Thursday, 22 November 2018

கஜா புயல் - உணவு தயாராகிக்கொண்டிருக்கின்றன

சென்னை வேளச்சேரி  தீபம் அறக்கட்டளையில் இருந்து நேற்று இரவு சென்ற தீபம் சேவதாரிகள் காலை நாகப்பட்டினம் சென்றடைந்தனர். புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு வழங்க முழு வீச்சில் சேவை செய்து கொண்டுள்ளனர்.









பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் தீபம் அறக்கட்டளை வங்கி கணக்கிற்கு  நிதியாக அளிக்கலாம்.
Account Name : Deepam Trust
Account No : 30265475129
Bank : State Bank of India
Branch : IIT Madras, Chennai – 600 036
IFSC Code : SBIN0001055

Wednesday, 21 November 2018

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வழங்குவதற்கு தீபம் அறக்கட்டளை சேவதாரிகள் நேற்று இரவு 2 வாகனங்கள் மூலம் சென்றுள்ளனர்.ஒரு வாரகாலம் தங்கி சேவை செய்ய உள்ளனர்.








பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் தீபம் அறக்கட்டளை வங்கி எண்ணிற்கு நிதியாக அளிக்கலாம்.
Account Name : Deepam Trust
Account No : 30265475129
Bank : State Bank of India
Branch : IIT Madras, Chennai – 600 036
IFSC Code : SBIN0001055

Tuesday, 20 November 2018

டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயர் துடைக்க, கைகோர்க்க அழைக்கின்றோம்

ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்
- திருஅருட்பிரகாசர்



கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, வேதாரண்யம்,  உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உணவின்றி தவிக்கின்ற, ஆகாரத்தை எதிர்பார்த்து வருந்துகின்ற சகோதர, சகோதரிகளுக்கு நேரடியாக சென்று, கிராமம் கிராமமாக பார்வையிட்டு, அந்தந்த இடங்களிலும், கிராமங்களிலும் ஒரு வார காலம் உணவு தயார் செய்து பசிப்பிணியை போக்கிட, டாடா ஏஸ்  வாகனத்தில் மூலம்  நடமாடும் அன்னதானம்.

இயற்கையின் சீற்றமான கஜா புயலினால் புரட்டி போடப்பட்ட டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர், வேதாரண்யம்,  மாவட்ட மக்களின் கண்ணீர் நம் கண் முன்னே வந்து செல்கிறது. வேதனையின் விளிம்பில் வாழும் மக்களின் பசிப்பிணி போக்க, துயர் துடைக்க 21-11-2018 புதன் முதல், சுமார் ஒரு வார காலம் கிராமம், கிராமமாக ஆங்காங்கே  தங்கி உணவை தயார் செய்து அன்னதான சேவை புரிந்திட, சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை, விழுப்புரம் வள்ளலார் அருள்மாளிகை அறக்கட்டளை இணைந்து நிகழ்த்தும் ஜீவகாருண்ய திருப்பணிக்கு சேவாதாரிகள் புறப்பட இருக்கிறார்கள். அது சமயம் தொண்டு செய்ய ஆர்வம் உள்ள அன்பர்களை வணங்கி வரவேற்கிறோம்.

அன்னதானத்திற்கு தேவையான அரிசி, மளிகை, காய்கறி, எரிபொருள், மற்றும்  கருணை நிதியை வாரி வாரி வழங்கி  ஆன்ம லாபம் அடைய அன்புடன் வரவேற்கிறோம்.

சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையிலிருந்து இரண்டு வாகனங்கள் இன்று இரவு (21.11.18-புதன்) புறப்படுகின்றன.

தொடர்பிற்கு.-
தீபம் அறக்கட்டளை
www.deepamtrust.org
வேளச்சேரி, சென்னை.
கைபேசி: 9444073635
ஜோதி சதுரகிரியார்
கைபேசி: 9789494009

விழுப்புரம் வள்ளலார் அருள் மாளிகை அறக்கட்டளை.
ஜெய. அண்ணாமலை
கைபேசி:9994856314

தீபநெறி 2018 - நவம்பர் மாத மின்னிதழ்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் கட்டணமில்லா தீபநெறி சன்மார்க்க தமிழ் மாத இதழை கடந்த 9 ஆண்டுகளாக தீபத்தின் நன்கொடையாளர்களுக்கும், சன்மார்க்கிகளுக்கும், நலம் விரும்பிகளுக்கும், ஒவ்வொரு மாதமும் 27ஆம் தேதியன்று தபாலில் அனுப்புகிறோம்.
இதழ் (printed hard copy) விரும்புவோர் பெயர், கைபேசி எண் & முழு முகவரியை இந்த https://goo.gl/forms/16OVQfmJp6aieFjD2 லிங்கில் பதிவுசெய்தால்  இலவசமாக அனுப்ப தயாராக உள்ளோம் அல்லது 94440 73635 / 044-22442515 என்ற எண்ணிற்கு மேற்கூறிய தகவல்களை  வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பவும்.























19.11.2018 - சக்கரா படித்துறை தருமச்சாலை




திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் 20 தருமச்சாலைகளில் ஒன்றான தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சக்கரா படித்துறை தருமச்சாலையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான அன்பர்களுக்கு அன்னக்கஞ்சி வழங்கப்படும் அற்புதமான காட்சியை படத்தில் காணுங்கள். 

Wednesday, 31 October 2018

மாதாந்திர முதல் சனிக்கிழமை சிறப்பு சன்மார்க்க சொற்பொழிவு


சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின்  நித்ய தீப தருமச்சாலையில்.
மாதாந்திர முதல் சனிக்கிழமை சிறப்பு சன்மார்க்க சொற்பொழிவு.

நாள்: 03-11-2018
நேரம்: மாலை 6-00 மணிமுதல்
தலைப்பு:
உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு
உரையாற்றுபவர்: 
ஆன்மநேய அன்பு சகோதரி,
சன்மார்க்க மௌன போராளி   தயவுமிகு பிரபாவதி அம்மையார் அவர்கள், நிறுவனர், A.P.J. கருணை அறக்கட்டளை, கொளத்தூர், சென்னை.
சொற்பொழிவு முடிந்தவுடன் அன்னதானம் நடைபெறும்.

சொற்பொழிவு நடைபெறும் இடம்:
நித்ய தீப தருமச்சாலை
7/8, புத்தேரிக்கரை தெரு
வேளச்சேரி, சென்னை-600042
(தண்டீஸ்வரம் சிவாலயம் கிழக்கு மாடத்தெரு)

குறிப்பு: நிகழ்ச்சி சரியான நேரத்தில் துவங்கவுள்ளதால் அனைவரும் முன்கூட்டியே வருகைதந்து  ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்.

அனைவரும் வருக...
அருளமுதம் பெறுக...

அன்புடன் அழைக்கும்...
உங்கள் வேளச்சேரி
தீபம் அறக்கட்டளை
9444073635
04422442515
www.deepamtrust.org

Sunday, 28 October 2018

28.10.2108 - இன்று 10 இடங்களில் தீபாவளி இனிப்புகளும், உணவும் தரப்பட்டன.








Food & Diwali sweets were distributed at the following homes:

1) Annals Childran home
2) Roshini home
3) Idhya Vasal Elders home
4) Love care center
5) Sri Sathyanarayana charitable trust
6) Karuani illam
7) Jeroham Children home
8) Ramalinga home
9) Annai parvi aatror Sangam
10) Ganapathy Sachidanandam Ashram

Total 10 homes

வள்ளலார் வரலாறு கேள்வி ஞானப் போட்டி

🌺✨ வள்ளலார் வரலாறு கேள்வி ஞானப் போட்டி ✨🌺 📚 A Group – 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை 📚 B Group – 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு ...