Tuesday 27 November 2018

கஜா புயல் பாதித்த டெல்டா மாவட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட நிவாரணம்

இயற்கை பேரிடரான கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களின் துயர் துடைக்க  பசிப்பிணி போக்கியும், பல்வேறு நிவாரண பொருட்களையும் கடந்த  21-11-2018ம் தேதி முதல் தொடர்ந்து நான்கு நாட்களாக நாகப்பட்டினத்தில் முகாமிட்டு வாரி வழங்கி உள்ளதை தாங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.




மூன்று விஷயங்கள் நம்மை இரண்டாம் கட்ட நிவாரணப் பணி செய்ய தூண்டியுள்ளது.

1) பாதிப்புகள் மிக மிக அதிகம். மக்கள் உதவிகோரி தெருக்களில், தெருமுனைகளில் கையேந்தி நிற்பது.

2) நமது அன்னதான வாகனம் உள்ளடக்கிய கிராமங்களின் தெருமுனையில் அன்னமளிக்க நின்றபோது பெருமழை கொட்டிக்கொண்டிருந்தது. அன்னதான வாகனத்தைப் பார்த்ததும் மழையில் நனைந்துகொண்டே குழந்தைகளும், வயதானவர்களும் கையில் பாத்திரங்களோடு ஓடி வந்த காட்சி இன்னும் கண்முன்னே வந்துகொண்டேயிருக்கிறது.

3) இரவு நேரம். எங்கும் கும்மிருட்டு. தீபத்தின் அன்னதான வாகனம் பாதிக்கபட்ட கிராமத்தில் வீடுவீடாக மெகாபோனில் யாரும் பசியோடு இருக்கிறீர்களா என்று கேட்டுக்கொண்டே செல்கிறது.எல்லா வீடுகளிலிருந்தும் மக்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வெளியே வந்து உணவு வாங்கிய காட்சி கண்முன்னே நிற்கிறது.

டெல்டா மாவட்டங்களையே புரட்டி போட்ட கஜா புயலினால் உலகிற்கே சோறு போட்டு வாழ வைத்த டெல்டா மாவட்ட மக்கள் படும்  துன்பத்தையும், துயரத்தையும் வார்த்தைகளால் சொல்லி மாளாது. நாம் நேரில் சென்று அறப்பணிகளை ஆற்றி, களப்பணியில் இறங்கியபோது வீடின்றி, உடையின்றி, உடமைகளின்றி, உறக்கமின்றி அவதிப்பட்டதை கண்களால் கண்டு கண்ணீராய்த் தான் வடிக்க முடிந்ததே தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. மக்கள் படும் வேதனையும், திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் போதித்த ஜீவகாருண்யத்தையும் கருத்தில் கொண்டு தீபம் அறக்கட்டளையின் சார்பில் இரண்டாம்  கட்ட கஜா புயல் நிவாரணமாக விரைவில் புறப்பட இருக்கிறோம்

எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
 தம்உயிர்போல் எண்ணி உள்ளே
 ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
 யாவர்அவர் உளந்தான் சுத்த
 சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
 இடம்எனநான் தெரிந்தேன் அந்த
 வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
 சிந்தைமிக விழைந்த தாலோ

என்ற திருஅருட்பாவின் வைர வரிகளுக்கு ஏற்பவும், 

"உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூரெல்லாம் விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க"

"எங்கெங்கு இருந்து உயிர் ஏதேது வேண்டினும் அங்கங்கு இருந்து அருள் அருட்பெருஞ்ஜோதி"

என்ற  அகவலின் பொன்னான வரிகளுக்கு ஏற்ப டெல்டா மாவட்ட மக்களுக்கு மீண்டும் உதவிக்கரம் நீட்ட தீபம் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. தானேபுயல், சென்னை பெருமழை வெள்ளம், வார்தா புயல் போன்ற இயற்கை சீற்றங்களை எதிர்கொண்ட தீபம் தற்போது கஜா புயலையும் எதிர் கொள்கிறது. 

இரண்டாம் கட்ட கஜா புயல் நிவாரணமாக டெல்டா மாவட்ட மக்கள் நிம்மதியாக உறங்குவதற்கு மிகமிக அவசிய, அத்தியாவசிய தேவையான 
2000 போர்வைகள்
2000 கொசுவலைகள்
500 டார்ச் லைட்டுகள்
500 தார்பாய்கள்
கொண்டு செல்ல திட்டமிட்டு இருக்கிறோம்.

தயா உள்ளம் கொண்ட மனிதநேய காவலர்களே, உயிர்நேய தொண்டர்களே, ஆன்மநேய உடன்பிறப்புக்களே, தீபம் அறக்கட்டளையின் அருட்பணிக்கு வாரி வழங்கும் கொடை வள்ளல்களே, ஈர நெஞ்சினர்களே தாங்களும் இதில் பங்கு  பெற்று 
100 போர்வைகள் & கொசுவலைகள்
50 போர்வைகள் & கொசுவலைகள்
என பாகம் தந்து ஆன்மலாபம் அடைய தங்களை அன்புடன் வேண்டி விண்ணப்பிக்கின்றோம்.

போர்வைகள் கொசுவலைகள் சம்பந்தமாக தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்கள்:
தீபம் பாலா: 9444073635
ஜோதி சதுரகிரியார்: 9789494009

Bank Transfer:
State Bank of India 
IIT Branch 
Current A/c.No: 30265475129
IFSC:SBI0001055

தாங்கள் அளிக்கும் நன்கொடைகளுக்கு 80G பிரிவின்படி வருமான வரிவிலக்கு உண்டு

வங்கி பரிமாற்ற தகவலை 9444073635 என்ற கைபேசி எண்ணிற்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டுகிறோம்.

தங்களின் மேலான தயவையும், பேராதரவினையும் எதிர்நோக்கி 
உங்கள் வேளச்சேரி 
தீபம் அறக்கட்டளை
30, திரௌபதி அம்மன் கோவில் தெரு 
வேளச்சேரி, சென்னை- 600042
(ஆன்மநேய அறப்பணியில் 21-ஆண்டுகளாக)
www.deepamtrust.org
admin@deepamtrust.org

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...