Sunday, 2 December 2018

02.12.2018 - கஜா பாதித்த டெல்டா மாவட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட நிவாரணம் வழங்கப்பட்டது

இயற்கை பேரிடரான கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களின் துயர் துடைக்க  பசிப்பிணி போக்கியும், பல்வேறு நிவாரண பொருட்களையும் கடந்த 21-11-2018 ம்தேதி முதல் கட்டமாக சென்று தொடர்ந்து நான்கு நாட்களாக நாகப்பட்டினத்தில் முகாமிட்டு வாரி வழங்கி உள்ளதை தாங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.



நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான டெல்டா மாவட்ட மக்களின் பசிப்பிணி நீக்கிய தீபம் அறக்கட்டளை மீண்டும்  இரண்டாம் கட்டமாக பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 6-டன் பொருட்களை எடுத்துக் கொண்டு 02-12-2018 டெல்டா மாவட்டங்களையே புரட்டி போட்ட கஜா புயலினால் நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு வட்டம், வண்டல் எனும் தீவில் கடந்த 16 நாட்களாக அங்கு வாழும் மீனவ குடும்பத்தினர் நிவாரணம் பெறாமல் படும் துன்பத்தையும், துயரத்தையும் கண்டு 3- முறை படகில் 6-டன் எடையுள்ள பொருட்களை சுமந்து 2- கிலோ மீட்டர் கடல் நேரில் மிதந்து சென்று பார்த்து அறப்பணிகளை ஆற்றி, களப்பணியில் இறங்கியபோது வீடின்றி, உடையின்றி, உடமைகளின்றி, உறக்கமின்றி தவித்த 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு சுமார் ₹2500/- மதிப்புள்ள  பொருட்களான 

1.மெத்தை விரிப்பு
2.தலையணை
3.20 லிட் பிளாஸ்டிக் பக்கெட்
4. பிளாஸ்டிக் டப்பா
5. 10 கிலோ அரிசி
6. ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்கள் அடங்கிய மூட்டை
7. தார்ப்பாய்
8. தொடர்ந்து பத்து நாட்கள் எரியக்ககூடிய மெகா சைஸ் மெழுதுவர்த்தி
9. கொசுவலை
10. சர்ட், போர்வை, டவல் அடங்கிய புத்தாடைகள்
11. மினரல் வாட்டர்
12.பள்ளிக்கூட குழந்தைகளுக்கான ஸ்கூல் பேக், நோட்டு புத்தகங்கள், பென்சில், பேனா, சாமண்ட்ரி பாக்ஸ் அடங்கிய பொருட்களை வழங்கி வந்தோம்








எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
 தம்உயிர்போல் எண்ணி உள்ளே
 ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
 யாவர்அவர் உளந்தான் சுத்த
 சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
 இடம்எனநான் தெரிந்தேன் அந்த
 வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
 சிந்தைமிக விழைந்த தாலோ

என்ற திருஅருட்பாவின் வைர வரிகளுக்கு ஏற்பவும், 

"உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூரெல்லாம் விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க"

"எங்கெங்கு இருந்து உயிர் ஏதேது வேண்டினும் அங்கங்கு இருந்து அருள் அருட்பெருஞ்ஜோதி" 

என்ற  அகவலின் பொன்னான வரிகளுக்கு ஏற்ப டெல்டா மாவட்ட மக்களுக்கு மீண்டும் உதவிக்கரம் நீட்ட முடிவு செய்த தீபம் அறக்கட்டளையின் மூலம் தானேபுயல், சென்னை பெருமழை வெள்ளம், வார்தா புயல் போன்ற இயற்கை சீற்றங்களுக்கு பொருளாகவும், கருணை நிதியாகவும் வாரி வழங்கியது போல்  தற்போது கஜா புயலையும் எதிர் கொண்டு தீபம் அறக்கட்டளையின் மூலம் பொருளாகவும், கருணை நிதியாகவும் வாரி வழங்கிய மனிதநேய காவலர்களையும், இரக்கமே குணமாக கொண்டவர்களையும, உயிர்நேய தொண்டர்களையும், ஆன்மநேய உடன்பிறப்புக்களையும், வாரிவாரி வழங்கிய கொடை வள்ளல்களையும், தொடர்ந்து ஒரு வார காலமாக களப்பணி ஆற்றிய ஆடுகின்ற சேவடிகளையும் மனமார, இதமார, உளமார, வாயார வாழ்த்தி வாழ்த்தி அவர்தம் தொண்டிற்கும், சேவைக்கும், தர்மத்திற்கும் தீபம் தலை வணங்குகிறது.

அருட்பெருஞ்ஜோதி 
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி 

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!

தீபம் அறக்கட்டளை 
9444073635

No comments:

Post a Comment

ஏழை மாணவ மாணவிகளுக்கு 15ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு, கடந்த 27 ஆண்டுகளாக தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது, தொடர் சமுதாயப்...