கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவிட
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் மூன்றாம் கட்ட நிவாரணப் பொருட்களாகிய மூன்று டன் அரிசி, மற்றும் வேதாரண்யம் தருமச்சாலைக்கு தேவையான ₹28,000/- மதிப்புள்ள சமையல் பாத்திரங்கள் நேற்று (25-12-2018) நேரில் வழங்கப்பட்டது.
முன்னதாக கஜா புயலினால் மிகவும் பாதிக்கப்பட்ட ஆதிவாசி கிராமமான கோடியக்கரை பகுதி மக்களுக்கும், வேதாரண்யம் கடற்கரை பகுதி மக்களுக்காக நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான 25 Kg அரிசியை வீதி வீதியாக, வீடு வீடாக குடிசைகளில் வாழும் மிக மிக பின் தங்கிய குடிசைகளில் வாழும் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்ட காட்சியை படத்தில் காணுங்கள்.
மூன்றாம் கட்ட சேவை வீடியோ பதிவு: https://youtu.be/5mMjdVzt1R8
மூன்று கட்ட சேவைகளையும் காண புகைப்பட தொகுப்பு:
http://deepamtrust.org/gaja-cyclone-2018/
தீபத்தின் சேவைகளுக்கு நிதியளிக்க:
http://deepamtrust.org/donate-now/
மூன்றாம் கட்டமாகவும் பொருட்களை அருளாக மாற்றி மூன்று டன் அரிசியை உபயமளித்த தீபத்தின் பொற்கரங்களுக்கும், வாரி வழங்கிய ஈர நெஞ்சினர்களுக்கும், தயா உள்ளம் தயவாளர்களுக்கும், நெஞ்சம் நிறைந்த நன்றியினை காணிக்கை ஆக்குகிறோம்.
மூன்றாவது கட்டமாக கஜா புயல் நிவாரணப் பணிக்கு வருகை தந்த
1, தயவு தீபம் பாலா
2, ஜோதி சதுரகிரியார்
3, தயவு T.V.ரமேஷ்
4, தயவு இரவிச்சந்திரன்
5, தயவு தமிழ்தூதன்
6, தயவு D.சிவா
7, தயவு வெங்கடேஷ்
8, தயவு ஜெயதீஷ்
9, தயவு குட்டி சாரதி
10, தயவு கணேஷ் ஆகிய ஆடுகின்ற சேவடிகளுக்கும் தீபம் தனது கோடானு கோடி நன்றியினை தெரிவித்து கொள்கிறது.
தொடர்ச்சியாக 33 மணி நேரமாக (இரண்டு இரவு, ஒரு பகல்)கஜா புயல் மூன்றாம் கட்ட தீபத்தின் வாகனத்தை இயக்கிய தயவுமிகு வெங்கடேஷ் அவர்களின் தளராத சேவைக்கு நெஞ்சுருகி உளமாற வாழ்த்தி தலைவணங்குகிறோம்.
--
www.deepamtrust.org