, சிவனாகரம்
10,திருவீழிமிழலை
11,கோவிந்தகுடி
12,சக்கர படித்துறை
13,ஸ்வாமிமலை
14,ஏழூர்குறிச்சி
15,மதுராந்தகம்
16,இருங்கூர்

உள்பட தமிழகம் முழுவதும் 19 தருமச்சாலைகளின் மூலமாக தினசரி காலை பல்லாயிரக்கணக்கானோருக்கு கஞ்சி வார்த்தல் சேவையும், தினசரி பல நூற்றுக்கணக்கான வறியவர்களுக்கு பசியாற்றுவித்தல் சேவையும் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பெருங்கருணையாலும்,  தயா உள்ளம் கொண்ட தயவாளர்களின பெருந்தயவாலும், ஓயாது உழைக்கின்ற ஆடுகின்ற சேவடிகளின் கடுமையான உழைப்பாலும் சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது. கிடைப்பதற்கரிய இநீத மாசில்லா தொண்டில் தாங்களும் பங்கு பெற்று உழைப்பாகவோ, நிதியாகவோ, பொருளாகவோ வாரி வழங்கி ஆன்மலாபம் பெற்று இன்புற்று வாழ அன்புடன் அழைக்கின்றோம்.


Helpful Links

-- 
With Regards
DEEPAM TRUST
30,Throwpathi Amman Kovil Street, Velachery, Chennai - 600 042Phone : 044-2244 2515 | Cell: 94440 73635
Email : admin@deepamtrust.in
Web : www.deepamtrust.org

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...