திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் படிப்பில் நன்றாக தேர்ச்சி பெற்று மேல்படிப்பு தொடர முடியாத (Diploma, Degree, Engineering) 100 கிராமப்புற ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள்.
வாரி வழங்கும் கல்விச் செம்மல்களாகிய தங்களின் பெருந்தயவோடு தீபம் அறக்கட்டளையின் சார்பில் இதுவரை கடந்த 8 ஆண்டுகளாக 776 - மாணவ, மாணவியர்களுக்கு ரூ.41,46,948/- கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
"வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்;
பயிற்றிப் பலகல்வி தந்து - இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்." - பாரதி
இந்த ஆண்டும் மேற்படிப்பிற்கான கல்வி உதவித்தொகைக்காக தீபம் அறக்கட்டளையின் உதவியை நாடி படிப்பில் நன்றாக தேர்ச்சி பெற்ற நூற்றுக்கணக்கான கிராமப்புற ஏழை எளிய மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருக்கின்றனர். விரைவில் அவர்களிடம் தகுந்த கல்வி பேராசிரியர்களின் குழுக்கள் மூலமாக நேர்காணல் நடத்த உள்ளோம். தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாணவச் செல்வங்களுக்கு விரைவில் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
கடந்த வருடம் நடைபெற்ற கல்வி உதவிதொகையின் காணொளி தொகுப்பு
தீபம் அறக்கட்டளை வழங்கும் 9-ம் ஆண்டு கல்வி உதவித்தொகைக்கு, தாங்களும் பாகம் பெற்று, ஓர் ஏழை மாணவர் அல்லது மாணவியின் எதிர்காலத்திற்கு வழி தந்து, அவர்களின் வாழ்விற்கு ஒளியேற்றிட, கல்விக்கான உதவித்தொகை வாரி வழங்கிட வேண்டுமாய் தங்களை அன்புடன் வேண்டி விண்ணப்பிக்கின்றோம்.
|
|
| ||||||||||||||||||||||||||||||||||
|
No comments:
Post a Comment