Wednesday, 8 July 2020

மருத்துவ உதவி

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

ஏழ்மையில் வாடும் சென்னை அனகாபுத்தூரரை சேர்ந்த திருமதி டெல்லி பாய் அவர்களுடைய மகன் திரு சேகர் அவர்களுக்கு மருத்துவ உதவியாக இன்று வங்கி பரிமாற்றம் மூலம் ₹ 5,000/- வழங்கப்பட்டது.

தீபம் அறக்கட்டளை 
வேளச்சேரி சென்னை
9444073635

அரிசி உதவி


வறுமையில் வாடும் மாற்று திறனாளி ஊரப்பாக்கம் திரு பாலாஜி அவர்களின் குடும்பத்திற்கு இன்று தருமச்சாலையில் இரண்டு சிப்பங்கள் அரிசி வழங்கப்பட்டது

Thursday, 11 June 2020

அரிசி உதவி

பசி பிணி தீர்க்கும் புண்ணியத்திற்கு ஈடாக இணையாக இவ்வுலகில் எதுவுமே இல்லை!

101 பார்வையற்ற குடும்பங்களுக்கு நிதி உதவி - Rs.1,01,000


தீபம் அறக்கட்டளையின் சார்பாக 5.6.20 அன்று 50 பார்வையற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக ரூ1,000 வீதம் வங்கி பரிமாற்றம் செய்யப்பட்டது என்பதை தீபத்தின் நன்கொடையாளர்களுக்கு பதிவு செய்து மகிழ்கிறோம்.

மேலும் இன்று 51 பார்வையற்ற குடும்பங்களுக்கு ரூபாய் 1000 வீதம் வாழ்வாதார உதவி வங்கி பரிமாற்றமாக வழங்கப்பட்டது என்பதை  அருள்நிதியை வாரி வழங்கிய வாழும்  வள்ளல்களுக்கு மகிழ்ச்சியோடு தெரிவித்து மகிழ்கிறோம்.

101 பார்வையற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிக்கு  நன்கொடைகள் வழங்கிய  *நன்கொடையாளர்களை தீபம் வணங்கி பாராட்டி வாழ்த்தி மகிழ்கிறது.*

*அள்ளிக் கொடுத்த வள்ளல்கள்:*

அட்வகேட் திரு ராஜகோபாலன் வேளச்சேரி 
திரு N கந்தசாமி அண்ணா நகர் 
திரு V குமரேசன் வேளச்சேரி 
திரு கருணாகரன் வேளச்சேரி 
திரு சுரேந்தர் பெரம்பூர் 
திரு வினோத்குமார் USA 
திருமதி ஹேமா ரமேஷ் வேளச்சேரி 
செல்வி தீபா தரமணி 
திரு வெங்கடேசன் IOC தணிக்கையாளர் திரு அணில் குமார் கோயல், வால்டாக்ஸ் ரோடு 
தணிக்கையாளர் திரு ராமச்சந்திர ராவ் நுங்கம்பாக்கம் 
திருமதி S சசிகலா 
செல்வி ஐஸ்வர்யா 
திரு D ஆனந்த் வேளச்சேரி
திருமதி காஞ்சனா கிருஷ்ணன் USA.
திரு K அருண்குமார் USA.

தீபம் அறக்கட்டளையின் தொடர் அறப்பணிகளுக்கு சமுதாயப் பணிகளுக்கு வாரி வழங்கிய வள்ளல்களை வணங்கி மகிழ்கிறோம். எல்லாம் வல்ல இறைவனின் பாதம் பணிகின்றோம். எல்லா புகழும் இறைவனுக்கே!!!

மேற்கண்ட பணியை முறையாக திட்டமிட்டு, வங்கி பரிமாற்றத்திற்கு தேவையான தகவல்களை திரட்டி, SBI வங்கி மூலம் நிதி பரிமாற்றத்தை இரு முறை திறம்பட சிறப்பாக செயல்படுத்திய தீபத்தின் அலுவலக ஊழியர்கள் திரு I பூவழகன் மற்றும் திரு D சிவா அவர்களை தீபம் நிர்வாகம் பாராட்டுகிறது.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
வாழ்க தர்மம் !!!
வளர்க தர்மம் !!!
🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️
நன்றியுடன் ...
என்றென்றும் சமுதாயப் பணியில் ...
தீபம் அறக்கட்டளை
(Since 1997...) 
வேளச்சேரி சென்னை
9444073635

Wednesday, 10 June 2020

பசியாற்றுவித்தல் பரம புண்ணியம்

ஊரடங்கு காலம் முழுவதும் பசியோடு இருப்பவர்கள் தேடிச்சென்று தீபம் அறக்கட்டளையின் தொண்டர்கள் பசியாற்றி வருகின்றனர்.

உணவு வழங்கும் போது எடுக்கப்பட்ட சில காட்சிகள்

60 நாட்களுக்கும் மேலாக தொண்டு செய்யும் ஆன்மநேய அன்பர்கள்


வள்ளலார் வரலாறு கேள்வி ஞானப் போட்டி

🌺✨ வள்ளலார் வரலாறு கேள்வி ஞானப் போட்டி ✨🌺 📚 A Group – 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை 📚 B Group – 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு ...