தீபம் அறக்கட்டளை
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற, 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும் ஆளுநர் திருக்கரங்களால் நேரில் விருது பெற்ற, ஓர் சமுதாய அறத்தொண்டு நிறுவனம்.
இது தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னை மாநகர் வேதஸ்ரேணி எனும் வேளச்சேரியில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த தண்டீஸ்வரம் கோவில் அருகில், 1997ஆம் ஆண்டு முதல் பசியால் வாடுபவர்களது துயர் அறிந்து அவர்களின் பசி தீர்த்தலை சிறு சேவையாகத் தொடங்கி, 2007ஆம் ஆண்டிலிருந்து ஓர் அரசுப் பதிவு பெற்ற ஆன்மநேய அறத்தொண்டு நிறுவனமாகத் தீபம் அறக்கட்டளை திகழ்ந்து வருகிறது. இவ்வறக்கட்டளைக் கடந்த 28 ஆண்டுகாலமாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் தினசரி நித்ய தீபத் தருமச்சாலை வாயிலாகவும், நடமாடும் தருமச்சாலை வாயிலாகவும், தமிழகம் முழுவதும் நிறுவியுள்ள பல்வேறு கிராம தருமச்சாலைகளின் மூலமாகவும், காலையில் பல்லாயிரக்கணக்கானோருக்கு மூலிகை அருட்கஞ்சி வார்த்தல் சேவையையும், தினசரி நித்ய தீப தருமசாலையில் பல நூற்றுக்கணக்கான வறியவர்களுக்கு மூன்று வேளையும் பசியாற்றுவித்தல் சேவையையும், கல்வி உதவி, மருத்துவ உதவி, மாற்றுத்திறனாளிகளுக்கும் & பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கும் வாழ்வாதார உதவி, பேரிடர் காலங்களில் உதவி மற்றும் பல்வேறு சமுக நலப் பணிகளைச் செம்மையாக செய்து வரும் தீபம் அறக்கட்டளை, அனைத்திற்க்கும் முத்தாய்ப்பாக செஞ்சி தேவதானம் பேட்டை ஜோதிமாமலை வள்ளலார் சன்மார்க்க பண்ணை கிராம சேவை அமைக்கும் திட்டப்பணிகளை செய்து வருகிறது.
தீபம் அறகட்டளையின் சமூக சேவைகளைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ள கீழுள்ள இணைப்பிற்குச் செல்லவும்:
தீபம் அறக்கட்டளையின் சேவைகள் மற்றும் நிகழ்வுகளை வாட்ஸ்அப் மூலம் அறிந்து கொள்ள கீழுள்ள குழுவில் இணைந்து கொள்ளலாம்
https://chat.whatsapp.com/Kp5FXxQ87EZCA1xCa7jYLl
சமூக வலைதளங்களில் பின் தொடர:
YouTube:
https://www.youtube.com/@DEEPAMTRUSTVELACHERY
Facebook:
https://www.facebook.com/deepamtrustngo
Instagram:
https://www.instagram.com/deepamtrustngo
Twitter:
https://www.twitter.com/deepamtrustngo
நன்கொடை வழங்க:
DEEPAM TRUST
Current A/C No.30265475129
State Bank of India, IIT Madras
IFS:SBIN0001055
Gpay - 9444073635
UPI ID - deepamtrust@sbi
UPI ID - 9444073635@okbizaxis
Once you transferred the amount, click the below link and provide the transaction details So that we recognize the donor appropriately for sending the receipt.
தீபம் அறக்கட்டளை
நித்ய தீப தருமச்சாலை,
எண்: 7/8, புத்தேரி கரைத் தெரு,
வேளச்சேரி,
சென்னை - 600 042.
044-4335 8232 / 8838995501 / 9444073635