1 | அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி |
3 | அருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ் அருள் சிவ பதி ஆம் அருட்பெருஞ்ஜோதி |
5 | ஆகம முடிமேல் ஆரண முடிமேல் ஆக நின்று ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி |
7 | இக நிலைப் பொருள்ஆய்ப் பர நிலைப் பொருள்ஆய் அகம் அறப் பொருந்திய அருட்பெருஞ்ஜோதி |
9 | ஈனம் இன்று இக பரத்து இரண்டின் மேல் பொருளாய் ஆனல் இன்று ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி |
11 | உரை மனம் கடந்த ஒரு பெரு வெளி மேல் அரைசு செய்து ஓங்கும் அருட்பெருஞ்ஜோதி |
13 | ஊக்கமும் உணர்ச்சியும் ஒளிதரும் ஆக்கையும் ஆக்கமும் அருளிய அருட்பெருஞ்ஜோதி |
15 | எல்லைஇல் பிறப்பு எனும் இரும்கடல் கடத்தி என் அல்லலை நீக்கிய அருட்பெருஞ்ஜோதி |
17 | ஏறா நிலை மிசை ஏற்றி என் தனக்கே ஆறு ஆறு காட்டிய அருட்பெருஞ்ஜோதி |
19 | ஐயமும் திரிபும் அறுத்து எனது உடம்பினுள் ஐயமும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி |
21 | ஒன்றுஎன இரண்டுஎன ஒன்றிரண்டுஎன இவை அன்றுஎன விளங்கிய அருட்பெருஞ்ஜோதி |
23 | ஓதாது உணர்ந்திட ஒளி அளித்து எனக்கே ஆதாரம் ஆகிய அருட்பெருஞ்ஜோதி |
25 | ஔவியம் ஆதி ஓர் ஆறும் தவிர்த்த பேர் அவ் இயல் வழுத்தும் அருட்பெருஞ்ஜோதி |
27 | திருநிலைத் தனிவெளி சிவவெளி எனும் ஓர் அருள்வெளிப் பதி வளர் அருட்பெருஞ்ஜோதி |
29 | சுத்த சன்மார்க்க சுகத் தனி வெளி எனும் அத் தகைச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி |
31 | சுத்த மெய் ஞான சுக உதய வெளி எனும் அத்துவிதச் சபை அருட்பெருஞ்ஜோதி |
33 | தூய கலாந்த சுகம் தரு வெளி எனும் ஆய சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி |
35 | ஞான யோகாந்த நடத் திருவெளி எனும் ஆனி இல் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி |
37 | விமல போதாந்த மா மெய்ப்பொருள் வெளி எனும் அமல சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி |
39 | பெரிய நாதாந்தப் பெருநிலை வெளி எனும் அரிய சிற்றம்பலத்து அருட்பெருஞ்ஜோதி |
41 | சுத்த வேதாந்தத் துரிய மேல் வெளி எனும் அத் தகு சிற்சபை அருட்பெருஞ்ஜோதி |
43 | சுத்த சித்தாந்த சுகப் பெரு வெளி எனும் அத் தனிச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி |
45 | தகர மெய் ஞான தனிப்பெரு வெளி எனும் அகரநிலைப் பதி அருட்பெருஞ்ஜோதி |
47 | தத்துவ அதீத தனிப் பொருள் வெளி எனும் அத் திரு அம்பலத்து அருட்பெருஞ்ஜோதி |
49 | சத்து சித்து ஆனந்தத் தனிப் பரவெளி எனும் அச்சு இயல் அம்பலத்து அருட்பெருஞ்ஜோதி |
51 | சாகாக் கலை நிலை தழைத்திடு வெளி எனும் ஆகாயத்து ஒளிர் அருட்பெருஞ்ஜோதி |
53 | காரண காரியம் காட்டிடு வெளி எனும் ஆரணச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி |
55 | ஏகம் அனேகம் எனப் பகர் வெளி எனும் ஆகமச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி |
57 | வேத ஆகமங்களின் விளைவுகட்கு எல்லாம் ஆதாரம் ஆம் சபை அருட்பெருஞ்ஜோதி |
59 | என்று ஆதிய சுடர்க்கு இயல் நிலைஆய், அது அன்றுஆம் திருச்சபை அருட்பெருஞ்ஜோதி |
61 | சமயம் கடந்த தனிப்பொருள் வெளியாய் அமையும் திருச்சபை அருட்பெருஞ்ஜோதி |
63 | முச்சுடர்களும் ஒளி முயங்குற அளித்துஅருள் அச் சுடர் ஆம் சபை அருட்பெருஞ்ஜோதி |
65 | துரியமும் கடந்த சுக பூரணம் தரும் அரிய சிற்றம்பலத்து அருட்பெருஞ்ஜோதி |
67 | எவ் வகைச் சுகங்களும் இனிது உற அளித்த அருள் அவ் வகைச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி |
69 | இயற்கை உண்மையதுஆய் இயற்கை இன்பமும்ஆம் அயர்ப்புஇலாச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி |
71 | சாக்கிர அதீதத் தனிவெளியாய் நிறைவு ஆக்கிய சிற்சபை அருட்பெருஞ்ஜோதி |
73 | சுட்டுதற்கு அரிதாம் சுகஅதீத வெளி எனும் அட்டமேல் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி |
75 | நவம் தவிர் நிலைகளும் நண்ணும் ஓர் நிலையாய் அவம் தவிர் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி |
77 | உபய பக்கங்களும் ஒன்று எனக் காட்டிய அபய சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி |
79 | சேகரம் ஆம் பல சித்தி நிலைக்கு எலாம் ஆகரம் ஆம்சபை அருட்பெருஞ்ஜோதி |
81 | மனம் ஆதிகட்கு அரிய மதஅதீத வெளி ஆம் அனாதி சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி |
83 | ஓதி நின்று உணர்ந்து உணர்ந்து உணர்தற்கு அரிது ஆம் ஆதி சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி |
85 | வாரமும் அழியா வரமும் தரும் திரு ஆரமுதுஆம் சபை அருட்பெருஞ்ஜோதி |
87 | இழியாப் பெருநலம் எல்லாம் அளித்த அருள் அழியாச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி |
89 | கற்பம் பல பல கழியினும் அழிவு உறா அற்புதம் தரும் சபை அருட்பெருஞ்ஜோதி |
91 | எனைத்தும் துன்பு இலா இயல் அளித்து எண்ணிய அனைத்தும் தரும் சபை அருட்பெருஞ்ஜோதி |
93 | பாணிப்பு இலதாய்ப் பரவினோர்க்கு அருள்புரி ஆணிப்பொன் அம்பலத்து அருட்பெருஞ்ஜோதி |
95 | எம் பலம் எனத் தொழுது ஏத்தினோர்க்கு அருள்புரி அம்பலத்து ஆடல்செய் அருட்பெருஞ்ஜோதி |
97 | தம் பர ஞான சிதம்பரம் எனும் ஓர் அம்பரத்து ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி |
99 | எச் சபை பொது என இயம்பினர் அறிஞர்கள் அச் சபை இடம் கொளும் அருட்பெருஞ்ஜோதி |
101 | வாடுதல் நீக்கிய மணிமன்று இடையே ஆடுதல் வல்ல அருட்பெருஞ்ஜோதி |
103 | நாடகத் திருச்செயல் நவிற்றிடும் ஒரு பேர் ஆடகப் பொது ஒளிர் அருட்பெருஞ்ஜோதி |
105 | கற்பனை முழுவதும் கடந்து ஒளி தரும் ஓர் அற்புதச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி |
107 | ஈன்ற நல் தாயினும் இனிய பெரும் தயவு ஆன்ற சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி |
109 | இன்பு உறு நான் உளத்து எண்ணியாங்கு எண்ணியாங்கு அன்பு உறத் தரு சபை அருட்பெருஞ்ஜோதி |
111 | எம்மையும் என்னைவிட்டு இறையும் பிரியாது அம்மை அப்பனும் ஆம் அருட்பெருஞ்ஜோதி |
113 | பிரிவு உற்று அறியாப் பெரும் பொருள் ஆய் என் அறிவுக்கு அறிவுஆம் அருட்பெருஞ்ஜோதி |
115 | சாதியும் மதமும் சமயமும் காணா ஆதி அநாதி ஆம் அருட்பெருஞ்ஜோதி |
117 | தநு கரணாதிகள் தாம் கடந்து அறியும் ஓர் அநுபவம் ஆகிய அருட்பெருஞ்ஜோதி |
119 | உனும் உணர்வு உணர்வாய் உணர்வு எலாம் கடந்த அநுபவ அதீத அருட்பெருஞ்ஜோதி |
121 | பொது உணர்வு உணரும்போது அலால் பிரித்தே அது எனில் தோன்றா அருட்பெருஞ்ஜோதி |
123 | உளவினில் அறிந்தால் ஒழிய மற்று அளக்கின் அளவினில் அளவா அருட்பெருஞ்ஜோதி |
125 | என்னையும் பணிகொண்டு இறவாவரம் அளித்து அன்னையில் உவந்த அருட்பெருஞ்ஜோதி |
127 | ஓதி ஓதாமல் உறவு எனக்கு அளித்த ஆதி ஈறு இல்லா அருட்பெருஞ்ஜோதி |
129 | படி அடி வான் முடி பற்றினும் தோற்றா அடி முடி எனும் ஓர் அருட்பெருஞ்ஜோதி |
131 | பவனத்தின் அண்டப் பரப்பின் எங்கு எங்கும் அவனுக்கு அவன்ஆம் அருட்பெருஞ்ஜோதி |
133 | திவள் உற்ற அண்டத் திரளின் எங்கு எங்கும் அவளுக்கு அவள்ஆம் அருட்பெருஞ்ஜோதி |
135 | மதன் உற்ற அண்ட வரைப்பின் எங்கு எங்கும் அதனுக்கு அதுஆம் அருட்பெருஞ்ஜோதி |
137 | எப்பாலும்ஆய் வெளிஎல்லாம் கடந்து மேல் அப்பாலும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி |
139 | வல்லதுஆய் எல்லாம் ஆகி எல்லாமும் அல்லதுஆய் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி |
141 | எப்பொருள் மெய்ப்பொருள் என்பர் மெய்கண்டோர் அப்பொருள் ஆகிய அருட்பெருஞ்ஜோதி |
143 | தாங்கு அகிலஅண்ட சரஅசர நிலைநின்று ஆங்கு உற விளங்கும் அருட்பெருஞ்ஜோதி |
145 | சத்தர்கள் எல்லாம் தழைத்திட அகம்புறத்து அத்திசை விளங்கும் அருட்பெருஞ்ஜோதி |
147 | சத்திகள் எல்லாம் தழைக்க எங்குஎங்கும் அத்தகை விளங்கும் அருட்பெருஞ்ஜோதி |
149 | முந்து உறும் ஐந்தொழி மூர்த்திகள் பலர்க்கும் ஐந்தொழில் அளிக்கும் அருட்பெருஞ்ஜோதி |
151 | பெரிதினும் பெரிது ஆய் சிறிதினும் சிறிது ஆய் அரிதினும் அரிது ஆம் அருட்பெருஞ்ஜோதி |
153 | காட்சியும் காணாக் காட்சியும் அதுதரும் ஆட்சியும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி |
155 | இன்பு உறு சித்திகள் எல்லாம் புரிக என்று அன்புடன் எனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி |
157 | இறவா வரம் அளித்து என்னை மேல் ஏற்றிய அற ஆழிஆம் தனி அருட்பெருஞ்ஜோதி |
159 | நான் அந்தம் இல்லா நலம் பெற எனக்கே ஆனந்தம் நல்கிய அருட்பெருஞ்ஜோதி |
161 | எண்ணிய எண்ணி யாங்கு இயற்றுக என்று எனை அண்ணி உள் ஓங்கும் அருட்பெருஞ்ஜோதி |
163 | மேயினை மெய்ப்பொருள், விளங்கினை, நீ அது ஆயினை, என்று அருள் அருட்பெருஞ்ஜோதி |
165 | எண்ணில், செழுந்தேன் இனிய தெள் அமுது என அண்ணித்து இனிக்கும் அருட்பெருஞ்ஜோதி |
167 | சிந்தையில் துன்பு ஒழி சிவம் பெறுக எனத் தொழில் ஐந்தையும் எனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி |
169 | எங்கு எங்கு இருந்து உயிர் ஏது எது வேண்டினும் அங்கு அங்கு இருந்து அருள் அருட்பெருஞ்ஜோதி |
171 | சகமுதல் புறப்புறம் தங்கிய அகப்புறம் அகம் புறம் முற்றும்ஆம் அருட்பெருஞ்ஜோதி |
173 | சிகரமும் வகரமும் சேர்தனி உகரமும் அகரமும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி |
175 | உப ரசவேதியின் உபயமும் பரமும் அபரமும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி |
177 | மந்தணம் இது என மறுஇலா மதியால் அந்தணர் வழுத்தும் அருட்பெருஞ்ஜோதி |
179 | எம் புயக்கனி என எண்ணுவார் இதய அம்புயத்து அமர்ந்த அருட்பெருஞ்ஜோதி |
181 | செடி அறுத்தே திட தேகமும் போகமும் அடியருக்கே தரும் அருட்பெருஞ்ஜோதி |
183 | துன்புஅறுத்து ஒருசிவ துரிய சுகம் தனை அன்பருக்கே தரும் அருட்பெருஞ்ஜோதி |
185 | பொது அது சிறப்பு அது புதியது பழயது என்று அது அது ஆய்த் திகழ் அருட்பெருஞ்ஜோதி |
187 | சேதனப் பெருநிலை திகழ்தரும் ஒருபரை ஆதனத்து ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி |
189 | ஓமயத் திரு உரு உவப்புடன் அளித்து எனக்கு ஆமயத் தடைதவிர் அருட்பெருஞ்ஜோதி |
191 | எப்படி எண்ணியது என் கருத்து இங்கு, எனக்கு அப்படி அருளிய அருட்பெருஞ்ஜோதி |
193 | எத்தகை விழைந்தன என்மனம் இங்கு, எனக்கு அத்தகை அருளிய அருட்பெருஞ்ஜோதி |
195 | இங்கு உறத் திரிந்து உளம் இளையா வகை எனக்கு அம் கையில் கனியாம் அருட்பெருஞ்ஜோதி |
197 | பார் உய்யப் புரிக எனப் பணித்து எனக்கு அருளி என் ஆர் உயிர்க்கு உள் ஒளிர் அருட்பெருஞ்ஜோதி |
199 | தேவி உற்று ஒளிர்தரு திரு உரு உடன் எனது ஆவியில் கலந்து ஒளிர் அருட்பெருஞ்ஜோதி |
201 | எவ்வழி மெய்வழி என்ப வேதஆகமம் அவ்வழி எனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி |
203 | வையமும் வானமும் வாழ்த்திட எனக்கு அருள் ஐ அறிவு அளித்த அருட்பெருஞ்ஜோதி |
205 | சாமாறு அனைத்தும் தவிர்த்து இங்கு எனக்கே ஆமாறு அருளிய அருட்பெருஞ்ஜோதி |
207 | சத்தியம் ஆம் சிவசத்தியை ஈந்து எனக்கு அத்திறல் வளர்க்கும் அருட்பெருஞ்ஜோதி |
209 | சாவா நிலை இது, தந்தனம் உனக்கே ஆ வா என அருள் அருட்பெருஞ்ஜோதி |
211 | சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி |
213 | மயர்ந்திடேல் சிறிதும் மனம் தளர்ந்து அஞ்சேல் அயர்ந்திடேல் என்று அருள் அருட்பெருஞ்ஜோதி |
215 | தேசு உறத் திகழ் தரு திருநெறிப் பொருள் இயல் ஆசு அறத் தெரித்த அருட்பெருஞ்ஜோதி |
217 | காட்டிய உலகு எலாம் கருணையால் சித்தியின் ஆட்டியல் புரியும் அருட்பெருஞ்ஜோதி |
219 | எம் குலம் எம் இனம் என்பது தொண்ணூற்றாறு அங்குலம் என்று அருள் அருட்பெருஞ்ஜோதி |
221 | எம் மதம் எம் இறை என்ப உயிர்த் திரள் அம் மதம் என்று அருள் அருட்பெருஞ்ஜோதி |
223 | கூறிய கருநிலை குலவிய கீழ் மேல் ஆறு இயல் என உரை அருட்பெருஞ்ஜோதி |
225 | எண் தர முடியாது இலங்கிய பற்பல அண்டமும் நிறைந்து ஒளிர் அருட்பெருஞ்ஜோதி |
227 | சார் உயிர்க்கு எல்லாம் தாரகம் ஆம் பரை ஆர் உயிர்க்கு உயிராம் அருட்பெருஞ்ஜோதி |
229 | வாழி நீடூழி வாழி என்று ஓங்கு பேர் ஆழியை அளித்த அருட்பெருஞ்ஜோதி |
231 | மாய்ந்தவர் மீட்டும் வருநெறி தந்து இதை ஆய்ந்திடு என்று உரைத்த அருட்பெருஞ்ஜோதி |
233 | எச்சம் நினக்கு இலை எல்லாம் பெறுக என்று அச்சம் தவிர்த்த என் அருட்பெருஞ்ஜோதி |
235 | நீடுக! நீயே நீள் உலகு அனைத்தும் நின்று ஆடுக! என்ற என் அருட்பெருஞ்ஜோதி |
237 | முத்திறல் வடிவமும் முன்னியாங்கு எய்துறும் அத்திறல் எனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி |
239 | மூவகைச் சித்தியின் முடிபுகள் முழுவதும் ஆ(ம்)வகை எனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி |
241 | கரும சித்திகளின் கலை பல கோடியும் அரசு உற எனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி |
243 | யோக சித்திகள் வகை உறு பல கோடியும் ஆக என்று எனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி |
245 | ஞான சித்தியின் வகை நல் விரிவு அனைத்தும் ஆனி இன்று எனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி |
247 | புடையுறு சித்தியின் பொருட்டே முத்தியை அடைவது என்று அருளிய அருட்பெருஞ்ஜோதி |
249 | முத்தி என்பது நிலை முன் உறு சாதனம் அத்தகவு என்ற என் அருட்பெருஞ்ஜோதி |
251 | சித்தி என்பது நிலை சேர்ந்த அநுபவம் அத்திறல் என்ற என் அருட்பெருஞ்ஜோதி |
253 | ஏக சிற்சித்தியே இயல் உற அனேகம் ஆகியது என்ற என் அருட்பெருஞ்ஜோதி |
255 | இன்ப சித்தியின் இயல் ஏகம் அனேகம் அன்பருக்கு என்ற என் அருட்பெருஞ்ஜோதி |
257 | எட்டு இரண்டு என்பன இயலும் முற்படி என அட்ட நின்று அருளிய அருட்பெருஞ்ஜோதி |
259 | இப்படி கண்டனை இனி உறு படி எலாம் அப்படியே எனும் அருட்பெருஞ்ஜோதி |
261 | படி முடி கடந்தனை, பார்! இது பார்! என அடி முடி காட்டிய அருட்பெருஞ்ஜோதி |
263 | ஜோதியுள் ஜோதியின் சொருபமே அந்தம் ஆதி என்று அருளிய அருட்பெருஞ்ஜோதி |
265 | இந்த சிற்ஜோதியின் இயல் உரு ஆதி அந்தம் என்று அருளிய அருட்பெருஞ்ஜோதி |
267 | ஆதியும் அந்தமும் அறிந்தனை, நீயே ஆதி என்று அருளிய அருட்பெருஞ்ஜோதி |
269 | நல் அமுது என் ஒரு நா உளம் காட்டி என் அல்லலை நீக்கிய அருட்பெருஞ்ஜோதி |
271 | கற்பகம் என் உளம்கை தனில் கொடுத்தே அற்புதம் இயற்று எனும் அருட்பெருஞ்ஜோதி |
273 | கதிர்நலம் என் இரு கண்களில் கொடுத்தே அதிசயம் இயற்று எனும் அருட்பெருஞ்ஜோதி |
275 | அருள் ஒளி என் தனி அறிவினில் விரித்தே அருள் நெறி விளக்கு எனும் அருட்பெருஞ்ஜோதி |
277 | பரை ஒளி என் மனப் பதியினில் விரித்தே அரசு அது இயற்று எனும் அருட்பெருஞ்ஜோதி |
279 | வல்லப சத்திகள் வகை எலாம் அளித்து எனது அல்லலை நீக்கிய அருட்பெருஞ்ஜோதி |
281 | ஆர் இயல் அகம், புறம், அகப்புறம், புறப்புறம் ஆர் அமுதுஎனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி |
283 | சூரிய சந்திர ஜோதியுள் ஜோதி என்று ஆரியர் புகழ்தரும் அருட்பெருஞ்ஜோதி |
285 | பிறிவு ஏது இனி, உனைப் பிடித்தனம், உனக்கு நம் அறிவே வடிவு, எனும் அருட்பெருஞ்ஜோதி |
287 | எஞ்சேல் உலகினில் யாதொன்று பற்றியும் அஞ்சேல் என்று அருள் அருட்பெருஞ்ஜோதி |
289 | மாண்டு உழலா வகை வந்து இளம் காலையே ஆண்டு கொண்டு அருளிய அருட்பெருஞ்ஜோதி |
291 | பற்றுகள் அனைத்தையும் பற்று அறத் தவிர்த்து எனது அற்றமும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி |
293 | சமயம் குலம் முதல் சார்பு எலாம் விடுத்த அமயம் தோன்றிய அருட்பெருஞ்ஜோதி |
295 | வாய்தற்கு உரித்து எனும் மறை ஆகமங்களால் ஆய்தற்கு அரிய அருட்பெருஞ்ஜோதி |
297 | எல்லாம் வல்ல சித்து எனக்கு அளித்து எனக்கு உனை அல்லாது இலை எனும் அருட்பெருஞ்ஜோதி |
299 | நவை இலா உளத்தில் நாடிய நாடிய அவை எலாம் அளிக்கும் அருட்பெருஞ்ஜோதி |
301 | கூற்று உதைத்து என்பால் குற்றமும் குணம் கொண்டு ஆற்றல் மிக்கு அளித்த அருட்பெருஞ்ஜோதி |
303 | நன்று அறிவு அறியா நாயினேன் தனையும் அன்று வந்து ஆண்ட அருட்பெருஞ்ஜோதி |
305 | நாயினும் கடையேன் ஈயினும் இழிந்தேன் ஆயினும் அருளிய அருட்பெருஞ்ஜோதி |
307 | தோத்திரம் புகலேன் பாத்திரம் அல்லேன் ஆத்திரம் அளித்த அருட்பெருஞ்ஜோதி |
309 | எச் சோதனைகளும் இயற்றாது எனக்கே 'அச்சோ' என்று அருள் அருட்பெருஞ்ஜோதி |
311 | ஏறா நிலை நடு ஏற்றி என் தனை, ஈண்டு ஆறாறு கடத்திய அருட்பெருஞ்ஜோதி |
313 | தாபத் துயரம் தவிர்த்து, உலகு உறும் எலா ஆபத்தும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி |
315 | மருள் பகை தவிர்த்து எனை வாழ்வித்து எனக்கே அருள்குரு ஆகிய அருட்பெருஞ்ஜோதி |
317 | உருவமும் அருவமும் உபயமும் ஆகிய அருள் நிலை தெரித்த அருட்பெருஞ்ஜோதி |
319 | இருள் அறுத்து என் உளத்து எண்ணியாங்கு அருளி அருள் அமுது அளித்த அருட்பெருஞ்ஜோதி |
321 | தெருள் நிலை இது எனத் தெருட்டி, என் உளத்து இருந்து அருள் நிலை காட்டிய அருட்பெருஞ்ஜோதி |
323 | பொருட் பதம் எல்லாம் புரிந்து மேல் ஓங்கிய அருட் பதம் அளித்த அருட்பெருஞ்ஜோதி |
325 | உருள் சகடு ஆகிய உளம் சலியா வகை அருள் வழி நிறுத்திய அருட்பெருஞ்ஜோதி |
327 | வெருள் மன, மாயை வினை இருள் நீக்கி, உள் அருள் விளக்கு ஏற்றிய அருட்பெருஞ்ஜோதி |
329 | சுருள் விரிவு உடை மனச் சுழல் எலாம் அறுத்தே அருள் ஒளி நிரப்பிய அருட்பெருஞ்ஜோதி |
331 | விருப்போடு இகல் உறு வெறுப்பும் தவிர்த்தே அருட்பேறு அளித்த அருட்பெருஞ்ஜோதி |
333 | அருட்பேர் தரித்து உலகு அனைத்தும் மலர்ந்திட அருட்சீர் அளித்த அருட்பெருஞ்ஜோதி |
335 | உலகு எலாம் பரவ என் உள்ளத்து இருந்தே அலகு இலா ஒளி செய் அருட்பெருஞ்ஜோதி |
337 | விண்ணின் உள் விண்ஆய், விண் நடு விண்ஆய் அண்ணி நிறைந்த அருட்பெருஞ்ஜோதி |
339 | விண் உறு விண்ஆய் விண்நிலை விண்ஆய் அண்ணி வயங்கும் அருட்பெருஞ்ஜோதி |
341 | காற்றின் உள் காற்றாய்க் காற்று இடைக் காற்றுஆய் ஆற்றலின் ஓங்கும் அருட்பெருஞ்ஜோதி |
343 | காற்று உறு காற்றாய்க் கால்நிலைக் காற்றுஆய் ஆற்ற விளங்கும் அருட்பெருஞ்ஜோதி |
345 | அனலின் உள் அனல்ஆய் அனல்நடு அனல்ஆய் அனல் உற விளங்கும் அருட்பெருஞ்ஜோதி |
347 | அனல் உறும் அனல்ஆய் அனல்நிலை அனல்ஆய் அனல் உற வயங்கும் அருட்பெருஞ்ஜோதி |
349 | புனலின் உள் புனல்ஆய்ப் புனல் இடைப் புனல்ஆய் அனை என வயங்கும் அருட்பெருஞ்ஜோதி |
351 | புனல் உறு புனல்ஆய்ப் புனல் நிலைப் புனல்ஆய் அனை எனப் பெருகும் அருட்பெருஞ்ஜோதி |
353 | புவியின் உள் புவிஆய்ப் புவிநடுப் புவிஆய் அவை தர வயங்கும் அருட்பெருஞ்ஜோதி |
355 | புவி உறு புவிஆய்ப் புவிநிலைப் புவிஆய் அவை கொள விரிந்த அருட்பெருஞ்ஜோதி |
357 | விண்நிலை சிவத்தின் வியன்நிலை அளவி அண் உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
359 | வளிநிலை சத்தியின் வளர்நிலை அளவி அளிஉற அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
361 | நெருப்பது நிலை நடு நிலை எலாம் அளவி அருப்பிட வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
363 | நீர்நிலை திரைவளர் நிலைதனை அளவி ஆர்வு உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
365 | புவிநிலை சுத்தமாம் பொற்பதி அளவி அவை உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
367 | மண்ணினில் திண்மையை வகுத்து அதில் கிடக்கை அண் உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
369 | மண்ணினில் பொன்மை வகுத்து அதில் ஐம்மையை அண் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
371 | மண்ணினில் ஐம்பூ வகுத்து அதில் ஐந்திறம் அண் உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
373 | மண்ணினில் நாற்றம் வகுத்து அது பல்வகை அண் உறப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி |
375 | மண்ணினில் பற்பல வகை கரு நிலை இயல் அண் உறப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி |
377 | மண்ணினில் ஐந்து இயல் வகுத்து அதில் பல்பயன் அண் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
379 | மண்ணிடை அடிநிலை வகுத்து அதில் பல்நிலை அண் உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
381 | மண்ணில் ஐந்தைந்து வகையும் கலந்துகொண்டு அண் உறப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி |
383 | மண் இயல் சத்திகள் மண் செயல் சத்திகள் அண் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
385 | மண் உருச் சத்திகள் மண்கலைச் சத்திகள் அண் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
387 | மண் ஒளிச் சத்திகள் மண் கருச் சத்திகள் அண் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
389 | மண் கணச் சத்திகள் வகை பல பலவும் அண் கொள அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
391 | மண் நிலைச் சத்தர்கள் வகை பல பலவும் அண் உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
393 | மண்கரு உயிர்த்தொகை வகைவிரி பலவா அண்கொள அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
395 | மண்ணினில் பொருள் பல வகை விரி வெவ்வேறு அண் உறப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி |
397 | மண் உறு நிலைபல வகுத்து அதில் செயல் பல அண் உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
399 | மண்ணிடைப் பக்குவம் வகுத்து அதில் பயன் பல அண் உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
401 | மண் இயல் பல பல வகுத்து அதில் பிறவும் அண் உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
403 | நீரினில் தண்மையும் நிகழ் ஊரு(று) ஒழுக்கமும் ஆர் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
405 | நீரினில் பசுமையை நிறுத்தி அதில் பல ஆர் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
407 | நீரிடைப் பூஇயல், நிகழ் உறு திறஇயல் ஆர்தர வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
409 | நீரினில் சுவை நிலை நிரைத்து, அதில் பல்வகை ஆர் உறப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி |
411 | நீரினில் கருநிலை நிகழ்த்திய பற்பல ஆர் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
413 | நீரிடை நான்கு இயல் நிலவுவித்து, அதில் பல ஆர்தர வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
415 | நீரிடை அடிநடு நிலைஉற வகுத்து, அனல் ஆர்தரப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி |
417 | நீரிடை ஒளி இயல், நிகழ்பல குண இயல் ஆர்தர வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
419 | நீரிடைச் சத்திகள் நிகழ்வகை பலபல ஆர்தர வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
421 | நீரினில் சத்தர்கள் நிறைவகை உறைவகை ஆர்தரப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி |
423 | நீரிடை உயிர்பல நிகழ் உறு பொருள்பல, ஆர் உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
425 | நீரிடை நிலைபல, நிலை உறு செயல்பல, ஆர்கொள வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
427 | நீர் உறு பக்குவ நிறை உறு பயன்பல ஆர் உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
429 | நீர் இயல் பலபல நிறைத்து, அதில் பிறவும் ஆர்தரப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி |
431 | தீயினில் சூட்டு இயல், சேர்தரச் செலவு இயல், ஆய் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
433 | தீயினில் வெண்மைத் திகழ் இயல் பலவா ஆய் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
435 | தீயிடைப் பூ எலாம், திகழுறு திறம் எலாம், ஆய் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
437 | தீயிடை ஒளியே திகழுற அமைத்து, அதில் ஆய் பல வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
439 | தீயிடை அருநிலை, திருநிலை, கருநிலை, ஆய் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
441 | தீயிடை மூஇயல் செறிவித்து, அதில்பல ஆய் வகை அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
443 | தீயிடை நடுநிலை, திகழ்நடு நடுநிலை ஆய் உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
445 | தீயிடைப் பெரும்திறல் சித்திகள் பலபல ஆய் உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
447 | தீயிடைச் சித்துகள் செப்புறும் அனைத்தும் ஆய் உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
449 | தீயிடைச் சத்திகள் செறிதரு சத்தர்கள் ஆய் பல வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
451 | தீயிடை உயிர்பல திகழுறு பொருள்பல ஆய் வகை அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
453 | தீயிடை நிலை பல, திகழ் செயல் பல, பயன் ஆய் பல, வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
455 | தீயினிற் பக்குவம் சேர்குணம் இயல்குணம் ஆய் பல வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
457 | தீயிடை உருக்குஇயல், சிறப்புஇயல், பொதுஇயல் ஆய் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
459 | தீஇயல் பலபல செறித்து, அதில் பலவும் ஆய் உறப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி |
461 | காற்றிடை அசை இயல், கலை இயல், உயிர் இயல் ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
463 | காற்றிடைப் பூஇயல் கருதுறு திற இயல் ஆற்றலின் வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
465 | காற்றினில் ஊறு இயல் காட்டுறு பலபல ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
467 | காற்றினில் பெருநிலை, கருநிலை, அளவு இல ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
469 | காற்றிடை ஈர் இயல் காட்டி அதில் பல ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
471 | காற்றினில் இடைநடு கடைநடு அகம் புறம் ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
473 | காற்றினில் குணம்பல, கணம்பல, வணம்பல ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
475 | காற்றிடைச் சத்திகள் கணக்குஇல, உலப்புஇல ஆற்றவும் அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
477 | காற்றிடைச் சத்தர்கள் கணிதம் கடந்தன ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
479 | காற்றிடை உயிர்பல, கதிபல, கலைபல ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
481 | காற்றிடை நால்நிலைக் கருவிகள் அனைத்தையும் ஆற்று உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
483 | காற்றிடை உணர் இயல் கருதுஇயல் ஆதிய ஆற்று உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
485 | காற்றிடைச் செயல் எலாம் கருதிய பயன் எலாம் ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
487 | காற்றினில் பக்குவக் கதி எலாம் விளைவித்து ஆற்றலின் வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
489 | காற்றினில் காலம் கருதுறு வகை எலாம் ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
491 | காற்று இயல் பலபல கணித்து அதில் பிறவும் ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
493 | வெளியிடைப் பகுதியின் விரிவு இயல் அணைவு இயல் அளிஉற அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
495 | வெளியிடைப் பூ எலாம் வியப்புறு திறன் எலாம் அளிஉற அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
497 | வெளியினில் ஒலிநிறை வியன்நிலை அனைத்தும் அளிஉற அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
499 | வெளியிடைக் கருநிலை, விரிநிலை, அருநிலை அளிகொள வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
501 | வெளியிடை முடிநிலை விளங்குற வகுத்தே அளிபெற விளக்கும் அருட்பெருஞ்ஜோதி |
503 | வெளியினில் சத்திகள் வியப்பு உற, சத்தர்கள் அளிஉற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
505 | வெளியிடை ஒன்றே விரித்து, அதில் பற்பல அளிஉற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
507 | வெளியிடைப் பலவே விரித்து, அதில் பற்பல அளிதர அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
509 | வெளியிடை உயிர் இயல் வித்து இயல் சித்து இயல் அளிபெற அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
511 | வெளியின் அனைத்தையும் விரித்து அதில் பிறவும் அளிஉற அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
513 | புறநடுவொடு, கடை புணர்ப்பித்து, ஒருமுதல் அறம் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
515 | புறம்தலை நடுவொடு புணர்ப்பித்து ஒருகடை அறம்பெற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
517 | அகப்புற நடு கடை அணைவால் புறமுதல் அகப்பட வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
519 | அகப்புற நடு முதல் அணைவால் புறக்கடை அகப்பட அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
521 | கருது அகம் நடுவொடு கடை அணைந்து அகம்முதல் அருள் உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
523 | தணிஅகம் நடுவொடு தலை அணைந்து அகக்கடை அணியுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
525 | அகம் நடு, புறக்கடை அணைந்து, அகப் புறமுதல் அகம் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
527 | அகநடு புறத்தலை அணைந்து அகப் புறக்கடை அகல் இடை வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
529 | அகநடு அதனால் அகப்புற நடுவை அகமற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
531 | அகப்புற நடுவால் அணிபுற நடுவை அகப்பட அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
533 | புறநடு அதனால் புறப்புற நடுவை அறம் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
535 | புகல் அரும் அகண்ட பூரண நடுவால் அகநடு வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
537 | புறப்புறக் கடைமுதல் புணர்ப்பால் புறப்புற அறக்கணம் வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
539 | புறத்து இயல் கடைமுதல் புணர்ப்பால் புறத்தூறும் அறக்கணம் வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
541 | அகப்புறக் கடை முதல் அணைவால் அக்கணம் அகத்து உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
543 | அகக்கடை முதல் புணர்ப்பு அதனால் அகக்கணம் அகத்திடை வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
545 | வானிடைக் காற்றும், காற்றிடை நெருப்பும், ஆன் அற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
547 | நெருப்பிடை நீரும், நீரிடைப் புவியும், அருப்பிட வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
549 | நீர்மேல் நெருப்பும், நெருப்பின்மேல் உயிர்ப்பும் ஆர்வு உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
551 | புனல்மேல் புவியும், புவிமேல் புடைப்பும், அனல்மேல் வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
553 | பகுதி வான் வெளியில் படர்ந்த மாபூத அகல் வெளி வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
555 | உயிர்வெளி இடையே உரைக்க அரும் பகுதி அயவெளி வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
557 | உயிர்வெளி அதனை, உணர்கலை வெளியில் அயல் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
559 | கலைவெளி அதனைக், கலப்பு அறு சுத்த அலர்வெளி வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
561 | சுத்தநல் வெளியைத் துரிசு அறு பரவெளி அத்துஇடை வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
563 | பரவெளி அதனைப் பரம்பர வெளியில் அரசு உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
565 | பரம்பர வெளியைப் பராபர வெளியில் அரம்தெற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
567 | பராபர வெளியைப் பகர் பெரு வெளியில் அராவு அற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
569 | பெருவெளி அதனைப் பெரும் சுகவெளியில் அருள் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
571 | குணம் முதல் கருவிகள் கூடிய பகுதியில் அணைவு உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
573 | மனம் முதல் கருவிகள் மன்னுயிர் வெளியிடை அனம் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
575 | காலமே முதலிய கருவிகள் கலைவெளி ஆலுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
577 | துரிசு அறு கருவிகள் சுத்தநல் வெளியிடை அரசு உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
579 | இவ்வெளி எல்லாம் இலங்க, அண்டங்கள் அவ் வயின் அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
581 | ஓங்கிய அண்டம் ஒளிபெற முச்சுடர் ஆங்கிடை வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
583 | சிருட்டித் தலைவரைச் சிருட்டி அண்டங்களை அருள்திறல் வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
585 | காவல்செய் தலைவரைக் காவல் அண்டங்களை ஆ வகை அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
587 | அழித்தல்செய் தலைவரை அவர் அண்டங்களை அழுக்கற அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
589 | மறைத்திடு தலைவரை மற்றும் அண்டங்களை அறத்தொடு வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
591 | தெளிவுசெய் தலைவரைத் திகழும் அண்டங்களை அளிபெற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
593 | விந்துவாம் சத்தியை விந்தின் அண்டங்களை அம்திறல் வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
595 | ஓங்கார சத்திகள் உற்ற அண்டங்களை ஆங்கு ஆக அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
597 | சத்தத் தலைவரைச் சாற்றும் அண்டங்களை அத்தகை வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
599 | நாதம் ஆம் பிரமமும் நாத அண்டங்களை ஆதரம் வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
601 | பகர் பரா சத்தியைப் பதியும் அண்டங்களும் அகமற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
603 | பரசிவ பதியைப் பரசிவ அண்டங்களை அரசுற அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
605 | எண் இல் பல் சத்தியை எண் இல் அண்டங்களை அண் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
607 | அளவு இல் பல் சத்தரை அளவு இல் அண்டங்களை அளவு உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
609 | உயிர்வகை அண்டம் உலப்பு இல எண் இல அயர்வு உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
611 | களவுஇல கடல்வகை கங்குஇல கரைஇல அளவுஇல வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
613 | கடல் அவை அனைத்தும் கரைஇன்றி நிலை உற அடல் அனல் அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
615 | கடல்களும் மலைகளும் கதிகளும் நதிகளும் அடல் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
617 | கடல் இடைப் பல்வளம் கணித்து அதில் பல் உயிர் அடல் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
619 | மலை இடைப் பல்வளம் வகுத்து அதில் பல் உயிர் அலைவு உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
621 | ஒன்றினில் ஒன்றே, ஒன்றிடை ஆயிரம் அன்றுஅற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
623 | பத்திடை ஆயிரம், பகர் அதில் கோடி அத்து உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
625 | நூற்று இடை இலக்கம் நுவல் அதில் அனந்தம் ஆற்றிடை வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
627 | கோடியில் அனந்த கோடி, பல்கோடி ஆடு உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
629 | வித்து இயல் ஒன்றாய் விளைவு இயல் பலவா அத்தகை அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
631 | விளைவு இயல் அனைத்தும் வித்து இடை அடங்க அளவுசெய்து அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
633 | வித்தும் பதமும் விளை உபகரிப்பும் அத்திறல் அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
635 | வித்திடை முளையும் முளையிடை விளைவும் அத்தக அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
637 | வித்தினுள் வித்தும், வித்து அதில் வித்தும், அத்திறம் வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
639 | விளைவின் உள் விளைவும் விளைவு அதில் விளைவும் அளை உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
641 | முளை அதில் முளையும் முளையின் உள் முளையும் அளைதர அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
643 | வித்திடைப் பதமும் பதத்திடை வித்தும் அத்து உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
645 | பதம் அதில் பதமும் பதத்தின் உள் பதமும் அதிர்வு அற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
647 | ஒற்றுமை வேற்றுமை உரிமைகள் அனைத்தும் அற்று என வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
649 | பொருள் நிலை உறுப்பியல் பொதுவகை முதலிய அருள் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
651 | உறவினல் உறவும் உறவினில் பகையும் அறன் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
653 | பகையினில் பகையும் பகையினில் உறவும் அகைவுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
655 | பாதியும் முழுதும் பதிசெயும் அந்தமும் ஆதியும் வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
657 | துணையும் நிமித்தமும் துலங்கு அதின் அதுவும் அணைவுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
659 | உருஅதில் உருவும் உருவின் உள் உருவும் அருள் உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
661 | அருவின் உள் அருவும் அருஅதில் அருவும் அருள் இயல் அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
663 | கரணமும் இடமும் கலைமுதல் அணையும் ஓர் அரண்நிலை வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
665 | உருவதில் அருவும் அரு அதில் உருவும் அருள் உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
667 | வண்ணமும் வடிவும் மயங்கிய வகை பல அண் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
669 | சிறுமையில் சிறுமையும் சிறுமையில் பெருமையும் அறிதர வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
671 | பெருமையில் பெருமையும் பெருமையில் சிறுமையும் அருள் நிலை வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
673 | திண்மையில் திண்மையும், திண்மையில் நேர்மையும் அண்மையின் வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
675 | மென்மையில் மென்மையும் மென்மையில் வன்மையும் அன்மை அற்று அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
677 | அடியினுள் அடியும் அடியிடை அடியும் அடி உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
679 | நடுவினுள் நடுவும் நடுவு அதின் நடுவும் அடர்வு உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
681 | முடியினுள் முடியும் முடியினில் முடியும் அடர்தர அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
683 | அகப்பூ அகஉறுப்பு ஆக்க அதற்கு அவை அகத்தே வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
685 | புறப்பூ புறத்தில் புனைஉரு ஆக்கிட அறத்துடன் வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
687 | அகப்புறப்பூ அகப்புறஉறுப்பு இயற்றிட அகத்துஇடை வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
689 | புறப்புறப் பூ அதில், புறப்புற உறுப்பு உற, அறத்திடை வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
691 | பாரிடை வேர்வையில் பையிடை முட்டையில் ஆர் உயிர் அமைக்கும் அருட்பெருஞ்ஜோதி |
693 | ஊர்வன பறப்பன உறுவன நடப்பன ஆர்வு உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
695 | அசைவு இல அசைவு உள ஆருயிர்த் திரள்பல அசல் அற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
697 | அறிவு ஒரு வகைமுதல் ஐ வகை அறுவகை அறிதர வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
699 | வெவ்வேறு இயலொடு வெவ்வேறு பயன் உற அவ்வாறு அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
701 | சித்திர விசித்திர சிருட்டிகள் பலபல அத்தகை வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
703 | பெண்ணினுள் ஆணும் ஆணினுள் பெண்ணும் அண் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
705 | பெண்ணினுள் மூன்றும் ஆணினுள் இரண்டும் அண் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
707 | பெண்ணிடை நான்கும் ஆணிடை மூன்றும் அண் உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
709 | பெண் இயல் ஆணும் ஆண் இயல் பெண்ணும் அண் உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
711 | பெண் திறல் புறத்தும் ஆண் திறல் அகத்தும் அண்டு உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
713 | பெண் இயல் மனமும் ஆண் இயல் அறிவும் அண் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
715 | தனித்தனி வடிவினும் தக்க ஆண் பெண் இயல் அனைத்து உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
717 | உனற்கு அரும் உயிர் உள, உடல் உள, உலகு உள அனைத்தையும் வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
719 | ஓவுறா எழுவகை உயிர் முதல் அனைத்தும் ஆ வகை வகுத்த அருட்பெருஞ்ஜோதி |
721 | பைகளில் முட்டையில் பாரினில் வேர்வினில் ஐபெற அமைத்த அருட்பெருஞ்ஜோதி |
723 | தாய் கருப் பையினுள் தங்கிய உயிர்களை ஆய்வு உறக் காத்து அருள் அருட்பெருஞ்ஜோதி |
725 | முட்டைவாய்ப் பயிலும் முழு உயிர்த் திரள்களை அட்டமே காத்து அருள் அருட்பெருஞ்ஜோதி |
727 | நிலம்பெறும் உயிர்வகை நீள்குழு அனைத்தும் அலம்பெறக் காத்து அருள் அருட்பெருஞ்ஜோதி |
729 | வேர்வுற உதித்த மிகும் உயிர்த் திரள்களை ஆர்வு உறக் காத்து அருள் அருட்பெருஞ்ஜோதி |
731 | உடல் உறு பிணியால் உயிர் உடல் கெடாவகை அடல் உறக் காத்து அருள் அருட்பெருஞ்ஜோதி |
733 | சிசுமுதல் பருவச் செயல்களின் உயிர்களை அசைவு அறக் காத்து அருள் அருட்பெருஞ்ஜோதி |
735 | உயிர் உறும் உடலையும் உடலு உறும் உயிரையும் அயர்வு அறக் காத்து அருள் அருட்பெருஞ்ஜோதி |
737 | பாடு உறும் அவத்தைகள் பலவினும் உயிர்களை ஆடு உறக் காத்து அருள் அருட்பெருஞ்ஜோதி |
739 | முச்சுடர் ஆதியால் எச்சக உயிரையும் அச்சு அறக் காத்து அருள் அருட்பெருஞ்ஜோதி |
741 | வான்முகில் சத்தியால் மழை பொழிவித்து உயிர் ஆன் அறக் காத்து அருள் அருட்பெருஞ்ஜோதி |
743 | இன்பு உறு சத்தியால் எழில்மழை பொழிவித்து அன்பு உறக் காத்து அருள் அருட்பெருஞ்ஜோதி |
745 | எண் இயல் சத்தியால் எல்லா உலகினும் அண் உயிர் காத்து அருள் அருட்பெருஞ்ஜோதி |
747 | அண்டப் புறப்புற அமுதம் பொழிந்து உயிர் அண்டு உறக் காத்து அருள் அருட்பெருஞ்ஜோதி |
749 | தேவரை எல்லாம் திகழ் புற அமுது அளித்து ஆ வகை காத்து அருள் அருட்பெருஞ்ஜோதி |
751 | அகப்புற அமுது அளித்து ஐவர் ஆதிகளை அகப்படக் காத்து அருள் அருட்பெருஞ்ஜோதி |
753 | தரும் அக அமுதால் சத்தி சத்தர்களை அருளினில் காக்கும் அருட்பெருஞ்ஜோதி |
755 | காலமும் நியதியும் காட்டி எவ் உயிரையும் ஆலுறக் காத்து அருள் அருட்பெருஞ்ஜோதி |
757 | விச்சையை இச்சையை விளைவித்து உயிர்களை அச்சு உறக் காத்து அருள் அருட்பெருஞ்ஜோதி |
759 | போகமும் களிப்பும் பொருந்துவித்து, உயிர்களை ஆகம் உள் காக்கும் அருட்பெருஞ்ஜோதி |
761 | கலை அறிவு அளித்துக் களிப்பினில் உயிர் எலாம் அலைவு அறக் காத்து அருள் அருட்பெருஞ்ஜோதி |
763 | விடய நிகழ்ச்சியால் மிகும் உயிர் அனைத்தையும் அடைவு உறக் காத்து அருள் அருட்பெருஞ்ஜோதி |
765 | துன்பு அளித்து ஆங்கே சுகம் அளித்து உயிர்களை அன்பு உறக் காத்து அருள் அருட்பெருஞ்ஜோதி |
767 | கரணேந் தியத்தால் களிப்பு உற உயிர்களை அரண் நேர்ந்து அளித்து அருள் அருட்பெருஞ்ஜோதி |
769 | எத்தகை எவ்வுயிர் எண்ணின அவ்வுயிர்க்கு அத்தகை அளித்து அருள் அருட்பெருஞ்ஜோதி |
771 | எப்படி எவ் உயிர் எண்ணின அவ் உயிர்க்கு அப்படி அளித்து அருள் அருட்பெருஞ்ஜோதி |
773 | ஏங்காது உயிர்த்திரள் எங்கு எங்கு இருந்தன ஆங்குஆங்கு அளித்து அருள் அருட்பெருஞ்ஜோதி |
775 | சொல் உறும் அசுத்தத் தொல் உயிர்க்கு அவ்வகை அல்லலில் காத்து அருள் அருட்பெருஞ்ஜோதி |
777 | சுத்தமும் அசுத்தமும் தோய் உயிர்க்கு இருமையின் அத்தகை காத்து அருள் அருட்பெருஞ்ஜோதி |
779 | வாய்ந்திடும் சுத்த வகை உயிர்க்கு ஒருமையின் ஆய்ந்து உறக் காத்து அருள் அருட்பெருஞ்ஜோதி |
781 | எவை எலாம், எவை எலாம், ஈண்டின ஈண்டின, அவை எலாம் காத்து அருள் அருட்பெருஞ்ஜோதி |
783 | அண்டத் துரிசையும், அகிலத் துரிசையும், அண்டுஅற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி |
785 | பிண்டத் துரிசையும், பேர் உயிர்த் துரிசையும், அண்டுஅற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி |
787 | உயிர் உறு மாயையின் உறுவிரி அனைத்தும் அயிர் அற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி |
789 | உயிர் உறும் இருவினை உறுவிரிவு அனைத்தும் அயர்வு அற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி |
791 | காமப் புடைப்பு உயிர்கண் தொடரா வகை ஆம் அற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி |
793 | பொங்கு உறு வெகுளிப் புடைப்புகள் எல்லாம் அங்கு அற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி |
795 | மதம்புரை மோகமும் மற்றவும் ஆங்காங்கு அதம்பெற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி |
797 | வடு உறும் அசுத்த வாதனை அனைத்தையும் அடர்பு அற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி |
799 | சுத்தமும் அசுத்தமும் தோய்ந்த வாதனைகளை அத்தகை அடக்கும் அருட்பெருஞ்ஜோதி |
801 | நால்வயின் துரிசும் நண் உயிர் ஆதியில் ஆல் அற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி |
803 | நால்வயின் படைப்பு நால்வயின் காப்பும் ஆலற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி |
805 | மூவிடத்து இருமையின் முன்னிய தொழில்களில் ஆவிடத்து அடக்கும் அருட்பெருஞ்ஜோதி |
807 | மூவிடம் மும்மையின் முன்னிய தொழில்களில் ஆவிடம் அடக்கும் அருட்பெருஞ்ஜோதி |
809 | தத்துவச் சேட்டையும் தத்துவத் துரிசும் அத்தகை அடக்கும் அருட்பெருஞ்ஜோதி |
811 | சுத்த மா நிலையில் சூழ் உறு விரிவை அத்தகை அடக்கும் அருட்பெருஞ்ஜோதி |
813 | கரைவின் மா மாயைக் கரும் பெரும் திரையால் அரைசு அது மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி |
815 | பேர் உறு நீலப் பெரும்திரை அதனால் ஆர் உயிர் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி |
817 | பச்சைத் திரையால் பரவெளி அதனை அச்சு உற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி |
819 | செம்மைத் திரையால் சித்து உறு வெளியை அம்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி |
821 | பொன்மைத் திரையால் பொருள் உறு வெளியை அன்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி |
823 | வெண்மைத் திரையால் மெய்ப்பதி வெளியை அண்மையில் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி |
825 | கலப்புத் திரையால் கருது அனுபவங்களை அலப்பு உற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி |
827 | விடய நிலைகளை வெவ் வேறு திரைகளால் அடர்பு உற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி |
829 | தத்துவ நிலைகளைத் தனித் தனித் திரையால் அத் திறம் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி |
831 | திரை மறைப்பு எல்லாம் தீர்த்து ஆங்கு ஆங்கே அரசு உறக் காட்டும் அருட்பெருஞ்ஜோதி |
833 | தோற்ற மா மாயைத் தொடர்பு அறுத்து, அருளின் ஆற்றலைக் காட்டும் அருட்பெருஞ்ஜோதி |
835 | சுத்த மா மாயைத் தொடர்பு அறுத்து அருளை அத்தகை காட்டும் அருட்பெருஞ்ஜோதி |
837 | எனைத்து ஆணவம் முதல் எல்லாம் தவிர்த்தே அனுக்கிரகம் புரி அருட்பெருஞ்ஜோதி |
839 | விடய மறைப்பு எலாம் விடுவித்து உயிர்களை அடைவு உறத் தெருட்டும் அருட்பெருஞ்ஜோதி |
841 | சொருப மறைப்பு எலாம் தொலைப்பித்து உயிர்களை அருளினில் தெருட்டும் அருட்பெருஞ்ஜோதி |
843 | மறைப்பின் மறந்தன வருவித்து ஆங்கே அறத்தொடு தெருட்டும் அருட்பெருஞ்ஜோதி |
845 | எவ்வகை உயிர்களும் இன்பு உற ஆங்கே அவ்வகை தெருட்டும் அருட்பெருஞ்ஜோதி |
847 | கடவுளர் மறைப்பைக் கடிந்து அவர்க்கு இன்பம் அடை உறத் தெருட்டும் அருட்பெருஞ்ஜோதி |
849 | சத்திகள் மறைப்பைத் தவிர்த்து அவர்க்கு இன்பம் அத்துறத் தெருட்டும் அருட்பெருஞ்ஜோதி |
851 | சத்தர்கள் மறைப்பைத் தவிர்த்து அவர்க்கு இன்பம் அத்தகை தெருட்டும் அருட்பெருஞ்ஜோதி |
853 | படைக்கும் தலைவர்கள் பற்பல கோடியை அடைப்பு உறப் படைக்கும் அருட்பெருஞ்ஜோதி |
855 | காக்கும் தலைவர்கள் கணக்குஇல் பல் கோடியை ஆக்குறக் காக்கும் அருட்பெருஞ்ஜோதி |
857 | அடக்கும் தலைவர்கள் அளவுஇலர் தம்மையும் அடர்ப்பு அற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி |
859 | மறைக்கும் தலைவர்கள் வகை பல கோடியை அறத்தொடு மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி |
861 | தெருட்டும் தலைவர்கள் சேர் பல கோடியை அருள்திறம் தெருட்டும் அருட்பெருஞ்ஜோதி |
863 | ஐந்தொழில் ஆதிசெய் ஐவர் ஆதிகளை ஐந்தொழில் ஆதிசெய் அருட்பெருஞ்ஜோதி |
865 | இறந்தவர் எல்லாம் எழுந்திட உலகில் அறம் தலை அளித்த அருட்பெருஞ்ஜோதி |
867 | செத்தவர் எல்லாம் சிரித்தாங்கு எழுதிறல் அத்தகை காட்டிய அருட்பெருஞ்ஜோதி |
869 | இறந்தவர் எழுக என்று எண்ணியாங்கு எழுப்பிட அறம் துணை எனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி |
871 | செத்தவர் எழுகு எனச் செப்பியாங் எழுப்பிட அத்திறல் எனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி |
873 | சித்து எலாம் வல்ல திறல் அளித்து எனக்கே அத்தன் என்று ஓங்கும் அருட்பெருஞ்ஜோதி |
875 | ஒன்று அது, இரண்ட அது, ஒன்றின் இரண்டு அது, ஒன்றினுள் ஒன்ற அது, ஒன்று எனும் ஒன்றே |
877 | ஒன்று அல, இரண்ட அல, ஒன்றின் இரண்டு அல, ஒன்றினுள் ஒன்ற அல, ஒன்று எனும் ஒன்றே |
879 | ஒன்றினுள் ஒன்று உள, ஒன்றினுள் ஒன்று இல, ஒன்று அற ஒன்றிய, ஒன்று எனும் ஒன்றே |
881 | களங்கம் நீத்து உலகம் களிப்பு உற, மெய்ந்நெறி விளங்க, என் உள்ளே விளங்கு மெய்ப் பொருளே |
883 | மூஇரு நிலையின் முடி நடு, முடி மேல் ஓஅற விளங்கும் ஒருமை மெய்ப் பொருளே |
885 | எழு நிலை மிசையே இன்பு உருவாகி வழு நிலை நீக்கி வயங்கும் மெய்ப் பொருளே |
887 | நவ நிலை மிசையே நடு உறு நடுவே சிவமயம் ஆகித் திகழ்ந்த மெய்ப் பொருளே |
889 | ஏகாதச நிலை யாது அதின் நடுவே ஏகஆதன மிசை இருந்த மெய்ப் பொருளே |
891 | திரையோதச நிலை சிவவெளி நடுவே வரை ஓதஅரு சுக வாழ்க்கை மெய்ப் பொருளே |
893 | ஈர் எண் நிலைஎன இயம்பும் மேல்நிலையில் பூரண சுகமாய்ப் பொருந்தும் மெய்ப் பொருளே |
895 | எல்லா நிலைகளும் இசைந்து ஆங்குகாங்கே எல்லாம் ஆகி இலங்கும் மெய்ப் பொருளே |
897 | மன(ம்) ஆதிகள் பொருந்தா வான் நடு வான்ஆய் அனாதி உண்மை அதாய் அமர்ந்த மெய்ப் பொருளே |
899 | தான் ஒரு தான் ஆய்த் தானே தான் ஆய் ஊன் உயிர் விளக்கும் ஒரு தனிப் பொருளே |
901 | அதுவின் உள் அதுஆய் அதுவே அதுஆய் பொதுவின் உள் நடிக்கும் பூரணப் பொருளே |
903 | இயல்பின் உள் இயல்புஆய் இயல்பே இயல்புஆய் உயல் உற விளங்கும் ஒருதனிப் பொருளே |
905 | அருவின் உள் அருஆய் அருஅரு அருஆய் உருவின் உள் விளங்கும் ஒருபரம் பொருளே |
907 | அலகு இலாச் சித்து ஆய், அது நிலை அது ஆய், உலகு எலாம் விளங்கும் ஒரு தனிப் பொருளே |
909 | பொருளின் உள் பொருள் ஆய், பொருள் அது பொருள் ஆய், ஒருமையின் விளங்கும் ஒருதனிப் பொருளே |
911 | ஆடு உறு சித்திகள் அறுபத்து நான்கு எழு கோடியும் விளங்கக் குலவும் மெய்ப் பொருளே |
913 | கூட்டு உறு சித்திகள் கோடி பல் கோடியும் ஆட்டு உற விளங்கும் அரும் பெரும் பொருளே |
915 | அறிவு உறு சித்திகள் அனந்த(ம்) கோடிகளும் பிறிவு அற விளக்கும் பெரும்தனிப்பொருளே |
917 | வீடுகள் எல்லாம் விதிநெறி விளங்க ஆடல் செய்து அருளும் அரும் பெரும் பொருளே |
919 | பற்றுகள் எல்லாம் பதிநெறி விளங்க உற்று அருள் ஆடல் செய் ஒரு தனிப் பொருளே |
921 | பரத்தினில் பரமே, பரத்தின் மேல் பரமே, பரத்தின் உள் பரமே, பரம் பரம் பரமே |
923 | பரம் பெறும் பரமே, பரம் தரும் பரமே, பரம் பதம் பரமே, பரம் சிதம்பரமே |
925 | பரம் புகழ் பரமே, பரம் பகர் பரமே, பரம் சுக பரமே, பரம் சிவ பரமே |
927 | பரம் கொள் சிற்பரமே, பரம் செய் தற்பரமே, தரம் கொள் பொற்பரமே, தனிப் பெரும் பரமே |
929 | வரம் பராபரமே, வணம் பராபரமே, பரம் பராபரமே பதம் பராபரமே |
931 | சத்திய பதமே, சத்துவ பதமே நித்திய பதமே, நிற்குண பதமே |
933 | தத்துவ பதமே, தற் பத பதமே சித் உறு பதமே, சிற் சுக பதமே |
935 | தம் பரம் பதமே, தனிச் சுகம் பதமே அம் பரம் பதமே, அருட் பரம் பதமே |
937 | தந்திர பதமே, சந்திர பதமே, மந்திர பதமே, மந்தண பதமே |
939 | நவம் தரு பதமே, நடம் தரு பதமே, சிவம் தரு பதமே, சிவசிவ பதமே |
941 | பிரம மெய்க் கதியே, பிரம மெய்ப் பதியே, பிரம நிற் குணமே, பிரம சித் குணமே |
943 | பிரமமே, பிரமப் பெருநிலை மிசை உறும் பரமமே, பரம பதம் தரும் சிவமே |
945 | அவனோடு அவளாய், அதுஆய், அலஆய், நவம் ஆம் நிலை மிசை நண்ணிய சிவமே |
947 | எம் பொருள் ஆகி, எமக்கு அருள் புரியும், செம் பொருள் ஆகிய சிவமே சிவமே |
949 | ஒருநிலை இதுவே உயர் நிலை எனும் ஒரு திருநிலை மேவிய சிவமே சிவமே |
951 | மெய் வைத்து அழியா வெறு வெளி நடு உறு தெய்வப் பதி ஆம் சிவமே சிவமே |
953 | புரை தவிர்த்து எனக்கே பொன்முடி சூட்டிச் சிரம் உற நாட்டிய சிவமே சிவமே |
955 | கல்வியும், சாகாக் கல்வியும், அழியாச் செல்வமும், அளித்த சிவமே சிவமே |
957 | அருள் அமுது எனக்கே அளித்து அருள் நெறி வாய்த் தெருள் உற வளர்க்கும் சிவமே சிவமே |
959 | சத்து எலா ஆகியும் தான் ஒரு தானாம் சித்து எலாம் வல்லது ஓர் திருவருள் சிவமே |
961 | எங்கே கருணை இயற்கையின் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ்சிவமே |
963 | யாரே என்னினும் இரங்குகின் றார்க்குச் சீரே அளிக்கும் சிதம்பர சிவமே |
965 | பொய்ந்நெறி அனைத்தினும் புகுத்தாது, எனை அருள் செந்நெறி செலுத்திய சிற்சபைச் சிவமே |
967 | கொல்லா நெறியே குருஅருள் நெறி எனப் பல்கால் எனக்குப் பகர்ந்த மெய்ச்சிவமே |
969 | உயிர் எலாம் பொதுவின் உளம்பட நோக்குக, செயிர் எலாம் விடுக, எனச் செப்பிய சிவமே |
971 | பயிர்ப்பு உறு கரணப் பரிசுகள் பற்பல, உயிர்த்திரள் ஒன்று, என உரைத்த மெய்ச்சிவமே |
973 | உயிருள் யாம், எம்முள் உயிர், இவை உணர்ந்தே உயிர்நலம் பரவுக, என்று உரைத்த மெய்ச்சிவமே |
975 | இயல் அருள் ஒளி ஓர் ஏகதேசத்தின்ஆம் உயிர் ஒளி காண்க என்று உரைத்த மெய்ச்சிவமே |
977 | அருள் அலாது அணுவும் அசைந்திடாது அதனால் அருள் நலம் பரவுகு என்று அறைந்த மெய்ச்சிவமே |
979 | அருள் உறின் எல்லாம் ஆகும், ஈது உண்மை, அருள் உற முயல்க, என்று அருளிய சிவமே |
981 | அருள் நெறி ஒன்றே தெருள் நெறி, மற்று எலாம் இருள் நெறி, என எனக்கு இயம்பிய சிவமே |
983 | அருள்பெறின் துரும்பும் ஓர் ஐந்தொழில் புரியும் தெருள் இது எனவே செப்பிய சிவமே |
985 | அருள் அறிவு ஒன்றே அறிவு, மற்று எல்லாம் இருள் அறிவு என்றே வகுத்த மெய்ச்சிவமே |
987 | அருட்சுகம் ஒன்றே அரும்பெறல் பெரும்சுகம், மருட்சுகம் பிற, என வகுத்த மெய்ச்சிவமே |
989 | அருட்பேறு அதுவே அரும்பெறல் பெரும் பேறு இருட்பேறு அறுக்கும் என்று இயம்பிய சிவமே |
991 | அருள்தனி வல்லபம் அதுவே எலாம் செய் பொருள் தனிச்சித்து எனப் புகன்ற மெய்ச்சிவமே |
993 | அருள் அறியார் தமை அறியார், எம்மையும் பொருள் அறியார், எனப் புகன்ற மெய்ச்சிவமே |
995 | அருள்நிலை ஒன்றே அனைத்தும் பெறும் நிலை பொருள்நிலை காண்க எனப் புகன்ற மெய்ச்சிவமே |
997 | அருள்வடிவு அதுவே அழியாத் தனிவடிவு, அருள்பெற முயலுக, என்று அருளிய சிவமே |
999 | அருளே நம் இயல், அருளே நம் உரு, அருளே நம் வடிவு ஆம், என்ற சிவமே |
1001 | அருளே நம் அடி, அருளே நம் முடி, அருளே நம் நடு ஆம், என்ற சிவமே |
1003 | அருளே நம் அறிவு, அருளே நம் மனம், அருளே நம் குணம் ஆம், என்ற சிவமே |
1005 | அருளே நம் பதி, அருளே நம் பதம், அருளே நம் இடம் ஆம், என்ற சிவமே |
1007 | அருளே நம் துணை, அருளே நம் தொழில், அருளே நம் விருப்பு ஆம், என்ற சிவமே |
1009 | அருளே நம் பொருள், அருளே நம் ஒளி, அருளே நாம், அறிவாய் என்ற சிவமே |
1011 | அருளே நம் குலம், அருளே நம் இனம், அருளே நாம், அறிவாய் என்ற சிவமே |
1013 | அருளே நம் சுகம், அருளே நம் பெயர், அருளே நாம், அறிவாய் என்ற சிவமே |
1015 | அருள் ஒளி அடைந்தனை, அருள் அமுது உண்டனை அருள் மதி வாழ்க! என்று அருளிய சிவமே |
1017 | அருள் நிலை பெற்றனை, அருள்வடிவு உற்றனை, அருள் அரசு இயற்றுக! என்று அருளிய சிவமே |
1019 | உள் அகத்து அமர்ந்து, எனது உயிரில் கலந்து, அருள் வள்ளல் சிற்றம்பலம் வளர்சிவ பதியே |
1021 | நிகர் இலா இன்ப நிலை நடு வைத்து, எனைத் தகவொடு காக்கும் தனிச் சிவபதியே |
1023 | சுத்த சன்மார்க்க சுகநிலை தனில், எனைச் சத்தியன் ஆக்கிய தனிச்சிவ பதியே |
1025 | ஐவரும் காண்டற்கு அரும் பெரும் பொருள், என் கைவரப் புரிந்த, கதி சிவ பதியே |
1027 | துன்பம் தொலைத்து, அருட்ஜோதியால் நிறைந்த இன்பம் எனக்கு அருள் எழில் சிவ பதியே |
1029 | சித்தமும் வாக்கும் செல்லாப் பெருநிலை ஒத்து உற ஏற்றிய ஒரு சிவ பதியே |
1031 | கையறவு அனைத்தும் கடிந்து, எனைத் தேற்றி, வையம் மேல் வைத்த, மாசிவபதியே |
1033 | இன்பு உறச் சிறியேன் எண்ணுதோறு(ம்) எண்ணுதோறு(ம்) அன்பொடு என் கண் உறும் அருட்சிவ பதியே |
1035 | பிழை எலாம் பொறுத்து, எனுள் பிறங்கிய, கருணை மழை எலாம் பொழிந்து, வளர்சிவ பதியே |
1037 | உளத்தினும் கண்ணினும் உயிரினும் எனது குளத்தினும் நிரம்பிய குருசிவ பதியே |
1039 | பரம் உடன் அபரம் பகர்நிலை இவை எனத் திரம் உற அருளிய திரு அருட் குருவே |
1041 | மதிநிலை, இரவியின் வளர்நிலை, அனலின் திதிநிலை, அனைத்தும் தெரித்த சற்குருவே |
1043 | கணநிலை, அவற்றின் கருநிலை, அனைத்தும் குணம் உறத் தெரித்து உட்குலவு சற்குருவே |
1045 | பதி நிலை, பசு நிலை, பாச நிலை எலாம் மதியுறத் தெரித்து, உள் வயங்கும் சற்குருவே |
1047 | பிரம ரகசியம் பேசி, என் உளத்தே தரம் உற விளங்கும், சாந்த சற்குருவே |
1049 | பரம ரகசியம் பகர்ந்து, எனது உளத்தே வரம் உற வளர்த்து வயங்கும் சற்குருவே |
1051 | சிவ ரகசியம் எலாம் தெரிவித்து, எனக்கே நவநிலை காட்டிய, ஞான சற்குருவே |
1053 | சத்தியல் அனைத்தும் சித்தியல் முழுதும் அத்தகை தெரித்த அருட்சிவ குருவே |
1055 | அறிபவை எல்லாம் அறிவித்து, என் உள்ளே பிறிவற விளங்கும் பெரிய சற்குருவே |
1057 | கேட்பவை எல்லாம் கேட்பித்து, என் உள்ளே வேட்கையின் விளங்கும் விமல சற்குருவே |
1059 | காண்பவை எல்லாம் காட்டுவித்து, எனக்கே மாண் பதம் அளித்து வயங்கு சற்குருவே |
1061 | செய்பவை எல்லாம் செய்வித்து, எனக்கே உய்பவை அளித்து, எனுள் ஓங்கு சற்குருவே |
1063 | உண்பவை எல்லாம் உண்ணுவித்து, என் உள் பண்பினில் விளங்கும் பரம சற்குருவே |
1065 | சாகாக் கல்வியின் தரம் எலாம் கற்பித்து, ஏகாக்கரப் பொருள் ஈந்த, சற்குருவே |
1067 | சத்தியம் ஆம் சிவசித்திகள் அனைத்தையும் மெய்த்தகை அளித்து எனுள் விளங்கு சற்குருவே |
1069 | எல்லா நிலைகளும் ஏற்றிச் சித்து எலாம் வல்லான் என எனை வைத்த சற்குருவே |
1071 | சீர் உற, அருள் ஆம் தேசு உற, அழியாப் பேர் உற, என்னைப் பெற்ற நல்தாயே |
1073 | பொருந்திய அருட்பெரும் போகமே உறுக எனப் பெரும் தயவால் எனைப் பெற்ற நல்தாயே |
1075 | ஆன்ற சன்மார்க்கம் அணி பெற எனைத்தான் ஈன்று அமுதளித்த இனிய நல்தாயே |
1077 | பசித்திடு தோறும், என்பால் அணைந்து, அருளால் வசித்து, அமுது அருள்புரி வாய்மை நல்தாயே |
1079 | தளர்ந்ததோறு(ம்) அடியேன் சார்பு அணைந்து, என்னை உளம் தெளிவித்த ஒருமை நல்தாயே |
1081 | அருளமுதே முதல் ஐவகை அமுதமும் தெருள் உற எனக்கு அருள் செல்வ நல்தாயே |
1083 | இயல் அமுதே முதல் எழுவகை அமுதமும் உயல் உற எனக்கு அருள் உரிய நல்தாயே |
1085 | நண்புஅறும் எண்வகை நவவகை அமுதமும் பண்பு உற எனக்கு அருள் பண்புடைத் தாயே |
1087 | மற்று உள அமுத வகை எலாம் எனக்கே உற்று உண அளித்தருள் ஓங்கு நல்தாயே |
1089 | கலக்கமும் அச்சமும் கடிந்து, எனது உளத்தே அலக்கணும் தவிர்த்து, அருள் அன்புடைத் தாயே |
1091 | துய்ப்பினில் அனைத்தும் சுகம்பெற அளித்து, எனக்கு எய்ப்பு எலாம் தவிர்த்த, இன்புடைத் தாயே |
1093 | சித்திகள் எல்லாம் தெளிந்திட, எனக்கே சத்தியை அளித்த, தயவுடைத் தாயே |
1095 | சத்தி நிபாதம் தனை அளித்து, எனைமேல் வைத்து, அமுது அளித்த, மரபுடைத் தாயே |
1097 | சத்தி சத்தர்கள் எலாம், சார்ந்து, எனது ஏவல்செய் சித்தியை அளித்த, தெய்வ நல்தாயே |
1099 | தன்நிகர் இல்லாத் தலைவனைக் காட்டியே, என்னை மேல் ஏற்றிய, இனிய நல்தாயே |
1101 | வெளிப்பட விரும்பிய விளைவு எலாம் எனக்கே அளித்து அளித்து இன்புசெய் அன்புடைத் தாயே |
1103 | எண் அகத்தொடு புறத்து என்னை எஞ்ஞான்றும் கண் எனக் காக்கும் கருணை நல்தாயே |
1105 | இன் அருள் அமுத அளித்து, இறவாத் திறல் புரிந்து, என்னை வளர்த்திடும், இன்புடைத் தாயே |
1107 | என் உடல், என் உயிர், என் அறிவு, எல்லாம் தன்ன என்று ஆக்கிய தயவுடைத் தாயே |
1109 | தெரியா வகையால் சிறியேன் தளர்ந்திடத் தரியாது அணைத்த தயவுடைத் தாயே |
1111 | சினம் முதல அனைத்தையும் தீர்த்து, எனை நனவினும் கனவினும் பிரியாக், கருணை நல்தாயே |
1113 | தூக்கமும், சோம்பும், என்துன்பமும், அச்சமும், ஏக்கமும் நீக்கிய என் தனித் தாயே |
1115 | துன்பு எலாம் தவிர்த்து, உளே அன்பு எலாம் நிரம்ப, இன்பு எலாம் அளித்த, என் தனித் தந்தையே |
1117 | எல்லா நன்மையும் என்தனக்கு அளித்த எல்லாம் வல்லசித்து என்றனித் தந்தையே |
1119 | நாயின் கடையேன் நலம்பெறக் காட்டிய தாயின் பெரிதும் தயவுடைத் தந்தையே |
1121 | அறிவு இலாப் பருவத்து அறிவு எனக்கு அளித்தே பிறிவு இலாது அமர்ந்த பேரருள் தந்தையே |
1123 | புல் நிகர் இல்லேன் பொருட்டு, இவண் அடைந்த தன் நிகர் இல்லாத் தனிப்பெரும் தந்தையே |
1125 | அகத்தினும் புறத்தினும் அமர்ந்து அருட்ஜோதி சகத்தினில் எனக்கே தந்த மெய்த் தந்தையே |
1127 | இணைஇலாக் களிப்புற்று இருந்திட எனக்கே துணைஅடி சென்னியில் சூட்டிய தந்தையே |
1129 | ஆதி ஈறு அறியா அருள் அரசாட்சியில் ஜோதி மா மகுடம் சூட்டிய தந்தையே |
1131 | எட்டு இரண்டு அறிவித்து, எனைத் தனி ஏற்றி, பட்டி மண்டபத்தில் பதித்த மெய்த்தந்தையே |
1133 | தம்கோல் அளவு அது தந்து அருட்ஜோதிச் செங்கோல் செலுத்து எனச் செப்பிய தந்தையே |
1135 | தன் பொருள் அனைத்தையும் தன் அரசாட்சியில் என் பொருள் ஆக்கிய என் தனித் தந்தையே |
1137 | தன் வடிவு அனைத்தையும் தன் அரசாட்சியில் என் வடிவு ஆக்கிய என் தனித் தந்தையே |
1139 | தன் சித்து அனைத்தையும் தன் சமுகத்தினில் என் சித்து ஆக்கிய என் தனித் தந்தையே |
1141 | தன் வசமாகிய தத்துவம் அனைத்தையும் என் வசம் ஆக்கிய என் உயிர்த் தந்தையே |
1143 | தன் கையில் பிடித்த தனி அருட்ஜோதியை என் கையில் கொடுத்த என் தனித் தந்தையே |
1145 | தன்னையும் தன் அருட் சத்தியின் வடிவையும் என்னையும் ஒன்று என இயற்றிய தந்தையே |
1147 | தன் இயல் என் இயல், தன் செயல் என் செயல் என்ன இயற்றிய என் தனித் தந்தையே |
1149 | தன் உரு என் உரு, தன் உரை என் உரை என்ன இயற்றிய என் தனித் தந்தையே |
1151 | சதுரப் பேரருள் தனிப் பெரும் தலைவன் என்று எதிரற்று ஓங்கிய என்னுடைத் தந்தையே |
1153 | மனம் வாக்கு அறியா வரைப்பினில் எனக்கே இன வாக்கு அருளிய என் உயிர்த் தந்தையே |
1155 | உணர்ந்து உணர்ந்து உணரினும் உணராப் பெருநிலை அணைந்திட எனக்கே அருளிய தந்தையே |
1157 | துரிய வாழ்வுடனே சுக பூரணம் எனும் பெரிய வாழ்வு அளித்த பெரும் தனித் தந்தையே |
1159 | ஈறு இலாப் பதங்கள் யாவையும் கடந்த பேறு அளித்து ஆண்ட பெருந்தகைத் தந்தையே |
1161 | எவ்வகைத் திறத்தினும் எய்துதற்கு அரிதாம் அவ்வகை நிலை எனக்கு அளித்த நல் தந்தையே |
1163 | இனிப் பிறவா நெறி எனக்கு அளித்து அருளிய தனிப்பெரும் தலைமைத் தந்தையே தந்தையே |
1165 | பற்று அயர்ந்து அஞ்சிய பரிவுகண்டு அணைந்து எனைச் சற்றும் அஞ்சேல் எனத் தாங்கிய துணையே |
1167 | தளர்ந்த அத்தருணம் என் தளர்வு எலாம் தவிர்த்து உள் கிளர்ந்திட எனக்குக் கிடைத்த மெய்த்துணையே |
1169 | துறை இது, வழி இது, துணிவு இது நீசெயும் முறை இது எனவே மொழிந்த மெய்த்துணையே |
1171 | எங்கு உறு தீமையும் எனைத் தொடரா வகை கங்குலும் பகலும் மெய்க் காவல்செய் துணையே |
1173 | வேண்டிய வேண்டிய விருப்பு எலாம் எனக்கே ஈண்டு இருந் அருள்புரி என் உயிர்த்துணையே |
1175 | இகத்தினும் பரத்தினும் எனக்கு இடர் சாராது அகத்தினும் புறத்தினும் அமர்ந்த மெய்த்துணையே |
1177 | அயர்வு அற எனக்கே அருள் துணையாகி என் உயிரினும் சிறந்த ஒருமை என் நட்பே |
1179 | அன்பினில் கலந்து எனது அறிவினில் பயின்றே இன்பினில் அளைந்த என் இன் உயிர் நட்பே |
1181 | நான் புரிவன எலாம் தான் புரிந்து எனக்கே வான் பதம் அளிக்க வாய்த்த நல் நட்பே |
1183 | உள்ளமும் உணர்ச்சியும் உயிரும் கலந்துகொண்டு எள் உறு நெய்யில் என் உள் உறு நட்பே |
1185 | செற்றமும் தீமையும் தீர்த்து நான் செய்த குற்றமும் குணமாக் கொண்ட என் நட்பே |
1187 | குணம் குறி முதலிய குறித்திடாது எனையே அணங்கு அறக் கலந்த அன்புடை நட்பே |
1189 | பிணக்கும் பேதமும் பேய் உலகோர் புகல் கணக்கும் தீர்த்து எனைக் கலந்த நல் நட்பே |
1191 | சவலை நெஞ்சகத்தின் தளர்ச்சியும் அச்சமும் கவலையும் தவிர்த்து எனைக் கலந்த நல் நட்பே |
1193 | களைப்பு அறிந்து எடுத்துக் கலக்கம் தவிர்த்து எனக்கு இளைப்பு அறிந்து உதவிய என் உயிர் உறவே |
1195 | தன்னைத் தழுவுறு தரம் சிறிது அறியா என்னைத் தழுவிய என் உயிர் உறவே |
1197 | மனக்குறை நீக்கி நல்வாழ்வு அளித்து என்றும் எனக்கு உறவாகிய என் உயிர் உறவே |
1199 | துன்னும் அனாதியே சூழ்ந்து எனைப் பிரியாது என் உறவு ஆகிய என் உயிர் உறவே |
1201 | என்றும் ஓர் நிலையாய் என்றும் ஓர் இயலாய் என்றும் உள்ளதுவாம் என் தனிச் சத்தே |
1203 | அனைத்து உலக வைகளும் ஆங்காங்கு உணரினும் இனைத்து என அறியா என் தனிச் சத்தே |
1205 | பொது மறை முடிகளும் புகல் அவை முடிகளும் இது எனற்கு அரிதாம் என் தனிச் சத்தே |
1207 | ஆகம முடிகளும் அவை புகல் முடிகளும் ஏகுதற்கு அரிதாம் என் தனிச் சத்தே |
1209 | சத்தியம் சத்தியம் சத்தியம் எனவே இத்தகை வழுத்தும் என் தனிச் சத்தே |
1211 | துரியமும் கடந்தது ஓர் பெரிய வான் பொருள் என உரைசெய் வேதங்கள் உன்னும் மெய்ச் சத்தே |
1213 | அன்று, அதன் அப்பால், அதன் பரத்ததுதான் என்றிட நிறைந்த என் தனிச் சத்தே |
1215 | என்றும் உள்ளதுவாய் எங்கும் ஓர் நிறைவாய் என்றும் விளங்கிடும் என் தனிச் சித்தே |
1217 | சத்திகள் பலவாய்ச் சத்தர்கள் பலவாய் இத்தகை விளங்கும் என் தனிச் சித்தே |
1219 | தத்துவம் பலவாய்த் தத்துவி பலவாய் இத்தகை விளங்கும் என் தனிச் சித்தே |
1221 | படிநிலை பலவாய்ப் பதநிலை பலவாய் இடிவு அற விளங்கிடும் என் தனிச் சித்தே |
1223 | மூர்த்தர்கள் பலவாய் மூர்த்திகள் பலவாய் ஏற்பட விளக்கிடும் என் தனிச் சித்தே |
1225 | உயிர்வகை பலவாய் உடல்வகை பலவாய் இயல் உற விளக்கிடும் என் தனிச் சித்தே |
1227 | அறிவு அவை பலவாய் அறிவன பலவாய் எறிவு அற விளக்கிடும் என் தனிச் சித்தே |
1229 | நினைவு அவை பலவாய் நினைவன பலவாய் இனைவு அற விளக்கிடும் என் தனிச் சித்தே |
1231 | காட்சிகள் பலவாய் காண்பன பலவாய் ஏட்சியின் விளக்கிடும் என் தனிச் சித்தே |
1233 | செய்வினை பலவாய்ச் செய்வன பலவாய் எய்வு அற விளக்கிடும் என் தனிச் சித்தே |
1235 | அண்ட சராசரம் அனைத்தையும் பிறவையும் எண்தர விளக்கும் என் தனிச் சித்தே |
1237 | எல்லாம் வல்ல சித்து என மறை புகன்றிட எல்லாம் விளக்கிடும் என் தனிச் சித்தே |
1239 | ஒன்று அதில் ஒன்று என்று உரைக்கவும் படாதாய் என்றும் ஓர் படித்தாம் என் தனி இன்பே |
1241 | இதுஅது என்னா இயல் உடை அதுவாய் எதிர் அற நிறைந்த என் தனி இன்பே |
1243 | ஆக்கு உறும் அவத்தைகள் அனைத்தையும் கடந்து, மேல் ஏக்கு அற நிறைந்த, என் தனி இன்பே |
1245 | அறிவுக்கு அறிவினில் அதுஅது அதுவாய் எறிவு அற்று ஓங்கிய என் தனி இன்பே |
1247 | விடயம் எவற்றிலும் மேன்மேல் விளைந்து அவை இடைஇடை ஓங்கிய என் தனி இன்பே |
1249 | இம்மையும் மறுமையும் இயம்பிடும் ஒருமையும் எம்மையும் நிரம்பிடும் என் தனி இன்பே |
1251 | முத்தர்கள் சித்தர்கள் சத்திகள் சத்தர்கள் எத் திறத்தவர்க்கும் ஆம் என் தனி இன்பே |
1253 | எல்லா நிலைகளின் எல்லா உயிர் உறும் எல்லா இன்பும் ஆம் என் தனி இன்பே |
1255 | கரும்ப உறு சாறும், கனிந்த முக்கனியின் விரும்புறும் இரதமும், மிக்க தீம் பாலும், |
1257 | குணங்கொள் கோல்தேனும், கூட்டி ஒன்றாக்கி, மணங்கொளப் பதம்செய் வகைஉற இயற்றிய |
1259 | உணவு எனப் பல்கால் உரைக்கினும் நிகரா வணம் உறும் இன்ப மயமே அதுவாய்க் |
1261 | கலந்து, அறிவு உருவாய்க், கருதுதற்கு அரிதாய், நலம்தரும் விளக்கமும், நவில் அரும் தண்மையும், |
1263 | உள்ளதாய், என்றும் உள்ளதாய், என் உள் உள்ளதாய், என்றன் உயிர் உளம் உடம்புடன் |
1265 | எல்லாம் இனிப்ப, இயல் உறுசுவை அளித்து, எல்லாம் வல்ல சித்து இயற்கையது ஆகிச், |
1267 | சாகா வரமும், தனித்த பேர் அறிவும், மா காதலின் சிவ வல்லப சத்தியும் |
1269 | செயற்கு அரும் அனந்த சித்தியும், இன்பமும், மயக்கு அறத் தரும் திறல் வண்மையது ஆகித் |
1271 | பூரண வடிவாய்ப் பொங்கி மேல் ததும்பி ஆரண முடியுடன், ஆகம முடியும், |
1273 | கடந்து, எனது அறிவாம் கன(ல்) மேல் சபைநடு நடம் திகழ்கின்ற மெய்ஞ்ஞான ஆரமுதே |
1275 | சத்திய அமுதே தனித் திரு அமுதே நித்திய அமுதே நிறை சிவ அமுதே |
1277 | சச்சிதானந்தத் தனிமுதல் அமுதே மெய்ச் சிதாகாச விளைவு அருள் அமுதே |
1279 | ஆனந்த அமுதே அருள் ஒளி அமுதே தான் அந்தம் இல்லாத் தத்துவ அமுதே |
1281 | நவநிலை தரும் ஓர் நல்ல தெள் அமுதே சிவநிலை தனிலே திரண்ட உள் அமுதே |
1283 | பொய்படாக் கருணைப் புண்ணிய அமுதே கைபடாப் பெருஞ்சீர்க் கடவுள் வான் அமுதே |
1285 | அகம் புறம் அகப்புறம் ஆகிய புறப்புறம் உகந்த நான்கு இடத்தும் ஓங்கிய அமுதே |
1287 | பனிமுதல் நீக்கிய பரம்பர அமுதே தனிமுதல் ஆய சிதம்பர அமுதே |
1289 | உலகு எலாம் கொள்ளினும் உலப்பிலா அமுதே அலகு இலாப் பெருந்திறல் அற்புத அமுதே |
1291 | அண்டமும், அதன் மேல் அண்டமும், அவற்று உள பண்டமும் காட்டிய பரம்பர மணியே |
1293 | பிண்டமும், அதில் உறு பிண்டமும், அவற்று உள பண்டமும் காட்டிய பராபர மணியே |
1295 | நினைத்தவை நினைத்தவை நினைத்தாங்கு எய்துற அனைத்தையும் தரும் ஓர் அரும்பெறல் மணியே |
1297 | விண்பதம் அனைத்தும் மேல்பதம் முழுவதும் கண்பெற நடத்தும் ககன மா மணியே |
1299 | பார்பதம் அனைத்தும் பகர் அடி முழுவதும் சார்பு உற நடத்தும் சரஒளி மணியே |
1301 | அண்ட கோடிகள் எலாம் அரைக்கணத்து ஏகிக் கண்டுகொண்டிட ஒளிர் கலைநிறை மணியே |
1303 | சர அசர உயிர்தொறும் சாற்றிய பொருள்தொறும் விராவி உள் விளங்கும் வித்தக மணியே |
1305 | மூவரும் முனிவரும் முத்தரும் சித்தரும் தேவரும் மதிக்கும் சித்தி செய் மணியே |
1307 | தாழ்வு எலாம் தவிர்த்து சகம் மிசை அழியா வாழ்வு எனக்கு அளித்த வளர் ஒளி மணியே |
1309 | நவமணி முதலிய நலம் எலாம் தரும் ஒரு சிவமணி எனும் அருட் செல்வ மா மணியே |
1311 | வான் பெறற்கு அரிய வகை எலாம் விரைந்து நான் பெற அளித்த நாத மந்திரமே |
1313 | கற்பம் பலபல கழியினும் அழியாப் பொற்பு உற அளித்த புனித மந்திரமே |
1315 | அகரமும் உகரமும் அழியாச் சிகரமும் வகரமும் ஆகிய வாய்மை மந்திரமே |
1317 | ஐந்து என, எட்டு என, ஆறு என, நான்கு என முந்து உறு மறை முறை மொழியும் மந்திரமே |
1319 | வேதமும் ஆகம விரிவுகள் அனைத்தும் ஓத நின்று உலவாது ஓங்கு மந்திரமே |
1321 | உடற்பிணி அனைத்தையும் உயிர்ப்பிணி அனைத்தையும் அடர்ப்பு அறத் தவிர்த்த அருட்சிவ மருந்தே |
1323 | சித்திக்கு மூலம் ஆம் சிவமருந்து என உளம் தித்திக்கும் ஞானத் திரு அருள் மருந்தே |
1325 | இறந்தவர் எல்லாம் எழுந்திடப் புரியும் சிறந்த வல்லபம் உறு திரு அருள் மருந்தே |
1327 | மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு கரணப் பெரும்திறல் காட்டிய மருந்தே |
1329 | நரை திரை மூப்பு அவை நண்ணா வகை தரும் உரை தரு பெரும் சீர் உடைய நல் மருந்தே |
1331 | என்றே என்னினும் இளமையோடு இருக்க நன்றே தரும் ஒரு ஞான மா மருந்தே |
1333 | மலப்பிணி தவிர்த்து, அருள்வலம் தருகின்றது ஓர் நலத்தகை அது என நாட்டிய மருந்தே |
1335 | சிற்சபை நடுவே திருநடம் புரியும் அற்புத மருந்து எனும் ஆனந்த மருந்தே |
1337 | இடை உறப் படாத இயற்கை விளக்கமாய்த் தடை ஒன்றும் இல்லாத் தகவு உடை அதுவாய் |
1339 | மாற்று இவை என்ன மதித்து அளப்ப அரிதாய் ஊற்றமும் வண்ணமும் ஒருங்கு உடை அதுவாய்க் |
1341 | காட்சிக்கு இனிய நற்கலைஉடை அதுவாய் ஆட்சிக்கு உரிய பன்மாட்சியும் உடைத்தாய் |
1343 | கைதவர் கனவினும் காண்டற்கு அரிதாய்ச் செய்தவப் பயன் ஆம் திருவருள் வலத்தால் |
1345 | உளம் பெறும் இடம் எலாம் உதவுக எனவே வளம் பட வாய்த்து மன்னிய பொன்னே |
1347 | புடம் படாத் தரமும் விடம் படாத் திறமும் வடம் படா நலமும் வாய்த்த செம் பொன்னே |
1349 | மும்மையும் தரும் ஒரு செம்மையை உடைத்தாய் இம்மையே கிடைத்து இங்கு இலங்கிய பொன்னே |
1351 | எடுத்து எடுத்து உதவினும் என்றும் குறையாது அடுத்து அடுத்து ஓங்கும் மெய் அருளுடைப் பொன்னே |
1353 | தளர்ந்திடேல், எடுக்கின் வளர்ந்திடுவேம் எனக் கிளர்ந்திட உரைத்துக் கிடைத்த செம் பொன்னே |
1355 | எண்ணிய தோறும் இயற்றுக என்று எனை அண்ணி என் கரத்தில் அமர்ந்த பைம் பொன்னே |
1357 | நீ கேள் மறக்கினும் நின்னை யாம் விட்டுப் போகேம் என எனைப் பொருந்திய பொன்னே |
1359 | எண்ணிய எண்ணியாங்கு எய்திட எனக்குப் பண்ணிய தவத்தால் பழுத்த செம் பொன்னே |
1361 | விண் இயல் தலைவரும் வியந்திட எனக்குப் புண்ணியப் பயனால் பூத்த செம் பொன்னே |
1363 | நால்வகை நெறியினும் நாட்டுக எனவே பால்வகை முழுதும் பணித்த பைம் பொன்னே |
1365 | எழுவகை நெறியினும் இயற்றுக எனவே முழுவகை காட்டி முயங்கிய பொன்னே |
1367 | எண்ணியபடி எலாம் இயற்றுக என்று எனைப் புண்ணிய பலத்தால் பொருந்திய நிதியே |
1369 | ஊழிதோறு ஊழி உலப்பு உறாது ஓங்கி வாழி என்று எனக்கு வாய்த்த நல் நிதியே |
1371 | இதம் உற ஊழிதோறும் எடுத்து எடுத்து உலகோர்க்கு உதவினும் உலவாது ஓங்கு நல் நிதியே |
1373 | இருநிதி, எழுநிதி, இயல் நவநிதி முதல் திருநிதி எல்லாம் தரும் ஒரு நிதியே |
1375 | எவ்வகை நிதிகளும் இந்த மா நிதியிடை அவ்வகை கிடைக்கும் என்று அருளிய நிதியே |
1377 | அற்புதம் விளங்கும் அருட்பெரு நிதியே கற்பனை கடந்த கருணை மா நிதியே |
1379 | நற்குண நிதியே சற்குண நிதியே நிற்குண நிதியே சிற்குண நிதியே |
1381 | பளகு இலாது ஓங்கும் பளிக்கு மா மலையே வளம் எலா நிறைந்த மாணிக்க மலையே |
1383 | மதிஉற விளங்கும் மரகத மலையே வதிதரு பேரொளி வச்சிர மலையே |
1385 | உரை மனம் கடந்தஆங்கு ஓங்கு பொன் மலையே துரிய மேல் வெளியில் ஜோதி மா மலையே |
1387 | புற்புதம், திரை, நுரை, புரை முதல் இலது ஓர் அற்புதக் கடலே அமுதத் தண் கடலே |
1389 | இருட் கலை தவிர்த்து ஒளி எல்லாம் வழங்கிய அருட்பெருங் கடலே ஆனந்தக் கடலே |
1391 | பவக் கடல் கடந்து நான் பார்த்தபோது அருகே உவப்பு உறு வளம் கொண்டு ஓங்கிய கரையே |
1393 | என் துயர்ச் சோடைகள் எல்லாம் தவிர்த்து, உளம் நன்று உற விளங்கிய, நந்தனக் காவே |
1395 | சேற்று நீர் இன்றி, நல் தீஞ்சுவை தரும் ஓர் ஊற்றுநீர் நிரம்ப உடைய பூந்தடமே |
1397 | கோடைவாய் விரிந்த குளிர்தரு நிழலே மேடைவாய் வீசிய மெல்லிய காற்றே |
1399 | களைப்பு அறக் கிடைத்த கருணை நல் நீரே இளைப்பு அற வாய்த்த இன்சுவை உணவே |
1401 | தென்னைவாய்க் கிடைத்த செவ் இள நீரே தென்னை வான் பலத்தின் திருகு தீம் பாலே |
1403 | நீர்நசை தவிர்க்கும் நெல்லிஅம் கனியே வேர்விளை பலவின் மென்சுவைச் சுளையே |
1405 | கட்டுமாம் பழமே, கதலிவான் பழமே, இட்ட நல்சுவை செய் இலந்தைஅம் கனியே! |
1407 | புனித வான் தருவில் புதுமையாம் பலமே கனிஎலாம் கூட்டிக் கலந்த தீஞ் சுவையே |
1409 | இதம் தரு கரும்பில் எடுத்த தீஞ்சாறே பதம் தரு வெல்லப் பாகின் இன் சுவையே |
1411 | சாலவே இனிக்கும் சர்க்கரைத் திரளே, ஏலவே நாவுக்கு இனிய கற்கண்டே, |
1413 | உலப்பு உறாது இனிக்கும் உயர் மலைத் தேனே, கலப்பு உறா மதுரம் கனிந்த கோல் தேனே, |
1415 | நவை இலாது எனக்கு நண்ணிய நறவே, சுவை எலாம் திரட்டிய தூய தீம் பதமே, |
1417 | பதம் பெறக் காய்ச்சிய பசு நறும் பாலே, இதம் பெற உருக்கிய இளம் பசு நெய்யே, |
1419 | உலர்ந்திடாது என்றும் ஒருபடித் தாகி மலர்ந்து நல்வண்ணம் வயங்கிய மலரே |
1421 | இகம்தரு புவிமுதல் எவ்வுலகு உயிர்களும் உகந்திட மணக்கும் சுகந்தநன்மணமே |
1423 | யாழ் உறும் இசையே, இனிய இன் இசையே ஏழ் உறும் இசையே இயல் அருள் இசையே |
1425 | திவள் ஒளிப் பருவம் சேர்ந்த நல்லவளே அவளொடும் கூடி அடைந்த தோர் சுகமே |
1427 | நாத நல் வரைப்பில் நண்ணிய பாட்டே வேத கீதத்தில் விளை திருப்பாட்டே |
1429 | நன்மார்க்கர் நாவில் நவிற்றிய பாட்டே சன்மார்க்க சங்கம் தழுவிய பாட்டே |
1431 | நம்புறும் ஆகமம் நவிற்றிய பாட்டே எம் பலமாகிய அம்பலப் பாட்டே |
1433 | என் மனக் கண்ணே, என் அருட் கண்ணே, என் இரு கண்ணே, என் கணுள் மணியே |
1435 | என் பெரும் களிப்பே, என் பெரும் பொருளே, என் பெரும் திறலே, என் பெரும் செயலே |
1437 | என் பெரும் தவமே, என் பெரும் பலனே, என் பெரும் சுகமே, என் பெரும் பேறே |
1439 | என் பெரு வாழ்வே, என்தன் வாழ் முதலே, என் பெரு வழக்கே, என் பெரும் கணக்கே |
1441 | என் பெரு நலமே, என் பெரும் குலமே, என் பெரு வலமே, என் பெரும் புலமே |
1443 | என் பெரு வரமே, என் பெரும் தரமே, என் பெரு நெறியே, என் பெரு நிலையே |
1445 | என் பெருங் குணமே, என் பெருங் கருத்தே, என் பெரும் தயவே, என் பெரும் கதியே |
1447 | என் பெரும் பதியே, என் உயிர் இயலே, என் பெரு நிறைவே, என் தனி அறிவே |
1449 | தோல் எலாம் குழைந்திட, சூழ்நரம்பு அனைத்தும் மேல் எலாம் கட்டுஅவை விட்டு விட்டி இயங்கிட |
1451 | என்பு எலாம் நெக்குநெக்கு இயல் இடை நெகிழ்ந்திட, மென்பு உடைத் தசை எலாம் மெய் உறத் தளர்ந்திட |
1453 | இரத்தம் அனைத்தும் உள் இறுகிடச் சுக்கிலம் உரத்திடை பந்தித்து ஒரு திரள் ஆயிட |
1455 | மடல் எலாம் மூளை மலர்ந்திட, அமுதம் உடல் எலாம் ஊற்றெடுத்து ஓடி நிரம்பிட |
1457 | ஒள்நுதல் வியர்த்திட, ஒளிமுகம் மலர்ந்திட தண்ணிய உயிர்ப்பினில் சாந்தம் ததும்பிட |
1459 | உள்நகை தோற்றிட உரோமம் பொடித்திடக் கண்ணில் நீர் பெருகிக் கால்வழிந்து ஓடிட |
1461 | வாய் துடித்து அலறிட வளர்செவித் துணைகளில் கூய் இசைப் பொறிஎலாம் கும் எனக் கொட்டிட |
1463 | மெய் எலாம் குளிர்ந்திட மென்மார்பு அசைந்திடக் கை எலாம் குவிந்திடக் கால் எலாம் சுலவிட |
1465 | மனம் கனிந்து உருகிட, மதி நிறைந்து ஒளிர்ந்திட, இனம் பெறு சித்தம் இயைந்து களித்திட |
1467 | அகங்காரம் ஆங்காங்கு அதிகரிப்பு அமைந்திடச் சகம் காண உள்ளம் தழைத்து மலர்ந்திட |
1469 | அறிவுரு அனைத்தும் ஆனந்தம் ஆயிட, பொறிஉறும் ஆன்ம தற்போதமும் போயிடத், |
1471 | தத்துவம் அனைத்தும் தாம் ஒருங்கு ஒழிந்திட, சத்துவம் ஒன்றே தனித்துநின்று ஓங்கிட |
1473 | உலகு எலாம் விடயம் உள எலாம் மறைந்திட, அலகு இலா அருளின் ஆசை மேல் பொங்கிட |
1475 | என் உளத்து எழுந்து, உயிர் எல்லாம் மலர்ந்திட, என் உளத்து ஓங்கிய, என்தனி அன்பே |
1477 | பொன் அடி கண்டு, அருள் புத்தமுது உணவே, என் உளத்து எழுந்த என்னுடை அன்பே |
1479 | தன்னையே எனக்குத் தந்து, அருள் ஒளியால் என்னை வேதித்த என் தனி அன்பே |
1481 | என் உளே அரும்பி, என் உளே மலர்ந்து, என் உளே விரிந்த, என் உடை அன்பே |
1483 | என் உளே விளங்கி, என் உளே பழுத்து, என் உளே கனிந்த, என்னுடை அன்பே |
1485 | தன் உளே நிறைவு உறு தரம் எலாம், அளித்தே என் உளே நிறைந்த, என் தனி அன்பே |
1487 | துன்பு உள அனைத்தும் தொலைத்து, எனது உருவை இன்பு உரு ஆக்கிய என்னுடை அன்பே |
1489 | பொன் உடம்பு எனக்குப் பொருந்திடும் பொருட்டுஆய் என் உளம் கலந்த என் தனி அன்பே |
1491 | தன்வசம் ஆகித் ததும்பி மேல் பொங்கி என்வசம் கடந்த என்னுடை அன்பே |
1493 | தன் உளே பொங்கிய தண் அமுது உணவே என் உளே பொங்கிய என் தனி அன்பே |
1495 | அருள் ஒளி விளங்கிட, ஆணவம் எனும் ஓர் இருள் அற, என் உளத்து ஏற்றிய விளக்கே |
1497 | துன்பு உறு தத்துவத் துரிசு எலாம் நீக்கி நல் இன்பு உற என் உளத்து ஏற்றிய விளக்கே |
1499 | மயல் அற, அழியா வாழ்வு மேன் மேலும் இயல் உற, என் உளத்து ஏற்றிய விளக்கே |
1501 | இடுவெளி அனைத்தும் இயல் ஒளி விளங்கிட நடுவெளி நடுவே நாட்டிய விளக்கே |
1503 | கருவெளி அனைத்தும் கதிர் ஒளி விளங்கிட உருவெளி நடுவே ஒளிர்தரு விளக்கே |
1505 | தேற்றிய வேதத் திருமுடி விளங்கிட ஏற்றிய ஞான இயல் ஒளி விளக்கே |
1507 | ஆகம முடிமேல் அருள் ஒளி விளங்கிட வேகமது அறவே விளங்கு ஒளி விளக்கே |
1509 | ஆரியர் வழுத்திய அருள் நிலை அனாதி காரியம் விளக்கும் ஓர் காரண விளக்கே |
1511 | தண்ணிய அமுதே தந்து, எனது உளத்தே புண்ணியம் பலித்த பூரண மதியே |
1513 | உய்தர அமுதம் உதவி, என் உளத்தே செய்தவம் பலித்த திருவளர் மதியே |
1515 | பதி எலாம் தழைக்கப் பதம் பெறும் அமுத நிதி எலாம் அளித்த நிறைதிரு மதியே |
1517 | பால் எனத் தண்கதிர் பரப்பி எஞ்ஞான்றும் மேல்வெளி விளங்க விளங்கிய மதியே |
1519 | உயங்கிய உள்ளமும் உயிரும் தழைத்திட வயங்கிய கருணை மழை பொழி மழையே |
1521 | என்னையும் பணிகொண்டு என்னுளே நிரம்ப மன்னிய கருணை மழை பொழி மழையே |
1523 | உளம்கொளும் எனக்கே உவகை மேற் பொங்கி வளம்கொளக் கருணை மழைபொழி மழையே |
1525 | நலம்தர உடல் உயிர் நல் அறிவு எனக்கே மலர்ந்திடக் கருணை மழைபொழி மழையே |
1527 | தூய்மை யால் எனது துரிசு எலாம் நீக்கி நல் வாய்மையால் கருணை மழைபொழி மழையே |
1529 | வெம் மல இரவு அது விடி தருணம் தனில் செம்மையில் உதித்து உளம் திகழ்ந்த செஞ்சுடரே |
1531 | திரை எலாம் தவிர்த்துச் செவ்வியுற்று ஆங்கே வரை எலாம் விளங்க வயங்கு செஞ்சுடரே |
1533 | அலகு இலாத் தலைவர்கள் அரசு செய் தத்துவ உலகு எலாம் விளங்க ஓங்கு செஞ்சுடரே |
1535 | முன் உறு மலஇருள் முழுவதும் நீக்கியே என் உள வரைமேல் எழுந்த செஞ்சுடரே |
1537 | ஆதியும் நடு உடன் அந்தமும் கடந்த ஜோதியாய் என் உளம் சூழ்ந்த மெய்ச்சுடரே |
1539 | உள் ஒளி ஓங்கிட உயிர் ஒளி விளங்கிட வெள் ஒளி காட்டிய மெய் அருட் கனலே |
1541 | நலம் கொளப் புரிந்திடும் ஞான யாகத்திடை வலம் சுழித்து எழுந்து வளர்ந்த மெய்க் கனலே |
1543 | வேதமும் ஆகம விரிவும் பரம்பர நாதமும் கடந்த ஞான மெய்க் கனலே |
1545 | எண்ணிய எண்ணிய எல்லாம்தர எனுள் நண்ணிய புண்ணிய ஞான மெய்க் கனலே |
1547 | வலம் உறு சுத்த சன்மார்க்க நிலை பெறு நலம் எலாம் அளித்த ஞான மெய்க் கனலே |
1549 | இரவொடு பகல் இலா இயல்பொது நடம் இடு பரம வேதாந்தப் பரம்பரஞ் சுடரே |
1551 | வரம்நிறை பொது இடை வளர் திருநடம் புரி பரம சித்தாந்தப் பதி பரஞ்சுடரே |
1553 | சமரச சத்தியச் சபையில் நடம்புரி சமரச சத்தியத் தற்சுயஞ் சுடரே |
1555 | சபை எனது உளம் எனத் தான் அமர்ந்து எனக்கே அபயம் அளித்த தோர் அருட்பெருஞ்ஜோதி |
1557 | மருள் எலாம் தவிர்த்து வரம் எலாம் கொடுத்தே அருள் அமுது அருத்திய அருட்பெருஞ்ஜோதி |
1559 | வாழி நின் பேர் அருள் வாழி நின் பெரும்சீர் ஆழி ஒன்று அளித்த அருட்பெருஞ்ஜோதி |
1561 | என்னையும் பொருள் என எண்ணி, என் உளத்தே அன்னையும் அப்பனும் ஆகி வீற்றிருந்து, |
1563 | உலகு இயல் சிறிதும் உளம் பிடியா வகை, அலகு இல் பேர் அருளால் அறிவது விளக்கிச், |
1565 | சிறு நெறி செல்லாத் திறன் அளித்து, அழியாது உறும் நெறி உணர்ச்சி தந்து, ஒளி உறப் புரிந்து, |
1567 | சாகாக் கல்வியின் தரம் எலாம் உணர்த்திச், சாகா வரத்தையும் தந்து, மேன்மேலும் |
1569 | அன்பையும் விளைவித்து, அருட் பேர் ஒளியால் இன்பையும் நிறைவித்து, என்னையும் நின்னையும் |
1571 | ஓர் உரு ஆக்கி, யான் உன்னிய படி எலாம் சீர் உறச் செய்து, உயிர், திறம் பெற, அழியா |
1573 | அருள் அமுது அளித்தனை, அருள் நிலை ஏற்றினை, அருள் அறிவு அளித்தனை, அருட்பெருஞ்ஜோதி |
1575 | வெல்கநின் பேர் அருள், வெல்க நின் பெரும்சீர், அல்கல் இன்று ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி |
1577 | உலகு உயிர்த் திரள் எலாம் ஒளி நெறி பெற்றிட இலகும் ஐந் தொழிலையும் யான் செயத் தந்தனை |
1579 | போற்றி நின் பேர் அருள் போற்றி நின் பெரும் சீர் ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி |
1581 | மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும் யாவரும் பெற்றிடா இயல் எனக்கு அளித்தனை |
1583 | போற்றி நின் பேர் அருள் போற்றி நின் பெரும் சீர் ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி |
1585 | சித்திகள் அனைத்தையும் தெளிவித்து, எனக்கே சத்திய நிலைதனைத் தயவினில் தந்தனை, |
1587 | போற்றி நின் பேர் அருள் போற்றி நின் பெரும் சீர் ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி |
1589 | உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எலாம் விலக, நீ அடைந்து விலக்குக, மகிழ்க, |
1591 | சுத்த சன்மார்க்க சுகநிலை பெறுக, உத்தமன் ஆகுக! ஓங்குக! என்றனை |
1593 | போற்றி நின் பேர் அருள் போற்றி நின் பெரும் சீர் ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி |
1595 | அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி |