எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி பெருங்கருணையினாலும், வாரி வழங்கும் தயா உள்ளம் கொண்ட தங்களின் பெருந்தயவினாலும் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் 10 ஆம் ஆண்டு (2019-2020 ம் கல்வி ஆண்டிற்கான) கல்வி உதவிக்கான நேர்காணல் நேற்று 8.6.2019 ஞாயிற்றுக்கிழமை சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச் சாலையில் நடைபெற்றது.
===========================
தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பில் நன்றாக தேர்ச்சி பெற்ற 84 கிராமப்புற வறுமையில் வாடும் ஏழை எளிய மாணவ மாணவிகள் நேர்காணலில் பெற்றோர்களுடன் கலந்து கொண்டார்கள்.
வருகை தந்த அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பெற்றோர்களுக்கும் வயிறார அன்பான அன்னம் பாலிக்கப்பட்டது. வெளியூரிலிருந்து வந்திருந்த மாணவ மாணவர்களுக்கு conveyance கொடுக்கப்பட்டது.
இதோ சில காட்சிகள் ...
===========================
நேர்காணல் நிகழ்வை மூன்று குழுக்களாக மிகவும் சீரும் சிறப்புற அற்புதமாக
நிகழ்த்திய
பேராசிரியர் முத்துக்குமார் அவர்களையும், அவரை சார்ந்த குழு உறுப்பினர்களையும்
தீபம் நன்றியோடு வாழ்த்தி மகிழ்கிறது.
தாயை இழந்த,
தந்தையை இழந்த,
அல்லது இருவரையும் இழந்த மாணவ மாணவிகள்,
படிப்பதற்கு கல்வி கட்டணம் செலுத்துவதற்கு
மிகவும் வறுமை நிலையில் உள்ளதை நேர்காணல் உணர்வுபூர்வமாக உணர்த்தியது.
மேலும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கூலி வேலை செய்தும், வீடுகளில் பத்து பாத்திரங்களை தேய்த்தும்,
சித்தாள் வேலை செய்தும், தங்களுடைய குழந்தைகளை
படிக்க வைக்க முயற்சிப்பது,
கஷ்டப்படுவது, தீபம் நேர்காணலில் கண்ட உண்மை காட்சியாகும்.===========================
அப்படி பாதிக்கப்பட்ட ஏழை மாணவ மாணவிகள் வாழும் இந்த சமுதாயத்திற்கு உதவுவதற்கு,
அவர்களை படிக்க வைப்பதற்கு,
கல்விக் கட்டணம் செலுத்துவதற்கு,
உதவிகரம் நீட்ட, தீபம் அறக்கட்டளையானது தயா உள்ளம் கொண்ட தங்களிடம் கல்வி உதவிக்கான கருணை நிதியை வேண்டி இருகரம் கூப்பி தங்களிடம் விண்ணப்பிக்கின்றோம்.
===========================வரும் 16.6.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கல்வித் தொகை உதவியை காசோலையாக வழங்க தீபம் முடிவு செய்துள்ளது.
===========================
Estimated Cost of this Project is:
Rs.6 to 7 lakhs.
(இதுவரை தீபம் கல்வி உதவியாக பெற்ற நன்கொடை ரூபாய் 3 லட்சம்)
இந்த செய்தியை கண்ணுறும் நன்கொடையாளர்கள், ஒவ்வொரு தயா உள்ளம் கொண்ட, கருணையுள்ள,
சமுதாய நலம் விரும்பிகள் ஒவ்வொரு மாணவனின் மாணவியின் கல்விக்கு ஒளியேற்றி, அவர்களின் வாழ்வில் வசந்தம் உண்டாக,
வாழ்வு மேம்பட தாங்களும் பாகம் பெற்று குறைந்தது *ஓர் ஏழை மாணவி அல்லது மாணவரை தங்கள் பிள்ளைகளாக பாவித்து, வறுமையின் இருள் நீக்கும் ஒளியாய், வழியாய் கருணை(கல்வி)நிதியை
கல்வி கட்டணம் செலுத்துவதற்குவாரி வழங்கிட வேண்டுமாய் அன்புடன் விண்ணப்பிக்கின்றோம்.
==========================
*அனைத்து மாணவர்களின் கல்வித் தொகை முழுவதும் ஒரே நபர் ஏற்றுக் கொண்டாலும் தீபம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.
ஏழை மாணவர்களின் கல்விக்காக இதுகாறும் பல ஆண்டுகளாக...
தொடர்ந்து கல்வி உதவியை நன்கொடையாக வழங்கிக் கொண்டும்...,
இந்த ஆண்டும் நன்கொடையாக உதவிக்கரம் நீட்டிய, நீட்டக்கூடிய ஆன்மநேய ஒருமைப்பாட்டு அன்பு உள்ளங்களை தீபம் நன்றி கூறி மகிழ்கிறது. தங்களின் பொற்பாதங்களை தொட்டு வணங்கி மகிழ்கிறது.
==========================வாழ்க சமுதாயம் !
வாழ்க சமுதாயத்தில் உள்ள ஏழை மக்கள் !!!
வாழ்க வாழ்க
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !!!
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் !!!
காண வாருங்கள் 16.6.2019 ஞாயிறு அன்று சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்மசாலையில்...
வாழ்த்துக்களுடன்...
நிறுவனர் & நிர்வாகிகள்
தீபம் அறக்கட்டளை
22 வது ஆண்டை நோக்கி வீறுநடை போடும் இது ஓர் அரசு பதிவு பெற்ற, 80G வரிவிலக்கு அளிக்கப்பட்ட ஓர் சமுதாய அறத்தொண்டு நிறுவனம்...!
தொடர்புக்கு: 9444073635தீபம் அறக்கட்டளையின் அனைத்து அறப்பணிகளையும் காண
website:
www.deepamtrust.org
No comments:
Post a Comment