சொற்பொழிவு நடைபெறும் இடம்: நித்ய தீப தருமச்சாலை 7/8, புத்தேரிக்கரை தெரு வேளச்சேரி, சென்னை-600042 (தண்டீஸ்வரம் சிவாலயம் கிழக்கு மாடத்தெரு)
குறிப்பு: நிகழ்ச்சி சரியான நேரத்தில் துவங்கவுள்ளதால் அனைவரும் முன்கூட்டியே வருகைதந்து ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்.சொற்பொழிவு முடிந்தவுடன் அன்னதானம் நடைபெறும்.
அனைவரும் வருக... அருளமுதம் பெறுக...
அன்புடன் அழைக்கும்... உங்கள் வேளச்சேரி தீபம் அறக்கட்டளை 9444073635 04422442515 www.deepamtrust.org
இயற்கை பேரிடரான கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களின் துயர் துடைக்க பசிப்பிணி போக்கியும், பல்வேறு நிவாரண பொருட்களையும் கடந்த 21-11-2018ம் தேதி முதல் தொடர்ந்து நான்கு நாட்களாக நாகப்பட்டினத்தில் முகாமிட்டு வாரி வழங்கி உள்ளதை தாங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.
மூன்று விஷயங்கள் நம்மை இரண்டாம் கட்ட நிவாரணப் பணி செய்ய தூண்டியுள்ளது.
1) பாதிப்புகள் மிக மிக அதிகம். மக்கள் உதவிகோரி தெருக்களில், தெருமுனைகளில் கையேந்தி நிற்பது.
2) நமது அன்னதான வாகனம் உள்ளடக்கிய கிராமங்களின் தெருமுனையில் அன்னமளிக்க நின்றபோது பெருமழை கொட்டிக்கொண்டிருந்தது. அன்னதான வாகனத்தைப் பார்த்ததும் மழையில் நனைந்துகொண்டே குழந்தைகளும், வயதானவர்களும் கையில் பாத்திரங்களோடு ஓடி வந்த காட்சி இன்னும் கண்முன்னே வந்துகொண்டேயிருக்கிறது.
3) இரவு நேரம். எங்கும் கும்மிருட்டு. தீபத்தின் அன்னதான வாகனம் பாதிக்கபட்ட கிராமத்தில் வீடுவீடாக மெகாபோனில் யாரும் பசியோடு இருக்கிறீர்களா என்று கேட்டுக்கொண்டே செல்கிறது.எல்லா வீடுகளிலிருந்தும் மக்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வெளியே வந்து உணவு வாங்கிய காட்சி கண்முன்னே நிற்கிறது.
டெல்டா மாவட்டங்களையே புரட்டி போட்ட கஜா புயலினால் உலகிற்கே சோறு போட்டு வாழ வைத்த டெல்டா மாவட்ட மக்கள் படும் துன்பத்தையும், துயரத்தையும் வார்த்தைகளால் சொல்லி மாளாது. நாம் நேரில் சென்று அறப்பணிகளை ஆற்றி, களப்பணியில் இறங்கியபோது வீடின்றி, உடையின்றி, உடமைகளின்றி, உறக்கமின்றி அவதிப்பட்டதை கண்களால் கண்டு கண்ணீராய்த் தான் வடிக்க முடிந்ததே தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. மக்கள் படும் வேதனையும், திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் போதித்த ஜீவகாருண்யத்தையும் கருத்தில் கொண்டு தீபம் அறக்கட்டளையின் சார்பில் இரண்டாம் கட்ட கஜா புயல் நிவாரணமாக விரைவில் புறப்பட இருக்கிறோம்
எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
தம்உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர்அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம்எனநான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
சிந்தைமிக விழைந்த தாலோ
என்ற திருஅருட்பாவின் வைர வரிகளுக்கு ஏற்பவும்,
"உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூரெல்லாம் விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க"
"எங்கெங்கு இருந்து உயிர் ஏதேது வேண்டினும் அங்கங்கு இருந்து அருள் அருட்பெருஞ்ஜோதி"
என்ற அகவலின் பொன்னான வரிகளுக்கு ஏற்ப டெல்டா மாவட்ட மக்களுக்கு மீண்டும் உதவிக்கரம் நீட்ட தீபம் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. தானேபுயல், சென்னை பெருமழை வெள்ளம், வார்தா புயல் போன்ற இயற்கை சீற்றங்களை எதிர்கொண்ட தீபம் தற்போது கஜா புயலையும் எதிர் கொள்கிறது.
இரண்டாம் கட்ட கஜா புயல் நிவாரணமாக டெல்டா மாவட்ட மக்கள் நிம்மதியாக உறங்குவதற்கு மிகமிக அவசிய, அத்தியாவசிய தேவையான
2000 போர்வைகள்
2000 கொசுவலைகள்
500 டார்ச் லைட்டுகள்
500 தார்பாய்கள்
கொண்டு செல்ல திட்டமிட்டு இருக்கிறோம்.
தயா உள்ளம் கொண்ட மனிதநேய காவலர்களே, உயிர்நேய தொண்டர்களே, ஆன்மநேய உடன்பிறப்புக்களே, தீபம் அறக்கட்டளையின் அருட்பணிக்கு வாரி வழங்கும் கொடை வள்ளல்களே, ஈர நெஞ்சினர்களே தாங்களும் இதில் பங்கு பெற்று
100 போர்வைகள் & கொசுவலைகள்
50 போர்வைகள் & கொசுவலைகள்
என பாகம் தந்து ஆன்மலாபம் அடைய தங்களை அன்புடன் வேண்டி விண்ணப்பிக்கின்றோம்.
போர்வைகள் கொசுவலைகள் சம்பந்தமாக தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்கள்:
தீபம் பாலா: 9444073635
ஜோதி சதுரகிரியார்: 9789494009
Bank Transfer:
State Bank of India
IIT Branch
Current A/c.No: 30265475129
IFSC:SBI0001055
தாங்கள் அளிக்கும் நன்கொடைகளுக்கு 80G பிரிவின்படி வருமான வரிவிலக்கு உண்டு
வங்கி பரிமாற்ற தகவலை 9444073635 என்ற கைபேசி எண்ணிற்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டுகிறோம்.
தங்களின் மேலான தயவையும், பேராதரவினையும் எதிர்நோக்கி
இயற்கை சீற்றங்களில் சமீபத்தில் டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களையே கஜா புயல் புரட்டி போட்டுட்டுள்ளதை நாமனைவரும் அறிவோம்...
தானே புயல், வார்தா புயல், சென்னை பெருமழை வெள்ளத்தில் தீபம் அறக்கட்டளை சேவை செய்தது போல் தற்போது கஜா புயலையும் தீபம் எதிர் கொண்டது.
சென்னையில் இருந்து அன்னதான பொருட்களுடன் பல்வேறு நிவாரண பொருட்களையும் அரிசி - 200 மூட்டைகள் (5 டன்),
IIT T-ஷர்டுகள்,
டவல்கள்,
மெழுகுவர்த்திகள்,
பிரட்டுகள்,
பிஸ்கட்டுகள்,
வாட்டர் பாட்டில்கள்,
வாட்டர் பாக்கட்டுகள்,
போர்வைகள்,
ஒரே சமயத்தில் 5000 பேருக்கு சமைக்க தேவையான சமையல் பாத்திரங்கள்,
6 அடுப்புகள்,
15 கேஸ் சிலிண்டர்களை
சுமந்து கொண்டு
கடந்த 21-11-2018 அன்று இரவு (புதன்கிழமை) நாகப்பட்டினம் புறப்பட்டது.
நாகப்பட்டினம் சன்மார்க்க சங்க தருமச்சாலையில் உடனடியாக முகாமிட்டு அன்னதானப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு சமையல் வேலைகள் விரைவுபடுத்தப்பட்டது.
கடந்த 21 ம் தேதி முதல் தொடர்ந்து இரவு பகலாக உணவுகள் தயாரிக்கப்பட்டு இரவு பகல் பாராது நாகப்பட்டினம் சுற்று வட்டார பகுதிகளிலும், வேதாரண்யம் சுற்று வட்டார பகுதிகளிலும் தொடர்ந்து நான்கு நாட்களாக தடையின்றி உணவு, உடை, மற்றும் பல்வேறு நிவாரண பொருட்களான மெழுகுவர்த்தி புத்தாடைகள், டவல்கள், டி-சர்ட், போர்வைகள் வழங்கப்பட்டன.
தீபம் அறக்கட்டளையின் மூலம் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகின்ற சேவடிகளும், நாகை மாவட்ட 20 க்கும் மேற்பட்ட சன்மார்க்க ஆடுகின்ற சேவடிகளும் இரவு பகல் பாராமல் தொடர்ந்து சமையல் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். தொடர்ந்து கிராம, கிராமங்களாக பசித்தவர்களை தேடிச்சென்று வாகனங்கள் மூலம் அன்னதர்மம் வழங்கப்பட்டது.
மிகமிக மோசமான உருக்குலைந்து போன வீடுகள் மிகமிக அதிகம். கண்ணீர் விட்டு கதறி அழுதவர்கள் அதிகம்.
ஏராளமான தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவிகள் இருந்தும், பாதிக்கப்பட்டவர்களின் தேவை மிகமிக அதிகம்.
அரசாங்கம் மட்டும் தான் அவர்களின் முழு தேவைகளை பூர்த்தியை செய்ய முடியும்.
பல இடங்களில் பல்வேறு வகையான உதவிகளை செய்த போது பல பொருட்கள் இல்லாமல் ஒன்றும் செய்வதறியாது திகைத்து நின்றோம்.
பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அன்னதான பொருட்கள், நிவாரணப் பொருட்களை சென்னையில் இருந்து கொண்டு சென்று இருந்தும், புதுச்சேரியில் இருந்து 1 டன் அரிசி மூட்டைகள் உள்பட நிவாரண பொருட்கள், கடலூரில் இருந்தும் நிவாரண பொருட்கள், ஈரோட்டில் இருந்து அரிசி, போர்வைகள்,
மதுரையில் இருந்து நிவாரண பொருட்கள் தீபம் அறக்கட்டளைக்கு வந்து குவிந்தது மகிழ்ச்சி அளித்தது.
தொடர்ந்து நாகப்பட்டினத்தை சுற்றி அன்னதானமும், புதுக்கோட்டையை சுற்றி உள்ள வடகாடு உள்பட பல கிராமங்களில் 30-40 முகாம்கள் மூலமும், கிராமம், கிராமமாக, வீடு வீடாக இரவில், இருட்டில், உணவும், மெழுகுவர்த்திகளும் தந்தபோது, தீபமும் ஆயிரக்கானவர்களில் இல்லங்களில் விளக்கேற்றிய உணர்வும், நாமும் புயலால் பாதிக்கப்பட்ட சில ஆயிரம் குடுபங்களுக்கு உதவ முடிந்ததே என்ற நிறைவோடு
இன்று காலை சென்னை திரும்பினோம்.
பெரும்பாலான நேரங்களில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமலும், இரவு பகல் பாராமலும் அன்னதானம் வழங்கப்பட்டது.
சமையலுக்கு தேவையான காய்கறிகளை பற்றாக்குறை ஏற்பட்ட போது நாகப்பட்டினம் மார்க்கெட்டில் மீண்டும் மீண்டும் டாடா ஏஸ் வாகனம் முழுவதும் காய்கறிகள் வாங்கப்பட்டது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களின் கண்ணீரை துடைக்க முடியாமல் பல சமயங்களில் விக்கித்துப் போய் நின்றோம்.
தீபம் அறக்கட்டளை தனது பணியை செவ்வனே செய்து வள்ளல்பெருமான் கண்ட ஜீவகாருண்ய புரட்சியை மீண்டும் நிலை நாட்டியுள்ளது.
பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்களை வாரி வழங்கிய கொடை வள்ளல்களையும், (நிதியாக பொருளாக உதவியவர்களுக்கு நன்றி செய்தியும், பதிவு செய்த சில படங்களையும், வீடியோ காட்சிகளையும் தனியாக அனுப்ப உள்ளோம்.) நான்கு நாட்களாக இரவு பகல் பாராமல் தொய்வின்றி சமையல் பணிகளை செய்த ஆடுகின்ற சேவடிகளுக்கும் தீபம் அறக்கட்டளை தனது நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.
டெல்டா மாவட்ட மக்களின் துயரை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாமல் கண்ணீருடன் டெல்டா மாவட்ட மக்களை பிரியமுடியாமல் பிரியாவிடை பெற்றோம்.
அடுத்த கட்ட நிவாரண நிதி மற்றும் பொருட்கள் வந்தாலும் மீண்டும் டெல்டா மாவட்ட மக்களின் துயர் துடைக்க தீபம் தொடர்ந்து பாடுபடும்.
புதன்கிழமை இரவு (21.11.2018) சென்ற தீபம் சேவதாரிகள் நேற்று முழுவதும் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் உணவு மற்றும் நிவாரண பொருட்கள் அளித்தனர். புயலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர், களத்தில் நின்று சேவை செய்யும் தீபம் நிறுவனர் திரு.பாலகிருஷ்ணன் அவர்களின்பதிவு,
55 வயதில் அடியேன் இப்படி ஒரு புயல் பாதிப்பை பார்த்ததில்லை. கேள்விப்பட்டதில்லை. அப்படிப்பட்ட தானே புயலே nothing.
இன்று புயல்பாதித்த பகுதிகளில் சில கிராமங்களை நேரில் கண்டு அதிர்ந்து போனேன்.
பசிக்காக மக்கள் ஏங்குகிறார்கள். எதிர்பார்க்கிறார்கள். மற்ற உணர்வின் தாக்கங்களுக்கு தீபம் அனுப்பிய ஓரிரு படங்களை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். அதுவே சாட்சி.
இன்று நாகை மாவட்டத்தில் 6 கிராமங்களில் பசியால் வாடும் மக்களுக்கு 16 தொண்டர்கள் மூலம் தொடர் உணவு கொடுக்க வாய்ப்பளித்த இறைவனுக்கும், தொடர்ந்து அன்னதானப்பணி தடைபடாமல் நடக்க நிதியும், பொருளுமாக அள்ளிக்கொடுத்துக்கொண்டிருக்கும், தீபத்தின் நன்கொடையாளர்களுக்கும், சன்மார்க அன்புள்ளங்களுக்கும், *மக்கள் பணியே மகேசன் பணியென* தொடர் தொண்டு செய்துகொண்டிருக்கும் தியாக செம்மல்கள், என் கண்ணின் மணிகளான சேவடிகளுக்கு தீபத்தின் நெஞ்சம் நிறைந்த நன்றியும் வாழ்த்துக்களும்...
தொடர் பணிகள் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுகளுக்கு உதவ நிதி உதவி/ பொருள் உதவி தருபவர்களை அழைத்து நன்றி கூற முடியவில்லை. தங்கள் உதவியில்லையேல் எங்களுக்கு இங்கென்ன வேலை... I will respond/talk to you later.
நள்ளிரவு 12.30 மணிக்கு நாகையில் தீபத்தின் சேவை...Deepam Bala
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி அளிக்க விரும்புபவர்கள், தங்களால் இயன்ற நிதியுதவியை கீழ்கண்ட தீபம் அறக்கட்டளை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டுகிறோம். வங்கி பரிமாற்றம் செய்தவர்கள் தங்களின் பெயர், கைபேசி எண் மற்றும் தங்களின் முகவரியை தெரிவிக்கவும்.
Account Name : Deepam Trust Account No : 30265475129 Bank : State Bank of India Branch : IIT Madras, Chennai – 600 036 IFSC Code : SBIN0001055 www.deepamtrust.org admin@deepamtrust.org
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் தீபம் அறக்கட்டளை வங்கி கணக்கிற்கு நிதியாக அளிக்கலாம்.
Account Name : Deepam Trust
Account No : 30265475129
Bank : State Bank of India
Branch : IIT Madras, Chennai – 600 036
IFSC Code : SBIN0001055
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையில் இருந்து நேற்று இரவு சென்ற தீபம் சேவதாரிகள் காலை நாகப்பட்டினம் சென்றடைந்தனர். புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு வழங்க முழு வீச்சில் சேவை செய்து கொண்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் தீபம் அறக்கட்டளை வங்கி கணக்கிற்கு நிதியாக அளிக்கலாம்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வழங்குவதற்கு தீபம் அறக்கட்டளை சேவதாரிகள் நேற்று இரவு 2 வாகனங்கள் மூலம் சென்றுள்ளனர்.ஒரு வாரகாலம் தங்கி சேவை செய்ய உள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் தீபம் அறக்கட்டளை வங்கி எண்ணிற்கு நிதியாக அளிக்கலாம்.
ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்
- திருஅருட்பிரகாசர்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, வேதாரண்யம், உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உணவின்றி தவிக்கின்ற, ஆகாரத்தை எதிர்பார்த்து வருந்துகின்ற சகோதர, சகோதரிகளுக்கு நேரடியாக சென்று, கிராமம் கிராமமாக பார்வையிட்டு, அந்தந்த இடங்களிலும், கிராமங்களிலும் ஒரு வார காலம் உணவு தயார் செய்து பசிப்பிணியை போக்கிட, டாடா ஏஸ் வாகனத்தில் மூலம் நடமாடும் அன்னதானம்.
இயற்கையின் சீற்றமான கஜா புயலினால் புரட்டி போடப்பட்ட டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர், வேதாரண்யம், மாவட்ட மக்களின் கண்ணீர் நம் கண் முன்னே வந்து செல்கிறது. வேதனையின் விளிம்பில் வாழும் மக்களின் பசிப்பிணி போக்க, துயர் துடைக்க 21-11-2018 புதன் முதல், சுமார் ஒரு வார காலம் கிராமம், கிராமமாக ஆங்காங்கே தங்கி உணவை தயார் செய்து அன்னதான சேவை புரிந்திட, சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை, விழுப்புரம் வள்ளலார் அருள்மாளிகை அறக்கட்டளை இணைந்து நிகழ்த்தும் ஜீவகாருண்ய திருப்பணிக்கு சேவாதாரிகள் புறப்பட இருக்கிறார்கள். அது சமயம் தொண்டு செய்ய ஆர்வம் உள்ள அன்பர்களை வணங்கி வரவேற்கிறோம்.
அன்னதானத்திற்கு தேவையான அரிசி, மளிகை, காய்கறி, எரிபொருள், மற்றும் கருணை நிதியை வாரி வாரி வழங்கி ஆன்ம லாபம் அடைய அன்புடன் வரவேற்கிறோம்.
சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையிலிருந்து இரண்டு வாகனங்கள் இன்று இரவு (21.11.18-புதன்) புறப்படுகின்றன.
சென்னை வேளச்சேரிதீபம் அறக்கட்டளையின்
கட்டணமில்லா தீபநெறி சன்மார்க்க தமிழ் மாத இதழை கடந்த 9 ஆண்டுகளாக
தீபத்தின் நன்கொடையாளர்களுக்கும், சன்மார்க்கிகளுக்கும், நலம்
விரும்பிகளுக்கும், ஒவ்வொரு மாதமும் 27ஆம் தேதியன்று தபாலில்
அனுப்புகிறோம்.
இதழ் (printed hard copy) விரும்புவோர் பெயர், கைபேசி எண் & முழு முகவரியை இந்த https://goo.gl/forms/16OVQfmJp6aieFjD2 லிங்கில் பதிவுசெய்தால் இலவசமாக அனுப்ப தயாராக உள்ளோம் அல்லது 94440 73635 / 044-22442515 என்ற எண்ணிற்கு மேற்கூறிய தகவல்களை வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பவும்.