Thursday, 30 April 2020

ஊரடங்கு: தேடிச்சென்று அன்னம் அளித்தல்

தினசரி தீபம் அறக்கட்டளையின் சார்பாக எவ்வித ஆதாரமும் இல்லாத பசித்த ஏழைகளின் பசிக்குறிப்பறிந்து நித்திய தீப தருமச்சாலையில் அவர்களின் பசிப்பிணியைப் போக்கும் காட்சிகள் சில...






தருமச்சாலையில் பகலிலும் இரவிலும் தொடர்ந்து பசியாற்றி வித்தல் நடைபெறுகிறது.
தீபம் அறக் கட்டளை
சென்னை வேளச்சேரி
9444073635

இன்று தர்ம சாலையில் நடைபெற்ற அன்னதான நிகழ்வுகள்





Wednesday, 29 April 2020

தினசரி தீபம் அறக்கட்டளையின் சார்பாக எவ்வித ஆதாரமும் இல்லாத பசித்த ஏழைகளின் பசிக்குறிப்பறிந்து நித்திய தீப தருமச்சாலையில் அவர்களின் பசிப்பிணியைப் போக்கும் காட்சிகள் சில...












தருமச்சாலையில் பகலிலும் இரவிலும் தொடர்ந்து பசியாற்றி வித்தல் நடைபெறுகிறது.
தீபம் அறக் கட்டளை
சென்னை வேளச்சேரி
9444073635

Thursday, 16 April 2020

உலகம் கண்டிராத கொரோனா யுத்தம்

தீபத்தின் பிரார்த்தனை:
இறைவா!!!

ஒரு ஜீவன் கூட பசியோடு இருக்கக்கூடாது.
ஒரு ஜீவன் கூட பசியோடு வாடக் கூடாது.
ஒரு ஜீவன் கூட பசியோடு இறக்கக் கூடாது.

எங்களுக்கும் கொரோனா பயம் இருக்கிறது. ஆனால் சமுதாயத்தில் பசியோடு இருபவர்களை காணும்போது, வீட்டில் முடங்கிக் கிடக்க முடியவில்லை. தன் உயிரை விட சமுதாயத்தில் பசியோடு இருப்பவர்களின் பசியைப் போக்குவதே தலையாய லட்சியமாக தீபம் அறக்கட்டளை செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.




உணவு பெற்ற சந்தோஷத்தில் குழந்தையின் முகத்தை பத்து நொடிகள் பாருங்கள். ஏழையின் சிரிப்பில் 100%  இறைவனை காணலாம்.

பட்டினி இல்லா பாரதம் படைப்போம்!!!
🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚
தயவுடன் ...
தீபம் அறக்கட்டளை
சென்னை வேளச்சேரி
9444073635

Sunday, 12 April 2020

தீபம் அறக்கட்டளையின் நன்கொடையாளர்களுக்கு

அன்பார்ந்த தீபம் அறக்கட்டளையின் நன்கொடையாளர்களுக்கு,

வணக்கம் வந்தனம்!!!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
"அரசின் ஊரடங்கு, வீடடங்கு சிறப்பு தான்; ஆனால் சில குடும்பங்களில் உலையடங்கி விட்டதால், குடலடங்க மறுக்கிறதே! (ஏழையின் வயிறு பசிக்கிறதே)".

தற்போது மனித சமுதாயம் கொரோனா என்ற கொடிய வைரசால், இதுவரை கண்டிராத ஓர் புதிய வித்தியாசமான, கடினமான, மிகக் கடினமான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

இச்சூழ்நிலையில் மத்திய மாநில அரசுகள், பல்வேறு துறை அதிகாரிகளும், ஊழியர்களும் அற்புதமாக செயல்பட்டு, மக்களை பல்வேறு வகைகளில் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
🧪🧪🧪🧪🧪🧪🧪🧪🧪🧪🧪🧪
மேலும், பசிக்காக கஷ்டப்படும் மக்களுக்கு, ஏழைகளுக்கு, ஆதரவற்றவர்களுக்கு, ஆங்காங்கே மனிதநேயம் கொண்ட அன்பு உள்ளங்களால், அவரவர் சக்திக்கேற்ப, தனித்தனியாகவும் அமைப்புகளாகவும், அரசாங்க அனுமதியோடு உணவை, பொட்டலங்களாக கொடுத்து, தேடிச்சென்று பசியை ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள்.  இத்தருணத்தில்  ஒன்றுபட்ட மனித நேயத்தை, ஆன்ம நேயத்தை, ஜாதி மதங்களை தாண்டிய ஒருமைப்பாட்டு உரிமையை,  பார்க்கும்பொழுது இவ்வுலகத்தில், இக்கலியுகத்தில் (இதற்கு முந்தைய யுகங்கள்:  கிரேதா யுகம், திரேதா யுகம்,  துவாபர யுகம்) இன்னும் இப்பூவுலகில்  தர்மம் தழைத்தோங்கி கொண்டிருக்கிறது என்றே உணர தோன்றுகிறது.

இத்தருணத்தில் மக்களின் பசியை போக்க காரணமாக உள்ள மூன்று தெய்வங்கள் கண்முன்னே தோன்றுகிறார்கள். அவர்கள்: 1) கடவுள் எனும் முதலாளி - விவசாயிகள்
2) பிறர் பசியை தன் பசியாக  கருதி தொடர்ந்து தானதர்மம் செய்பவர்கள்
3) பசித்தவர்களின் பசியைப் போக்க ஆகாரம் அளிப்பதே வாழ்வின் லட்சியம் என்று தொடர்ந்து அன்னமிடக்கூடிய சேவடிகள். 
அப்படிப்பட்ட அருளாளர்களின் தெய்வ பாதங்களை வணங்கி மகிழ்கிறோம். "அன்பு, கருணை, நன்றி உள்ளவர்கள் மனித வடிவில் தெய்வம்".

கொரோனா வைரஸ்  தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற, பாதுகாக்க, கங்குலும் (இரவும்) பகலும் அயராது உழைக்கும் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், காவல்துறை நண்பர்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும், பல்வேறு துறையை சார்ந்த அன்பு உள்ளங்களுக்கும், தீபம் அறக்கட்டளையின் கோடானுகோடி நன்றிகள் சமர்ப்பணம்.
🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் நாள் தோறும் உணவு தயாரித்து, தர்ம சாலையை தேடி வருபவர்களுக்கும், பசியோடு இருப்பவர்களை தேடிச் சென்றும், உணவு கொடுத்து பசியாறிக் கொண்டிருப்பது தாங்கள் அறிந்ததே.
🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚
மேலும் சென்னை வேளச்சேரி கல் குட்டை பகுதியிலுள்ள மிகவும் பின்தங்கிய குடிசை வீடுகளில் வாழும், குறைந்தது 200-300 ஏழை எளிய குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசியை, (தீபம் பெறும் உதவியைப் பொறுத்து) ஓரிரு நாட்களில், நேரில் சென்று கொடுக்க விழைகிறோம்.
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
இந்த அற்புத அன்னதான சமுதாய திருத்தொண்டில், நிதியும், பொருளும், தொண்டு செய்ய சேவடிகளும், தேவை. விருப்பமுள்ளவர்கள், இரக்கம் உள்ளவர்கள் தங்கள் அருள்நிதியை அள்ளிக் கொடுத்து மகிழலாம்.

தர்ம குணத்தை நம்மிடையே வளர்த்துக் கொள்வதற்கும், நம்மைச் சார்ந்த உற்றார் உறவினர், சொந்த பந்தங்களுக்கு, தர்மத்தை பரப்பக்கூடிய பாக்கியமும், நாம் உருவாக்கிக் கொள்வோம்.(If you wish, you can forward this to your group members).

வீட்டில் இருக்கும் ஒரு சாரார்
அடுத்த வேளை
என்ன சாப்பாடு செய்வது என்று "யோசித்துக்" கொண்டிருக்கிறோம்.
ஆனால் மறுசாரார், ஆதரவற்றவர்கள்,  அடுத்த வேளை
சாப்பாட்டிற்கு என்ன செய்வது எங்கே போவது யாரிடம் கேட்பது என்று "யாசித்துக்" கொண்டிருக்கிறார்கள்.
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
தர்மம் செய்வோம் !!!
தயவுடன் வாழ்வோம்!!!
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
தயவுடன் ...
என்றென்றும் சமுதாயப் பணியில் ...
தீபம் அறக்கட்டளை
சென்னை வேளச்சேரி
9444073635

Sunday, 5 April 2020

தீபம் அறக்கட்டளையின் தினசரி, வாராந்திர, மாதாந்திர, வருடாந்திர, சமுதாய பணிகள்

பத்தின் தீபங்களே!

வணக்கம் வந்தனம்!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!!

தீபம் அறக்கட்டளையின்   தினசரி, வாராந்திர, மாதாந்திர, வருடாந்திர, சமுதாய பணிகள்:

a) தினசரி பசியாற்றிவித்தல்
     i) ஆகாரம் தருதல்
    ii) மூலிகை கஞ்சி தருதல்
a) ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்தல்
b) பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்தல்
c) ஏழை எளியவர்களுக்கு பழைய ஆடைகள் மற்றும் புத்தாடைகள் வழங்குதல்
d) பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்
e) மாதந்தோறும் பூச நன்னாளில் வடலூர் சத்திய தருமச்சாலையில் அன்னதான தொண்டு செய்தல்
f) மாற்றுத் திறனாளிகள் மற்றும் பார்வையற்றவர்களுக்கு மாதந்தோறும் அவர்கள் குடும்பத்திற்காக உணவிற்காக அரிசி மளிகைப் பொருட்கள் வழங்குதல்
g) ரயிலில் பொருட்கள் விற்கும் பார்வையற்றவர்களுக்கு வாழ்வாதார உதவி செய்தல்
h) வாரம் தோறும் வியாழக்கிழமைகளில் நித்ய தருமச்சாலையில் கூட்டு வழிபாடு
i) கோடை காலங்களில் தாகம் தணிக்க தொடர்ந்து நீர்மோர் வழங்குதல்
j) சென்னை மற்றும் சுற்றியுள்ள இடங்களில் முதியோர் இல்லங்கள் குழந்தைகள் காப்பகங்களுக்கு உதவி செய்தல் மற்றும் அன்னமிடல்
k) மாதாந்திர சித்த மருத்துவ முகாம் நடத்துதல்
l) மாதந்தோறும் சன்மார்க சொற்பொழிவுகள் நடத்துதல்
m) மார்கழி குளிரில் ஆதரவற்ற ரோட்டோரம் வாழ்பவர்களுக்கு போர்வைகள் வழங்குதல்
k) மற்றும் பல்வேறு சமுதாய நலப் பணிகள் தினந்தோறும், மாதந்தோறும், வாரம்தோறும், வருடம் தோறும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.

தங்களின் பேராதரவிற்கும் பேருதவிக்கும் கோடான கோடி நன்றியை தீபம் பதிவு செய்து மகிழ்கிறது.

தீபம் அறக்கட்டளையின் பல்வேறு சமுதாய பணிகளின் பதிவுகளை தங்களுக்கு சாப்ட் காப்பியாக சமர்ப்பித்து மகிழ்கிறோம்.  கண்டு மகிழுங்கள்:

 http://deepamtrust.org/social-activities/
 http://deepamtrust.org/profile/

எல்லா புகழும் தீபம் அறக்கட்டளையின் நன்கொடையாளர்களுக்கே!

தர்மம் செய்வோம் !!!
தயவுடன் வாழ்வோம் !!!

தீபம் அறக்கட்டளை
சென்னை வேளச்சேரி
9444073635

Wednesday, 1 April 2020

தினசரி ஆயிரக்கணக்கானவர்களுக்கு ஆகாரம் கொடுத்து பசியாற்றிவித்தல்


தயவுடையீர்,
வணக்கம் வந்தனம்!!! இவ்வுலகில் ஒரு ஜீவன் கூட பசியோடு வாடக்கூடாது ; பசியோடு இருக்கக்கூடாது ; பசியோடு இறக்கக் கூடாது. - தீபத்தின் தினசரி பிரார்த்தனை *(பட்டினியில்லா உலகத்தை உருவாக்குவோம்)* *உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எல்லாம் விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க சுத்த சன்மார்க்க சுகநிலை பெறுக - திருஅருட்பா* கொரோனா வைரஸ் பரவல் பேரிடரால் போர்க்கால அடிப்படையில் *சென்னை வேளச்சேரி* நித்ய தீப தர்மச்சாலையிலும், மதுராந்தகம் நித்ய தீப தர்மச்சாலையிலும், கொஞ்சிமங்களம் நித்ய தீப தர்மச்சாலையிலும், தேவதானம் பேட்டை நித்ய தீப தர்மச்சாலையிலும், கங்காவரம் நித்ய தீப தர்மச்சாலையிலும், வாழைப்பந்தல் நித்ய தீப தர்மச்சாலையிலும் தொடர்ந்து பசித்தவர்களுக்கு *சில நல் உள்ளங்களின் பேராதரவோடு* தினசரி ஆயிரக்கணக்கானவர்களுக்கு ஆகாரம் கொடுத்து பசியாற்றிவித்தல் செய்து கொண்டிருக்கிறது. தினசரி நடைபெறும் தொடர் அன்னதான ஜீவகாருண்ய திருப்பணியை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் திருவருளால், திரு அருட்பிரகாச வள்ளலார் ஐயா தோன்றாத் துணையாக இருந்து கொண்டு நடத்திக் கொண்டிருக்கிறார். 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 23 ஆண்டுகளாக பல்வேறு அறப்பணிகளுடன், பல்வேறு தர்ம சாலைகள் மூலம் பல லட்சம் பேருடைய பசியைப் போக்கிய, தொடர்ந்து பசிக்கு ஆகாரம் கொடுத்துக்கொண்டிருக்கும் தீபம் அறக்கட்டளை, இதோ இந்த கடினமான சூழ்நிலையிலும், இக்கட்டான சூழ்நிலையிலும், நிதி நெருக்கடியிலும், சமுதாயத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பின்தங்கியவர்களுக்கு, ஆதரவற்றவர்களுக்கு, தர்மசாலையை தேடி வருபவர்களுக்கு, நாடி வருபவர்களுக்கு அவர்களின் பசி குறித்த தன்மையை உணர்ந்து, தீபம் அறக்கட்டளை பசியை கால நேரம் கருதாது, பசித்த சமுதாய மக்களுக்கு தொடர்ந்து ஆகாரம் கொடுத்து மகிழ்வித்துக் கொண்டிருக்கிறது. (மனதை நெகிழ வைக்கும் - *படமுடியாது இனி துயரம்* - என்ற திருஅருட்பா இசையுடன் தீபத்தின் தினசரி அன்னதான பணிகளை 3 நிமிட வீடியோவாக, இத்துடன் இணைத்து, தீபம் அறக்கட்டளையின் தொடர் நன்கொடையாளர்களுக்கு சமர்ப்பிக்கிறோம்).


*இறைவனிடம் பிரார்த்தனை* 🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️ *தப்பேது நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும்* - திருவருட்பா. இறைவா ! உலகிலுள்ள மக்கள் செய்யக்கூடிய தவறுகளை மன்னித்து, உலகம் முழுவதும் உள்ள மனித உயிர்களை பயமுறுத்திக் கொண்டிருக்கக்கூடிய, கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து, மக்களை விரைவில், அதிவிரைவில் *காப்பாற்றுங்கள் இறைவா* என்று மனமுருகி பிரார்த்திக்கிறோம்!!! 🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️ பிறர் பசியைப் போக்க வேண்டும், சமுதாயத்திற்கு உதவ வேண்டும், தர்மம் செய்ய வேண்டும் என்ற *தெய்வீக குணங்களை கொண்ட தர்மவான்கள்,* தங்களுடைய நன்கொடைகளை, அருள் நிதியை, குண நிதியை, கருணா நிதியை, தீபம் அறக்கட்டளை வங்கி கணக்கில் வங்கி பரிமாற்றமாக மட்டுமே செலுத்துமாறு வேண்டுகிறோம். வங்கி விவரங்களை கீழே கொடுத்துள்ளோம். இதோ அடுத்த நிதியாண்டு ஆரம்பித்துவிட்டது. நிதியாண்டு தர்மத்தோடு ஆரம்பம் ஆகட்டும். தர்மம் செய்து சமுதாயத்தில் உள்ள ஏழைகளின் பசியைப் போக்குவோம். ஆண்டவனுடைய அருள் பெறுவோம். *வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்* என்ற குறளுக்கு ஏற்ப நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள அரிதிலும் அரிதான மனிதப்பிறவியின் மேன்மையை உணர்ந்து வாழ்வாங்கு வாழ்வோம். தங்களிடம் இருந்து பெறப்படும் அனைத்து நன்கொடைகளும், திரும்பவும் *சமுதாயத்திற்கே பயன்படுத்தப்படுகின்றன* என்பதை தீபம் உறுதி செய்கிறது. தீபம் அறக்கட்டளை ஓர் அரசு பதிவுபெற்ற, தணிக்கைக்கு உட்பட்ட, வரிவிலக்கு அளிக்கப்பட்ட, பொது தர்ம ஸ்தாபனம். 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥 மேலும் தீபம் அறக்கட்டளைக்கு எல்லாம் வல்ல இறைவன், அன்னதான பணிகளுக்காக, அறப்பணிகளுக்காக, சொந்த தர்மசாலை கட்டிடத்தையும், அதற்கான இடத்தையும், சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரம் கோவில் அருகில் *"நித்ய தீப தர்மசாலை வளாகமாக ... வள்ளலார் கோட்டமாக..."* அமைத்துக் கொடுத்திருக்கிறார். தருமச்சாலை கட்டிட திருப்பணிக்காக இதுவரை தீபம் சில லட்சங்களை வட்டி கடனாகவும், வட்டியில்லா கடனாக பெற்று, தருமச்சாலை கட்டிடத்திருப்பணியை முடித்து இருக்கிறது. *அறக்கட்டளைக்கு இன்னும் சில லட்சம் கடன் இருக்கிறது.* கடனை வட்டியுடன், இன்னும் ஒரு சில மாதங்களில் திருப்பி தரவேண்டிய சூழ்நிலையில் தீபம் இருக்கிறது. தர்மசாலை கட்டிடத்திற்கு அவரவர் தங்கள் சக்திக்கு ஏற்றவாறு, ஆயிரங்களாக ...லட்சங்களாக... தர்மம் செய்து, பாகம் செய்து, எல்லாம் வல்ல இறைவனுடைய அருள் பெற்று, உடல்நலம் மனநலம் பொருள்வளம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று நீடூழி வாழ்க ! பல்லாண்டு வாழ்க! மரணமில்லா பெருவாழ்வு வாழ்க ! என்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறோம். நன்கொடைகளை அளிக்க விரும்பும் அருளாளர்கள், தங்களுடைய நன்கொடைகளை வங்கி பரிமாற்றம் அல்லது காசோலையாக தீபம் அறக் கட்டளையின் பெயருக்கு அனுப்பிய பிறகு, நன்கொடை விவரங்களை 9444073635 என்ற எண்ணுக்கு தெரியப்படுத்தவும். 🌾🍚🌾🍚🌾🍚🌾🍚🌾🍚🌾🍚 *Bank Transfer* Let Dharma Spread from Door to Door; Heart to Heart; Person to Person. For Donation thro Bank Transfer: State Bank of India, IIT Madras, Current A/C No.30265475129, DEEPAM Trust, IFS:SBIN0001055; by cheque i.f.o. DEEPAM TRUST No.30, Droupathi Amman Koil Street, Velachery, Chennai 600 042. After transfer, please send your Donation details such as, email ID, purpose, date of AD etc.to: 9444073635 🌾🍚🌾🍚🌾🍚🌾🍚🌾🍚🌾🍚 தீபம் ஓர் பதிவு செய்யப்பட்ட அறத் தொண்டு நிறுவனம் என்பதால், *ரொக்க நன்கொடைகளை முழுவதுமாக தவிர்க்குமாறு விண்ணப்பிக்க

கரோனா பாதிப்பு | நாள் முழுவதும் அன்னதானம் | தீபம் அறக்கட்டளை

ஏழை மாணவ மாணவிகளுக்கு 15ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு, கடந்த 27 ஆண்டுகளாக தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது, தொடர் சமுதாயப்...