Monday, 23 July 2018

11 வது ஆண்டு விழா அழைப்பிதழ்!

ஜீவகாருண்ய எழுச்சிப் பெருவிழா!


தயா உள்ளம் கொண்ட ஆன்மநேய  உடன்பிறப்புக்கள் அனைவருக்கும் தீபத்தின் முதற்கண் வந்தனங்கள்.

தீபம் அறக்கட்டளையின் 11-ம் ஆண்டு ஜீவகாருண்ய எழுச்சிப் பெருவிழா வருகிற 12-08-2018 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் இரவு வரை பல்வேறு சன்மார்க்க நிகழ்வுகளுடன் சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளன. 


நாள்: 12.08.2018 (ஞாயிற்றுக்கிழமை)
(அதிகாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி)

இடம்: நித்ய தீப தருமச்சாலை வளாகம்,

புத்தேரிக்கரைத் தெரு,

தண்டீஸ்வரம் கோவில் அருகில்,
 வேளச்சேரி, சென்னை-600 042


அழைப்பிழ் கிடைக்க பெறாக அன்பர்கள் அனைவருக்கும் இதன் (வாட்ஸ்அப்) மூலமாக அனுப்பி உள்ளோம். அனைவரும் வருகைதந்து சிறப்பித்து தரும்படி அன்புடன் அழைக்கின்றோம்.


---------
இங்ஙனம் 
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை
www.deepamtrust.org










Donate by Cheque / Draft:
You can also send a Cheque/Demand Drafts in the favour of 'DEEPAM TRUST' with your Name, Contact number, full address with pin code & Email (if available) to the office address mentioned below.
Deepam Trust, No.30, Throwpathi Amman Kovil Street,Velachery,Chennai – 600 042
Donate by Bank Transfer: 
Account Name: Deepam Trust
Account No     : 30265475129
Bank                 :State Bank of India
Branch             : IIT Madras, Chennai – 600 036
IFSC Code       : SBIN0001055
இங்கு உதவ நினைப்பவர்கள் ஒரு புறமும்,
உதவி தேவைப்படுவோர் மற்றொரு புறமும்,
தொடர்பின்றி இருகின்றனர்.
இரு தரப்புக்குமான பாலமாக இருந்து
தீபம் அறக்கட்டளை உதவி செய்து வருகிறது.
நன்கொடை அளிக்க
தருமம் செய்வோம் !!!
தயவுடன் வாழ்வோம் !!!
Copyright © 2018 Deepam Trust, All rights reserved.
www.deepamtrust.org
Our mailing address is:
admin@deepamtrust.org

Saturday, 21 July 2018

தீபம் அறக்கட்டளையின் நிர்வாகக்குழு



தீபம் அறக்கட்டளையின் தூண்கள் 2018

தீபம் அறக்கட்டளையில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்விற்கும் பொருளாதார ரீதியாக பின்னால் நின்று இயக்கிக் கொண்டிருப்பவர்கள், நித்ய அன்னதான பணிகளுக்கும் மற்றும் இதர சமுக பணிகளுக்கும் மாதம் தோறும் தவறாமல் நிதி அளித்து தீபத்தினை தாங்கி நிற்பவர்கள்.



தங்களின் பிறந்த நாள், திருமண நாள் மற்றும் குடும்பத்தில் நடைபெறும் சுப நிகழ்சிகளுக்கு  தீபம் அறக்கட்டளையில் அன்னதானம் தந்து மகிழலாம்.

தாங்கள் அளிக்கும் நன்கொடைகளுக்கு வருமான வரிச்சட்டம் 80(G) பிரிவின்படி வருமான வரிவிலக்கு உண்டு 
Donate by Cheque / Draft:
You can also send a Cheque/Demand Drafts in the favour of ‘DEEPAM TRUST’ with your Name, Contact number, full address with pin code & Email (if available) to the office address mentioned below.
Deepam Trust, No.30, Throwpathi Amman Kovil Street,Velachery,Chennai – 600 042
Donate by Bank Transfer: 
Account Name: Deepam Trust
Account No     : 30265475129
Bank                 :State Bank of India
Branch             : IIT Madras, Chennai – 600 036
IFSC Code       : SBIN0001055
நன்கொடை அளிக்க
தருமம் செய்வோம் !!!
தயவுடன் வாழ்வோம் !!!
Copyright © 2018 Deepam Trust, All rights reserved.
www.deepamtrust.org
Our mailing address is:
admin@deepamtrust.org


Wednesday, 18 July 2018

தேவதானம்பேட்டை தருமச்சாலை

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் 20 தருமச்சாலைகளில் ஒன்றான செஞ்சி அருகே உள்ள தேவதானம்பேட்டை  கிராமத்தில்  மூலிகைகள் நிறைந்த அமுதகஞ்சியை வழங்கப்படும்  காட்சி.


தீபநெறி 2018 - ஜூலை மாத மின்னிதழ்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் கட்டணமில்லா தீபநெறி சன்மார்க்க தமிழ் மாத இதழை கடந்த 9 ஆண்டுகளாக தீபத்தின் நன்கொடையாளர்களுக்கும், சன்மார்க்கிகளுக்கும், நலம் விரும்பிகளுக்கும், ஒவ்வொரு மாதமும் 27ஆம் தேதியன்று தபாலில் அனுப்புகிறோம்.

இதழ் (printed hard copy) விரும்புவோர் பெயர், கைபேசி எண் & முழு முகவரியை இந்த https://goo.gl/forms/16OVQfmJp6aieFjD2 லிங்கில் பதிவுசெய்தால்  இலவசமாக அனுப்ப தயாராக உள்ளோம் அல்லது 94440 73635 / 044-22442515 என்ற எண்ணிற்கு மேற்கூறிய தகவல்களை  வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பவும்.























Tuesday, 17 July 2018

கட்டிட நிதி விண்ணப்பம்

நித்ய தீப தருமச்சாலை 
சத்திய ஞானசபை
கட்டிட நிதி விண்ணப்பம்

பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய சான்றோர்களே, ஆன்மநேய ஒருமைப்பாட்டு உள்ளம் கொண்ட அன்பு சகோதர, சகோதரிகளே...

தயா உள்ளத்தோடு தீபம் அறக்கட்டளையின் பல்வேறு ஆன்மநேய அறப்பணிகளுக்கு வாரி வழங்கும் கொடை வள்ளல்களுக்கு தீபம் அறக்கட்டளையின் பணிவான வந்தனங்கள் பல....

உலகெலாம் போற்ற ஒளிவடிவனாகி, இலக அருள் செய்து இசைந்து வரும் கற்பனை கடந்த ஜோதி, கருணையே உருவமாகி, அற்புதக் கோலம் கொண்டு ஜோதியுள் சுடராய், ஜோதிப் பிழம்பதோர் மேனியாகி இருக்கின்ற எம்பெருமான், தில்லையிலே ஆடும் தாண்டவத்தை மனித உள்ளத்திலே ஆட வைத்தவரும், மாக்களை மக்களாக்கியும், தீராத வினைகளை தீர்த்தும், மாறாத பிணிகளைப் போக்கியும், பசியால் வாடும் வறியவர்களின் பசிப்பிணியை போக்க 1867-ம் ஆண்டு வைகாசி திங்கள் 11-ம் நாள் உத்தரஞானசிதம்பரம் எனும் வடலூரில் தனது திருக்கரங்களால் அக்னி ஏற்றி அணையா அடுப்பை உருவாக்கி சத்திய தருமச்சாலையை நிறுவியவரும், உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறுகளை நீக்கும் பொருட்டு 1872-ம் ஆண்டு வடலூரில் சத்திய ஞானசபையை நிறுவி, சாதி, மத, இன வேறுபாடின்றி அனைவருக்கும் மெய்ஞானத்தை போதித்து மரணமில்லா பெருவாழ்விற்கு வித்திட்டவரும், ஆதியும், அந்தமும் இல்லா, பாதியும், முடிவும் காணா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தனிப்பெருங் செங்கோல் ஆட்சி நடத்தும் இறைவர், உத்தரஞானசிதம்பரந்தன்னில் ஆடலரசனாய், அம்பலவாணனாய் அருளாட்சி புரிந்து வருகின்ற திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பேரருட் பெருங்கருணையோடு 1997-ம் ஆண்டு சிறுசிறு சேவையாக தொடங்கி 2007-ம் ஆண்டு ஜீலை திங்கள் முதல் ஓர் அரசு பதிவு பெற்ற அறநிறுவனமாக தீபம் அறக்கட்டளை ( அரசு பதிவு எண்: 2035/2007) உருப்பெற்று தமிழகம் முழுவதும் 20 தருமச்சாலைகள் தொடங்கப்பட்டு தினசரி ஆயிரக்கணக்கானோருக்கு மூலிகை அன்னக்கஞ்சி வழங்கியும், வேளச்சேரியில் நித்ய தீப தருமச்சாலை மற்றும் நடமாடும் நித்ய தீப அன்ன தருமச்சாலை வாகனத்தின் மூலமாக பசியினால் வாடும் பல நூற்றுக்கணக்கான வறியவர்களின் வயிற்றுப்பிணியாகிய பசிப்பிணியை போக்கியும், மேலும் படிப்பில் நன்றாக தேர்ச்சி பெற்று, மேற்படிப்பு தொடர முடியாமல் தவிக்கின்ற கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டுவருடந்தோறும் 100 ஏழை எளிய மாணவர்களின் மேற்படிப்பிற்கான கல்வி உதவித் தொகை வழங்கியும், நோயினால் வருந்துகின்ற சமுசாரிகளுக்கு மருத்துவ உதவியும், பார்வையற்ற மற்றும் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி & மளிகை பொருட்கள் வழங்கியும், ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் காப்பகங்களுக்கு சென்று அன்னம்பாலித்து ஆடிப்பாடி மகிழ்வித்தும், மார்கழி மாதம் சென்னை மாநகரை சுற்றி சாலையோரங்களில் குளிரால் நடுங்கிக் கொண்டிருக்கும் வறியவர்களுக்கு கம்பளிப்போர்வை வழங்குதல் போன்ற மனிதநேயமிக்க சமுதாய நலப்பணிகளை செய்து வருவது யாவரும் அறிந்ததே...!
Know more activities of Deepam Trust
மனிதநேயமும், உயிர்நேயமும், ஆன்மநேயமும் கண்ணும் கருத்துமாக கொண்டு கடந்த 21 ஆண்டுகளாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் இறைவனின் அருட்பணியான இவ்வளவு பணிகளையும் சிரமேற்கொண்டு செய்து வருகின்ற தீபம் அறக்கட்டளையானது இதுவரை சொந்த இடம் இல்லாமல் ஓர் வாடகை கட்டிடத்தில் தான் இயங்கி வருகிறது. எக்காலத்திலும் தடைபடாமல் தொடர்ந்து தங்குதடையின்றி தீபத்தின் ஆன்மநேய அறப்பணிகளை தாங்கி நடத்திட ஓர் சொந்த இடமும், கட்டிடம் அவசியமாகிறது. எல்லாம்வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பெருங்கருணையால் வேளச்சேரியில் சுமார் 1000 சதுரடி பரப்பளவில் ஓர் நிரந்தரமான நித்ய தீப தருமச்சாலையும், வழிபாட்டிற்தாக சத்திய ஞானசபையும் அமைக்க திருவுள்ளம் கொண்டோம். தயா உள்ளம் கொண்ட ஆன்மநேய உள்ளங்களே, கிடைப்பதற்கரிய மிகவும் அரிதான இந்த மானுடப் பிறவியின் பெரும்பயனை உணர்ந்து தாங்களும் 
10 சதுரடி 1,00,000/- ரூபாயாகவும்
 5 சதுரடி 50,000/- ரூபாயாகவும்
1 சதுரடி 10,000/- ரூபாயாகவும் 
என்ற பாகம் பெற்று கடந்த 21 ஆண்டுகளாக தங்குதடையின்றி நடைபெற்று வரும் ஆன்மநேய அறப்பணிகளுக்காக தீபம் அறக்கட்டளைக்கு பூமிதானம் செய்து ஆன்மலாபம் பெற்றுய்ய வேண்டி தங்களின் பொன்னான பாதங்களை பற்றி விண்ணப்பிக்கின்றோம்.
வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்;
பயிற்றிப் பலகல்வி தந்து - இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்.    - பாரதி
தாங்கள் அளிக்கும் நன்கொடைகளுக்கு வருமான வரிச்சட்டம் 80(G) பிரிவின்படி வருமான வரிவிலக்கு உண்டு 
Donate by Cheque / Draft:
You can also send a Cheque/Demand Drafts in the favour of ‘DEEPAM TRUST’ with your Name, Contact number, full address with pin code & Email (if available) to the office address mentioned below.
Deepam Trust, No.30, Throwpathi Amman Kovil Street,Velachery,Chennai – 600 042
Donate by Bank Transfer: 
Account Name: Deepam Trust
Account No     : 30265475129
Bank                 :State Bank of India
Branch             : IIT Madras, Chennai – 600 036
IFSC Code       : SBIN0001055
நன்கொடை அளிக்க
தருமம் செய்வோம் !!!
தயவுடன் வாழ்வோம் !!!
Copyright © 2018 Deepam Trust, All rights reserved.
www.deepamtrust.org
Our mailing address is:
admin@deepamtrust.org

ஏழை மாணவ மாணவிகளுக்கு 15ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு, கடந்த 27 ஆண்டுகளாக தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது, தொடர் சமுதாயப்...