Sunday 12 April 2020

தீபம் அறக்கட்டளையின் நன்கொடையாளர்களுக்கு

அன்பார்ந்த தீபம் அறக்கட்டளையின் நன்கொடையாளர்களுக்கு,

வணக்கம் வந்தனம்!!!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
"அரசின் ஊரடங்கு, வீடடங்கு சிறப்பு தான்; ஆனால் சில குடும்பங்களில் உலையடங்கி விட்டதால், குடலடங்க மறுக்கிறதே! (ஏழையின் வயிறு பசிக்கிறதே)".

தற்போது மனித சமுதாயம் கொரோனா என்ற கொடிய வைரசால், இதுவரை கண்டிராத ஓர் புதிய வித்தியாசமான, கடினமான, மிகக் கடினமான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

இச்சூழ்நிலையில் மத்திய மாநில அரசுகள், பல்வேறு துறை அதிகாரிகளும், ஊழியர்களும் அற்புதமாக செயல்பட்டு, மக்களை பல்வேறு வகைகளில் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
🧪🧪🧪🧪🧪🧪🧪🧪🧪🧪🧪🧪
மேலும், பசிக்காக கஷ்டப்படும் மக்களுக்கு, ஏழைகளுக்கு, ஆதரவற்றவர்களுக்கு, ஆங்காங்கே மனிதநேயம் கொண்ட அன்பு உள்ளங்களால், அவரவர் சக்திக்கேற்ப, தனித்தனியாகவும் அமைப்புகளாகவும், அரசாங்க அனுமதியோடு உணவை, பொட்டலங்களாக கொடுத்து, தேடிச்சென்று பசியை ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள்.  இத்தருணத்தில்  ஒன்றுபட்ட மனித நேயத்தை, ஆன்ம நேயத்தை, ஜாதி மதங்களை தாண்டிய ஒருமைப்பாட்டு உரிமையை,  பார்க்கும்பொழுது இவ்வுலகத்தில், இக்கலியுகத்தில் (இதற்கு முந்தைய யுகங்கள்:  கிரேதா யுகம், திரேதா யுகம்,  துவாபர யுகம்) இன்னும் இப்பூவுலகில்  தர்மம் தழைத்தோங்கி கொண்டிருக்கிறது என்றே உணர தோன்றுகிறது.

இத்தருணத்தில் மக்களின் பசியை போக்க காரணமாக உள்ள மூன்று தெய்வங்கள் கண்முன்னே தோன்றுகிறார்கள். அவர்கள்: 1) கடவுள் எனும் முதலாளி - விவசாயிகள்
2) பிறர் பசியை தன் பசியாக  கருதி தொடர்ந்து தானதர்மம் செய்பவர்கள்
3) பசித்தவர்களின் பசியைப் போக்க ஆகாரம் அளிப்பதே வாழ்வின் லட்சியம் என்று தொடர்ந்து அன்னமிடக்கூடிய சேவடிகள். 
அப்படிப்பட்ட அருளாளர்களின் தெய்வ பாதங்களை வணங்கி மகிழ்கிறோம். "அன்பு, கருணை, நன்றி உள்ளவர்கள் மனித வடிவில் தெய்வம்".

கொரோனா வைரஸ்  தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற, பாதுகாக்க, கங்குலும் (இரவும்) பகலும் அயராது உழைக்கும் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், காவல்துறை நண்பர்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும், பல்வேறு துறையை சார்ந்த அன்பு உள்ளங்களுக்கும், தீபம் அறக்கட்டளையின் கோடானுகோடி நன்றிகள் சமர்ப்பணம்.
🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் நாள் தோறும் உணவு தயாரித்து, தர்ம சாலையை தேடி வருபவர்களுக்கும், பசியோடு இருப்பவர்களை தேடிச் சென்றும், உணவு கொடுத்து பசியாறிக் கொண்டிருப்பது தாங்கள் அறிந்ததே.
🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚
மேலும் சென்னை வேளச்சேரி கல் குட்டை பகுதியிலுள்ள மிகவும் பின்தங்கிய குடிசை வீடுகளில் வாழும், குறைந்தது 200-300 ஏழை எளிய குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசியை, (தீபம் பெறும் உதவியைப் பொறுத்து) ஓரிரு நாட்களில், நேரில் சென்று கொடுக்க விழைகிறோம்.
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
இந்த அற்புத அன்னதான சமுதாய திருத்தொண்டில், நிதியும், பொருளும், தொண்டு செய்ய சேவடிகளும், தேவை. விருப்பமுள்ளவர்கள், இரக்கம் உள்ளவர்கள் தங்கள் அருள்நிதியை அள்ளிக் கொடுத்து மகிழலாம்.

தர்ம குணத்தை நம்மிடையே வளர்த்துக் கொள்வதற்கும், நம்மைச் சார்ந்த உற்றார் உறவினர், சொந்த பந்தங்களுக்கு, தர்மத்தை பரப்பக்கூடிய பாக்கியமும், நாம் உருவாக்கிக் கொள்வோம்.(If you wish, you can forward this to your group members).

வீட்டில் இருக்கும் ஒரு சாரார்
அடுத்த வேளை
என்ன சாப்பாடு செய்வது என்று "யோசித்துக்" கொண்டிருக்கிறோம்.
ஆனால் மறுசாரார், ஆதரவற்றவர்கள்,  அடுத்த வேளை
சாப்பாட்டிற்கு என்ன செய்வது எங்கே போவது யாரிடம் கேட்பது என்று "யாசித்துக்" கொண்டிருக்கிறார்கள்.
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
தர்மம் செய்வோம் !!!
தயவுடன் வாழ்வோம்!!!
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
தயவுடன் ...
என்றென்றும் சமுதாயப் பணியில் ...
தீபம் அறக்கட்டளை
சென்னை வேளச்சேரி
9444073635

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...