Wednesday, 19 December 2018

மூன்றாம் கட்ட கஜா புயல் நிவாரணம்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் 3-ம் கட்ட கஜா புயல் நிவாரணம்

பேரன்புள்ளம் கொண்ட ஆன்மநேய உடன்பிறப்புக்களே கடந்த மாதம் 15-11-2018 அன்று இயற்கை சீற்றமான கஜா புயலினால் சோழவள நாட்டையே பதம் பார்த்து டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களையே புரட்டி போட்டு ஒரு மாதம் காலம் கடந்தும் மக்களின் அன்றாட வாழ்க்கையையே  கேள்விக்குறியாக்கி, சொந்த மண்ணில் அகதிகளாக, ஆதரவற்றவர்களாக இன்றும் நம் கண் முன்னே காட்சி அளிப்பது சொல்லொண்ணா துயரமாக  இருக்கிறது. 

டெல்டா மாவட்ட மக்களின் துயரத்திலும், துன்பத்திலும் பங்கு கொண்டு பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை தீபம் அறக்கட்டளையின் மூலமாக வாரி வழங்கிய ஆன்மநேய உள்ளங்களை நன்றியுடன் நினைவு கூர்ந்து கடந்த 20-11-2018 அன்று முதல் கட்டமாகவும், 01-12-2018 அன்று இரண்டாம் கட்டமாகவும் சென்று கிராமம், கிராமமாக பயணித்து பல்லாயிரக்கணக்கான ஜீவர்களின் பசிப்பிணியை போக்கி நிவாரணப் பொருட்களை வழங்கிவிட்டு சென்னை திரும்பினோம்.









முதல் கட்ட நிவாரண பணிகளை காண https://deepamtrustvelachery.blogspot.com/2018/11/blog-post_25.html

இரண்டாம் கட்ட நிவாரணம் பணிகளை காண https://deepamtrustvelachery.blogspot.com/2018/12/02122018.html

வீடியோ பதிவை காண



தற்போது தீபம் அறக்கட்டளையின் மூலமாக மூன்றாம் கட்ட கஜா புயல் நிவாரணமாக டெல்டா நோக்கி பயணிக்க உள்ளோம். டெல்டாவில் இருந்து நிவாரணப் பொருட்கள் வேண்டி தீபத்திற்கு விண்ணப்பங்கள் வந்ததை அடுத்து மூன்றாம் கட்ட நிவாரணமாக பசியால் வாடிக் கொண்டு இருக்கும் குறைந்தது 200 குடும்பங்களுக்கு 25Kg அரிசி சிப்பம் வழங்க திருவுள்ளம் கொண்டோம்.

புறப்பாடு: 22.12.18 (சனி இரவு)
அரிசி தருமம் குறைந்தது : 5 டன்

தயா உள்ளம் கொண்ட கொடை வள்ளல்களே, ஈரநெஞ்சினர்களே, கடந்த முறை வாரி வழங்கியது போல் டெல்டா மாவட்ட மக்களின் தயரத்தை மனதில் கொண்டு அவர்களின் வயிற்றுப் பிணியாகிய பசிப்பிணியை போக்க 25Kg அரிசி சிப்பங்களை  வேண்டி தங்கள் அனைவரிடமும் விண்ணப்பிக்கிறோம்.

மூன்றாம் கட்டமாக, 5 டன் அரிசி சிப்பங்களை மட்டுமே எதிர்நோக்கி தங்களின் மேலான தயவை நாடும் ...

சமுதாயப்பணியே
இறைபணி
என உயிர்மூச்சாக,
இரவு பகல், ,
மழை, வெயில், புயல், ஜாதி, மதம் பாராது,
புகழ் விரும்பாது 
உழைக்கும்
உங்கள் வேளச்சேரி 
தீபம் அறக்கட்டளை

தொடர்புக்கு:
தீபம் பாலா
9444073635
www.deepamtrust.org

No comments:

Post a Comment

ஏழை மாணவ மாணவிகளுக்கு 15ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு, கடந்த 27 ஆண்டுகளாக தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது, தொடர் சமுதாயப்...